சிவா ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். அவனிடம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் ஏழையாய் பிறந்து விட்டோம் என்று அவன் கவலைப்பட்டதே இல்லை, விடாமுயற்சியுடன் வேலைக்கு சென்று கொண்டே கல்லூரி படிப்பை தொடர்ந்தான். எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் காதலிக்கலாம். விதி சிவா-வையும் விடவில்லை.
அதே கல்லூரியில் படிக்கும் தீபிகாவை காதலித்தான். தீபிகா மிக பெரிய தொழிலதிபரின் மகள். தினமும் விலை உயர்ந்த காரில்தான் கல்லூரிக்கு வருவாள். ஆனால் சிவா அவளுடைய பணக்கார ஆடம்பரத்தை பார்த்து காதலிக்கவில்லை. காதலிக்க ஆரம்பித்து அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆராய்ந்த போதுதான் தீபிகா ஒரு பணக்கார தேவதை என்று தெரியும். அப்போது அவன் கால் சிறிது பின் வாங்கினாலும் அவனது காதல் பின் வாங்க விடவில்லை. சிவா ஏழையாய் பிறந்து இது வரை அவன் எடுத்த எல்லா முயற்சிகளிலும் வென்று இருக்கிறான். அந்த தைரியத்தோடு தீபிகா-விடம் தான் காதலை சொல்ல போகும் சந்தேகம் கலந்த சந்தோசத்தோடு உறங்க போனான் ஆனால் காதல் அவனை
உறங்க விடவில்லை.
உறங்க விடவில்லை.
அடுத்த நாள்,
தீபிகா-வின் வருகையை நோக்கி காத்துக் கொண்டிருந்தான். காரில் வந்து இறங்கிய தீபிகாவை கண்டதும் சிவா-வுக்கு கை, கால் நடுங்கியது. அழகான பூவை சுற்றி பட்டாம்பூச்சி இருப்பதை போல் தீபிகாவை சுற்றி அவளது தோழிகள். சிவா-வுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. வகுப்பறைக்கு போக இன்னும் 30 நிமிடங்கள் உள்ளன, சிவா கடிகாரத்தையும் தான் காதலியையும் மாறி மாறி பார்த்தான்.
இப்படியே 15 நிமிடங்கள் ஓடி விட்டது. சிவா-வுக்கு பதற்றத்தில் வியர்த்து நினைந்தே விட்டான். தீபிகாவை தான் காதலியாய் காட்டியதற்க்கு கடவுளுக்கு நன்றி சொல்வதா?… இல்லை, என் காதலை அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்க வைப்பதற்கு திட்டுவதா?… அவனுக்குள் புதியதாய் ஒரு குழப்பம். இன்னும் 10 நிமிடங்கள்………..தீபிகா…I Love You ….. தீபிகா…I Love You ….. தீபிகா… I Love You ….. என்று அவனுக்குள்ளே சொல்லிகொண்டான்.நேரம் ஆக ஆக அவளை சுற்றி இருந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது. சிவாவுக்கு கால் மெதுவாக நடக்க ஆரம்பித்தது. அவள் இருந்த இடத்தை இவன் நெருங்கி கொண்டே போனான்.
அவள் தூரத்தில் போய் கொண்டிருந்த அவளது தோழிக்கு கைகளால் bye சொல்லிவிட்டு தன் class – க்கு போக எழுந்து நடக்க ஆரம்பித்தவள் ” Excuse Me ” என்ற வார்த்தையை கேட்டு yes என்றவாறே திரும்பினாள். சிவா அவனுக்கு தெரிந்த அனைத்து வார்த்தைகளையும் முன்னுக்கு பின்னாக உளறி தள்ளினான். அதை கேட்டு அழகாக சிரித்தால் தீபிகா. இன்னும் 5 நிமிடமே இருப்பதால் தீபிகா ” எனக்கு நேரம் ஆகிவிட்டது, நீங்கள் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று நினைகிறீர்கள்!… நாம் மதியம் canteen -ல் சந்திக்கலாமே?!…” என்று புருவத்தை உயர்த்தி அழகாக சொல்லி விட்டு class – க்கு போய் விட்டாள்.
சிவாவுக்கு சொல்ல வந்ததை சொல்லவில்லையென்றாலும் பேசி விட்டோம் என்ற சந்தோசத்தில் அவனும் class – க்கு போய் விட்டான். ஆனால் அவன் கவனமெல்லாம் canteen மேலே இருந்தது. மனதுக்குள் ஆயிரமாயிரம் புது வகையான உணர்வுகள் ஓடி கொண்டு இருந்தன.
ஒரு வழியாக lunch time வந்தது. சிவா இந்த முறை சொதப்பாமல் சொல்லி விட வேண்டும் என்ற கனவுகளுடன் canteen -னை நோக்கி வேகமாக நடந்தான். கூட்டத்தில் அவன் கண்கள் தீபிகாவை தேடி மேய்ந்தன. எண்ண முடியாத நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் நிலவை போல, அந்த கூட்டத்தில் அவனின் தீபிகாவை கண்டுபிடித்தான். அவளை நோக்கி நடந்தவன் ஒரு கணம் நின்று யோசித்தான், அவளை சுற்றி அவளது தோழிகள்!…. எதையோ யோசித்து கொண்டே போனான் கை கழுவும் இடத்திற்க்கு!…
20 நிமிடங்கள் கடந்தன, தீபிகா சாப்பிட்டு விட்டு கை கழுவ இடத்தை நோக்கி வந்தவளுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. சிவாவை பார்த்த உடன் ” oh sorry ” நான் மறந்தே விட்டேன். had lunch ? என்று கேட்டாள். இல்லை உங்களுக்காக காத்திருந்தேன் என்றான். தீபிகாவுக்கு முகம் சற்று சுருங்கி விரிந்தது, ஆனால் பெரிது படுத்தவில்ல . சாப்பிடாமல் எனக்காக காத்திருந்து…… என்று இழுத்தாள்……. ok என்ன விஷயம் சொல்லுங்கள் என்றாள். சிவா தொண்டையை சரி செய்து கொண்டு பேச தயாரானான்.அது வந்து….. உம்ம்ம்ம்… உங்க பேர் என்ன?.. என்று பொய்யாக கேட்டான். அவளும் தீபிகா என்றாள். உடனே அவள், ” Your good name please !… ” என்றாள். இவனும் சந்தோசமாய் சிவா என்றான்.
சிவாவுக்கு நடப்பது நிஜமா?.. கனவா?.. என்று தெரியவில்லை. பிறகு படிப்பு, எந்த வருடம் இதையெல்லாம் கேட்டு விட்டு கொஞ்சம் தயங்கி எதையோ சொல்ல வந்து சொல்லாமல் நின்றான்.
உடனே தீபிகா hmmmm … எதையோ சொல்ல நினைகிறீங்க!.. சொல்லுங்க அதுக்குதானே இவ்ளோ நேரம் சாப்பிடமா wait பண்ணீங்க.. சிவாவுக்கு இந்த வார்த்தையை கேட்ட உடன் புத்துணுர்வு கிடைத்து. நான்…. உங்களை… உங்ங்…ங்…ங்..க….ளை…… ” I Love You “… என்று ஒரே மூச்சாய் சொல்லி முடித்தான். தீபிகாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் சிரிப்பதை பார்த்த சிவாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் சிரிப்பின் சத்தத்தை கேட்ட அனைவரும் இவர்களையே பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தில் சிவா வியர்வையில் நினைந்து விட்டான். அவளது தோழிகள் அவர்களிடம் வந்து ” What happened deepi ? any problem ?..” உடனே அவள் ” You know one thing he is in love with me” என்று சொல்லி விட்டு மீண்டும் சிரிக்க உடன் அவளது தோழிகளும் சிரித்தார்கள். அவனுக்கு அந்த இடத்தில் நிற்க மனமே இல்லை, இருந்தாலும் அவளிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லையே என்று காத்திருந்தான்.
கொஞ்ச நேரத்தில் சிரிப்பலைகள் அடங்கியது. தீபிகா அவனை அழைத்து கொண்டு bill கொடுக்கும் இடத்திற்கு போனாள். சிவாவுக்கு திக்..திக்..திக்.. என்றது. இப்போது அவள் பேச ஆரம்பித்தாள். ” நீ மதியம் இங்கே lunch க்கு எவ்ளோ செலவு செய்வாய்? ” என்று கேட்டாள். அவன் தாழ்ந்த குரலில் 30 ரூபாய் என்றான். அதற்கு அவள் ” அவ்ளோதானா?.. ஆனால் நான் 1500 வரை செலவு செய்வேன் ” என்றாள். அவளின் பணக்கார புத்தியை காதலில் கட்டியது அவன் கண்களை கலங்க வைத்தது. மீண்டும் அவள் பேச ஆரம்பித்தாள்.
” உனக்கும் எனக்கும் match ஆகாது. உனக்கு ஏத்த ஜோடியை பார்த்து திருமணம் செய்து கொள்.. தயவு செய்து இது மாதிரி பேசி என்னை கொல்லாதே!…” என்றாள். உன் status எங்கே?.. என் status எங்கே?.., இன்னும் பல வார்த்தைகளால் அவனை சுட்டு தாக்கி…. நடை பிணமாக ஆக்கி விட்டாள்.
இவர்களுக்குள் நடந்ததை அங்கு இருந்த அனைவரும் பார்க்க நேர்ந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக தோற்கிறான். கண்களில் கண்ணீர் குளம். அப்படியே நடந்து போனவன் கண்ணீரோடு திரும்பி பார்த்தான் அவளை… ஆனால் அவள் வழக்கம் போல் சிரித்து கொண்டு பேசி கொண்டிருந்தாள். அன்று முதல் அவன் அந்த canteen க்கு போவதே கிடையாது. ஏதோ ஒன்று அவன் இழந்தது போல் கவலைப்பட்டான். அப்படியே அவனுடைய கல்லூரி வாழ்க்கை ஓடியது.
10 வருடங்கள் பாய்ந்தோடின…….
ஒருநாள் சென்னையில் உள்ள ” express avenue “-ல் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இந்த முறை அவளுக்கு காண்பது கனவா?.. நிஜமா?.. என்று தெரியவில்லை?.. அவள் பேச ஆரம்பித்தாள். ” நீயா?.. எப்படி இருக்க?…. “ என்றாள். அவனுக்கு பேச முடிந்தும் அழுகைதான் முன் வந்தது, இருந்தாலும் control செய்து கொண்டு hmmmm ….. நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க -னு கேட்டான்.
அவள் “ oh !… I am fine …Now I’m married. Do you know how much is my husband’s salary?.. Rs. 2 lac per month!…” அவரும் அழகாக இருப்பார் என்றாள். இந்த வார்த்தைகளை கேட்கும் போது அவன் கண்களில் கண்ணீர் கசிந்தே விட்டது.
சிறிது நேரத்தில் அவளின் கணவர் அங்கு வந்தான். அவள் இவர்தான் எனது கணவர் என்று சிவாவிடம் அறிமுகப்படுத்த ” hai ..” சொல்ல சிவாவை பார்த்த அவளது கணவனுக்கு கண்களில் பூரிப்பு. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் சிவாவின் கைகளை குலுக்கி கொண்டு ” sir நீங்களா?… ஐயோ என்னால் நம்ப முடியவில்லை.. ” என்று சொல்லி விட்டு அவன் மனைவியின் பக்கம் திரும்பி ” தீபிகா, நான் இவரோட Chennai branch -ல தான் work பண்றேன்.” என்றான். அவளுக்கு முகம் தொங்கி விட்டது. அவன் உடனே சிவாவை நோக்கி ” Sir நான் உங்களை பற்றி நிறைய விஷயம் கேள்வி பட்டிருக்கேன்…. உங்களை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன்…. உங்களை மாதிரி நான் இல்லையே என்று வருத்தப்பட்டும் இருக்கிறேன். ” என்றான்.
சிவாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே சிவா ” Sorry brother நீங்க சொல்றது எனக்கு புரியல… your good name please ?…” என்றதும் தீபிகாவுக்கு ஏதோ கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. பிறகு, அவளது கணவன் “ I am Ashok …sir .. நான் உங்கள நெனச்சி பெருமை படுற விஷயம்… நீங்க college days -ல ஒரு பொண்ண love பண்ணீங்க.. ஆனால் அந்த பொண்ணு உங்கள rejectபண்ணிட்டாங்க… இருந்தாலும் இன்று வரை அந்த பொண்ண நெனச்சி கல்யாணம் பண்ணிக்கமா இருக்கீங்களே!… Really very very great sir ….” என்று சொல்லிவிட்டு தன் மனைவியின் பக்கம் திரும்பியவன்..,
தீபிகா ” இந்த காலத்துல இப்படி ஒரு true love பாக்கிறது….. ச்சா.. chance less … How much lucky the girl was. Isn’t it? ” என்று சொல்லி அவன் கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கொண்டான்…… தீபிகா வாழ்க்கையில் இன்று கண்டிப்பாக ஒரு பாடம் கற்று இருப்பாள்.. சிவா அசோக்-கிற்க்கு கை குடுத்து, தன் முன்னால் காதலியை கை எடுத்து கும்பிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அழுது கொண்டே நகர்ந்தான்..
நீதி: வாழ்க்கை ஒன்றும் சிறிது அல்ல. நேரம் எப்ப வேண்டுமானாலும் மாறலாம். அதனால் உங்கள பத்தி அதிகமா பெருமை பட்டுகவும் வேண்டாம். மத்தவங்கள ரொம்ப கேவல படுத்தவும் வேண்டாம். தயவு செய்து அடுத்தவங்க காதலை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக