தேவையான பொருட்கள்:
வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு - 2 அல்லது 3
சமையல் எண்ணெய் - பொறித்தெடுக்கத் தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை- 1 கைப்பிடி
சமையல் எண்ணெய் - பொறித்தெடுக்கத் தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை- 1 கைப்பிடி
செய்முறை:
கடையில் நல்ல மொந்தன் வாழைக்காயாகப் பார்த்து வாங்கி நங்கு கழுவி விட்டு முதலில் நுனியையும் காம்பையும் வெட்டிப் பின் தோல் நீக்கவும்.
அடுத்து நல்ல கனமான இரும்புக் கடாயில் தேவையான அளவு சமையல் எண்ணெய் விட்டு அது பொரிப்பதற்குத் தோதாகச் சூடானதும் தோல் நீக்கிய வாழைக்காயை கட்டரில் இட்டு ஸ்லைஸ் செய்து அதை எண்ணெயில் போடவும். கடாயில் பொரிக்கும் போது ஸ்டவ்வில் தீயை ஹை ஃபிளேமில் வைத்துப் பொறுமையாகப் பொரித்தெடுக்க வேண்டும்.
அப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் கோடன் ப்ரெளன் நிற சிப்ஸ்கள் கிடைக்கும். மறந்தீர்களானால் சிப்ஸ் கருகிப் போய் மொத்த வேலையையும் கெடுத்த விடும். அதே சமயம் சிம்மில் வைத்தும் பொரிக்கக் கூடாது.
அப்படிப் பொரித்தால் சிப்ஸ் மொறு மொறுப்பு இல்லாமல் வதக் , வதக்கென அமைந்து சீக்கிரமே நமுத்துப் போகும். எனவே சிப்ஸ் போடும் போது இந்த டிப்ஸ்களை கவனமாகக் கையாள வேண்டும்.
சிப்ஸ்களை வடிகரண்டியில் எண்ணெயை வடித்தெடுத்து ஒரு வாயகன்ற அகலமான சில்வர் அல்லது மண் பாத்திரத்தில் போடவும்.
சிப்ஸ்களை வடிகரண்டியில் எண்ணெயை வடித்தெடுத்து ஒரு வாயகன்ற அகலமான சில்வர் அல்லது மண் பாத்திரத்தில் போடவும்.
சூடு குறையுமுன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு குலுக்கி விட்டு ஒரு டப்பர் வேர் ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது சாப்பிடலாம்.
தயிர்ச்சாதத்துக்கு சிப்ஸ் நன்றாக இருந்தாலும் பொதுவாக புளியோதரை, தக்காளிச் சாதம். தேங்காய்ச் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம், நெய் விட்ட பருப்புச் சாதம் என அனைத்து விதமான கலந்த சாதங்களுக்கும் வீட்டிலேயே சொந்தமாக நாம் தயரித்த இந்த சிப்ஸ்கள் மிக அருமையான காம்பினேஷனாக இருக்கும்.
குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்தனுப்ப ஸ்னாக்ஸ் வகையறாக்களாக கடைகளில் பாக்கெட் செய்து வைத்திருக்கும் கண்ட, கண்ட சிப்ஸ்களைப் பயன்படுத்துவதை விட இப்படி நமக்கு நாமே திட்டம் போல நம் சொந்தக் கைகளால் படு சுத்தமாகவும், ஆரோக்யமாகவும் வீட்டிலேயே வாழைக்காய் அல்லது உருளை சிப்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.
ஒருமுறை இப்படிச் செய்து பழகி விட்டோம் என்று வையுங்கள். பிறகு கடைகளில் வாங்கத் தோன்றாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக