If you eat fried meat, high blood pressure will occur
If you eat fried meat, high blood pressure will occur
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு டி.எச்.சான் பொது நல பள்ளியின் நிபுணர்கள் வறுத்த இறைச்சியை சாப்பிடும் நபர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த கல்லூரியில் படிக்கும் 86 ஆயிரம் பெண்களிடமும், சுகாதாரத்துறை படிப்பு மேற்கொண்ட 17,104 ஆண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முதல்கட்டமாக அவர்களின் சாப்பாடு மற்றும் சமையல் முறைகள்
குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
அதில் ஆய்வில் பங்கேற்பதற்கு முன்பு இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்று நோய் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆய்வு முடிந்த பின்னர் அதில் பங்கேற்றவர்களில் கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிட்ட 37,123 பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க இதய கழகத்தின் கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அசைவ உணவுகள் சமைக்கும் போது அதில் உள்ள புரதம் அதிகமான வெப்பநிலைக்கு உட்படுத்தப்படுவதால் HAAs எனும் வேதிப்பொருள் உருவாகிறது. இந்த வேதிப்பொருள் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு, மற்றவர்களைவிட17% உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவை ரத்தக் குழாய்களின் உள் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி, ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு இருதய நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் என்றும் ஹார்வார்டு பல்கலைக்கழைக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக