எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 19 மே, 2018

திடீர் பண வரவு யாருக்கு?


பணம் என்பது நம் வாழ்வின் அத்வாசியமான ஒன்றுதான் ஆனால் அதற்க்காக பணமே வாழ்க்கை கிடையாது.நாம் சில நேரங்களில் பணம் இல்லாமல் தடுமாறும் நேரத்தில் நாமே எதிர்பார்க்காமல் பெரிய பணம் நம் கையில் வரும்.

நீண்ட நாட்களாக வராமல் இருந்த நம்முடைய பணமாக இருக்கலாம் அல்லது நம் நண்பர்க:ள் திடிரென்று உதவி செய்வார்கள் அல்லது லாட்டரி,புதையல் கூட கிடைக்கலாம் அதற்கு நம் ஜாதகம் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என பார்ப்போமா?

அஸ்வினி அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரம் ஒன்றின் 4-ம் பாதத்தில் செவ்வாய் நிற்க வேண்டும். லக்னம் அல்லது 10-ல் சூரியன் நிற்க வேண்டும். பிறகு செவ்வாயையும் சூரியனையும் சுபரான குரு சந்திரன் பார்த்தால் இந்த அமைப்பு உண்டாகும்.

தனலாப ஸ்தானத்திற்கு   3, 5-ம் இடங்களில் கிரகங்கள் நிற்கக்கூடாது. இந்த அமைப்பு உள்ள ஜாதகர்கள் பல கோடிகளின் அதிபர்களாவர். கடக லக்னத்திற்கு அனுஷம் 4ம் பாதத்தில் செவ்வாய் நிற்க, 10ல் சூரியன் உச்சமாகி சந்திரன் 4-ல் நின்று சூரியனைப் பார்க்க 9-ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க குபேர யோகம் உண்டாகும்.

கும்ப லக்னத்திற்கு அனுஷம் 4-ல் செவ்வாய் நின்று உச்ச சந்திரனால் பார்வையாகி, லக்ன சூரியன் சிம்ம குருவால் பார்வை பெற மிகப்பெரிய குபேர யோகம் வந்து கோடிகளில் புரள்வார்கள். குபேர யோகம் பெற முடியாத ஒரு சில கிரகங்களே மாற்ற மடைந்திருக்கும் ஜாதகர்கள் அதற்கான கிரக யோக வழிபாட்டை கண்டுபிடித்து செய்வதால் நிறைவான யோகம் பெற்று வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக