எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 29 மார்ச், 2018

காஃபிக்கு என்ன சர்க்கரை பயன்படுத்துகிறீர்கள்?!

Which sugar you are using for coffee


ப்பெல்லாம் WhatsApp ல் பகிரப்படுகிற தகவலை வைத்து ஊரெல்லாம் செய்கிற அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதைத்தான் சாப்பிடுவது என்றே தெரியவில்லை. எதைச் சாப்பிட்டாலும் அதில் 100 பிரச்சனைகளை அடுக்குகிறார்கள்.
எங்க ஊரில் (கோபி) தற்போது அஸ்கா (வெள்ளை) சர்க்கரை சாப்பிடுவதில்லை என்று ஆரம்பித்து இருக்கிறார்கள். 
உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது, வீட்டில் “இருங் காபி கொண்டு வரேனுங்” என்றால், “ஏனுங் அஸ்கா போடாதீங், கருப்பு சர்க்கரைலையே போடுங்” ன்னு சொல்றாங்களாம் 🙂 . சிலர் பனை வெல்லமும் பயன்படுத்துகிறார்கள்.
அந்த அளவுக்கு ஊரு பக்கம் அஸ்கா என்றால், சிலர் தெறித்து ஓடுகிறார்கள். அஸ்கா சர்க்கரை உடலுக்குக் கெடுதல் என்று கூறியதால், பலரும் தவிர்க்கிறார்கள்.
கருப்பு வண்ணத்தில் உள்ள சர்க்கரை தான் பல வித வேதியல் மாற்றங்களுக்குப் பிறகு வெள்ளையாகி வருகிறது. இது குறித்து எனக்கும் விமர்சனம் உண்டு.
எங்க வீட்டில் மனைவி சமீபமாக அஸ்கா பயன்படுத்தாமல், காஃபி, பூஸ்ட் போன்றவற்றுக்குக் கருப்பு சர்க்கரை தான் அவ்வப்போது பயன்படுத்துகிறார்.
சுவையில் மாற்றமுள்ளது ஆனால், மோசமில்லை அதே சமயம் எனக்குத் திருப்தியுமில்லை.
Refined Oil
அடுத்தது இந்த Refined Oil . இதுவும் சர்க்கரை போலவே தான். அதாவது, Refined Oil பல வித வேதியல் மாற்றங்களுக்குப் பிறகு நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயாக மாறி வருகிறது.
இதைக் கேட்டதில் இருந்து சாப்பிடவே ஒரு மாதிரி ஆகி விட்டது. நண்பன், தான் செக்கு (கடலை) எண்ணெய் பயன்படுத்துவதாகவும், அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றான்.
விலை கொஞ்சம் கூடுதல், சரி! பயன்படுத்திப் பார்க்கலாம் என்று ஒரு வருடம் முன்பு முயற்சித்தேன், சுவையில் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை.
எனவே, இன்று வரை எங்கள் வீட்டில் Refined Oil பயன்படுத்தாமல் செக்கு எண்ணெயே பயன்படுத்தி வருகிறோம்.
நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு இது போல அனுபவங்கள் உள்ளதா?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக