எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 6 மார்ச், 2015

கையிலும் , இடுப்பிலும் கட்டிக்கொள்ளும் எந்திரம் என்பது பொய்யா ?

பொதுவாக இக்காலத்து வாலிபர்கள் எந்திரத்தை கையிலும் அல்லது இடுப்பிலும் கட்டிகொள்ளுவது ஒரு மூட நம்பிக்கையாக நினைத்துகொண்டு இருக்கிறர்கள் அது முற்றிலும் தவறான கருத்து

இதை பற்றிய எனக்கு சந்தேகம் எற்பட்ட போது முகநூலில் என்னுடைய நண்பர் ஒருவருவடன் வினவியபோது  அவர் அளித்த விளக்கம் இதோ

                        



எந்திரம் (அ) யந்திரம் ===================== எந்திரம் (அ) இயந்திரம் என்றால் இயங்குபவை அல்லது இயக்குபவை என்றே பொருள். ஒலி அலைகள் வெளிப்படுத்தும் சக்தியை சேமிக்கும் வித்தை முன்னோர்கள் அல்லது சித்தர்கள் அறிந்து வைத்துள்ளனர். ஆன்ம மற்றும் யோக சக்தி பெருகிய உடலில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் அல்லது மந்திர ஒலிகள், ஒரு வித அதிர்வலைகள் கொண்டது. மேற்கத்திய நாடுகளில் நிகழ்த்த ஒரு ஆராய்ச்சியில், ஒலி ஆலை மானி பயன்படுத்த பட்டது. அந்த மாணி ஒரு நீண்ட குழாய், அந்த குழாயின் ஒரு முனையில், ஒரு வார்த்தை உச்சரிக்க, அது மறுமுனையில் உள்ள காகிதத்தில் ஒரு படம் வரையும். அவ்வாறு ஓம் என்ற மந்திரம் உச்சரித்த போது, தற்போது பல அம்மன் சக்தி பீடங்களில் காணப்படும் ஸ்ரீசக்கரம் கொண்ட உருவம் உருவானது. இதில் இருந்து நாம் முன்னோர்கள் ஒளியில் இருந்து வெளிவரும் சக்திகளை ஸ்ரீ சாக்கிரத்தில் சேமித்தனர் என்பதை அறியலாம். இன்று கூட, திருவனைக்கோவில் உள்ள அகிலாண்டசுவரி அம்மன் காதனியில், ஸ்ரீ சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை வைத்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஸ்ரீ சங்கரர் சென்று வந்த அனைத்து கோவில்களிலும் ஸ்ரீ சக்கரம் இருப்பதை அறியலாம். காமாட்சி ஆமான், தாய் மூகாம்பிகை, திருவானை கோவில் அகிலாண்டசுவரி அம்மன் போன்ற அனைத்து சக்தி பீடத்திலும், தன் யோக சக்தியை ஸ்ரீ சக்கரத்தில் சேமித்து வைத்தார். அதனால் தான், அனைத்து சக்தி பீட்ங்களும் மேலும் சக்தி வைந்து விளங்குகிறது. இந்த நுட்பமே, எந்திரம் என்ற பெயரில் தற்போது கையாளப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் அதிபதிகளான தெய்வத்திற்கு பீஜா அட்சரா மந்திரம் என்று உண்டு. அந்த மந்திரம் கந்த சஷ்டி கவசத்தில் லாவகமாக கையால பட்டு இருப்பது எத்தனை பேருக்கு தெரியும். கந்த சஷ்டி கவசத்தில், உள்ள வரிகளான விரைந்து எனைக் காக்க வேலோன் வருக "ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும்" ஓம் ஐம் கிளீம் சௌம் என்ற மந்திரம் வருவதை கவனித்து உள்ளீர்களா ?? இது முருகனின் பீஜா அட்சரா மந்திரம். இவ்வாறு கந்த சஷ்டி கவசம் படிக்கும் போது, பீஜா அட்சரா மந்திரம் பக்தியுடம் பலமுறை சொல்லப்படுகிறது. கந்த சஷ்டி கவசத்தில் இந்த மந்திரம் சொல்லப்படும் முன் உள்ள வரிகளை பாருங்கள். "விரைந்து எனைக் காக்க வேலோன் வருக" இந்த மந்திரம் சொல்வதால், முருகன் அருள் சீக்கிரம் கிடைக்கும் என்பதே அதன் பொருள். அப்பொழுது செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் அவஸ்தைகள், முருகன் அருளால் களையப்படுகின்றன. இது போல எல்லா கிரக அதிபதிகளுக்கும் ஒரு பீஜா அட்சரா மந்திரம் உண்டு. அதனை யோக சக்தி மிக்க மனிதர்கள் பல நாள் உச்சாடனம் செய்து, செப்பு தகடில் சேமித்து, குறிப்பிட்ட கிரக அவஸ்தைகளுக்கு பயன்படுத்தினர். இதுவே எந்திரம். தற்காலத்தில் இது வியாபாரமாக்கப்பட்டதால், எந்திரங்கள் காட்சி பொருளாக உள்ளன என்பது வருத்தம் தரும் செய்தி. நன்றி, மணிகண்டன் பாரதிதாசன் B Tech., MBA கைபேசி - 9894201785

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக