எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

புதன், 18 மார்ச், 2015

குபேரன் அருளைப் பெறுவோர் யார்


காளிதாசர் தனது உத்தர காலா மிர்தம் நான்காவது காண்டப் பாடலில் குபேரன் அருளைப் பெறுவோர் யார் என்று குறிப்பிட்டுள்ளார். ராஸ்யம் சோசுய பாஸ்ரராஜ்ய சுபபௌதீ வந்த்வஸ்தபா சார்தாயர்ட்ச பதீச ககவரா சைகத்ர வாந்யோந்ய பே இதன்படி, 

1. ஒரு கிரகம் ராசிக்கட்டத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் அதிபதியும் அதே கிரகம் சுவாம்சத்தில் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டு அதிபனும், லக்னாதிபதியும்.


2. 9,10-க்கு உரியவர்களும், 3,4,5,7-க்கு உரியவர்களும் 2,11-க்கு உரியவர்களும். ஆக இப்படியான நான்கு விதமான ஸ்தானாதிபதிகளின் அமைப்பு வகைகளுள் பரிவர்த்தனையோ, ஸ்தான அதிபதிகள் சேர்க்கையோ நட்டி, ஆட்சி, உச்ச வீட்டில் இருந்து பரஸ்பர பார்வையோ ஏற்பட்டால் அந்த ஜாதகர்களுக்கு குபேரன் யோகம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி புத்திர விருத்தி, அகலாத சொத்து ஆகியன உண்டாகும்.


கோடீஸ்வர யோகம்: இந்து லக்கினமானது அபகிரகங்களின் வீட்டில் அமைந்து அந்த வீட்டில் குரு, சுக்ரன் சேர்ந்திருப்பதோ, பூரண சந்திரன் சுக்ரச் சேர்க்கை, சுக்ரன் புதன் சேர்க்கை, பூரணச் சந்திரன் குரு சேர்க்கை, குரு புதன் சேர்க்கை ஆகி இருந்தால் ஒருவர் தன் ஜாதகப்படி கோடீஸ்வரர் ஆக குபேரன் அருளைப் பெற்றுத் திகழ்வார்.


பொதுவாக ஒருவர் ஜனன ஜாதகத்தில் இந்து லக்னத்தில் உச்சக் கிரகங்கள் இருந்தால் பல லட்சங்களுக்கு அதிபதியாகி குபேரயோகத்தைப் பெற்றிருப்பார். அடுத்ததாக, ஒரு ஜாதகரின் இந்து லக்னத்தில் அதிகமான சுபக் கிரகங்கள் இருந்தால் அவர் குபேரனது கடைக்கண் பார்வையைப் பெற்று மகா பிரபுவாக விளங்குவார். எல்லா கிரகங்களும் 1,2,4,5,7,8,10,11-ம் இடங்களில் மட்டும் இருந்து கிரக மாலிகா யோகம் அமைந்தால் அவர் கோடீஸ்வர மகா பிரபு ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக