எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 18 மே, 2018

ஆதார்

நாம் எப்போதும் அரசு மற்றும்  , அதிகாரிகளை அவர்களது மெத்தனம் மற்றும் தொம்மைத்தனத்தை கிண்டல் அடிப்போம் .

ஆதார் கார்ட் ஆப்ப்பில் share ekyc என்ற ஆப்ஷன் வந்து இருக்கிறது. அதில் இன்னும் சில பக்ஸ் இருக்கிறதுதான், ஆனால் இந்த ஆப்ஷனை வங்கிகள் இன்ன பிற தனியார் நிறுவனங்கள் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை.

ஆதார் கார்டை நான் கூட என்னமோ நினைத்தேன். உலக அளவிலேயே இது ஒரு பெரிய புரட்சியை உண்டாக்கப் போகிறது. பல விஷயங்களை எளிமையாக்குகிறது. இந்த கம்ஃபர்ட்டை அனுபவிப்பதால் , என் டேட்டாவை எவனாச்சும் எடுத்துட்டுப் போகட்டும் , அதுல என்னா மயிறு இருக்கு என்றுதான் தோன்றுகிறது. (எனக்கு ). எதிர் காலத்தில் பல விஷயங்களை எளிமையாக்கும், வலிமையாக்கும். பேப்பர்லெஸ் ஆக்கும்.

இப்போதே நூற்றுக்கணக்கான தொலைந்து போன குழந்தைகளை மீட்டெடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்க உதவி இருக்கிறது ஆதார்.
88 சதவீத இந்தியர்கள் ஆதாரை எடுத்து விட்டனர். முக்கியமாக ஆதாரை எதிர்க்கும் அனைவரும் ஆதார் எடுத்து விட்டதாக , அவர்களின்  ஆதார் நம்பரோடு ஆதார் போர்ட்டலில் அறிவித்து இருக்கிறார்கள்.

இதில் தவறு செய்யாமல் இருந்தால், மிக அற்புதமான சிஸ்டம். உலக அளவில் நாம் தான் இதை முதலில் செய்து இருக்கிறோம் என்பதில் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

இந்த திட்டத்தை துவக்கிய காங்கிரஸ் , அதை விடாப்பிடியாக செயல்படுத்திய பாஜக , கோர்ட் மறுக்க மறுக்க ஆதார் கார்ட் கேட்ட மாநில அரசுகள் , வங்கிகள் , மற்றும் ஜியோ
வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக