எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 26 மார்ச், 2018

இட்லி மாவு வாங்கப் போறீங்களா; இதை கொஞ்சம் கவனியுங்களேன்!



When buying idli dough, you can find things to watch here

இட்லி மாவு வாங்கும் போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே காணலாம்.

தென்னிந்தியாவின் பிரபல உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடம்பெற்றவை. வீடுகளில் அரைத்து சமைக்கப்பட்ட இட்லி மாவு, கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

முறையான அங்கீகாரம் பெற்ற மாவு பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட இடம் போன்ற விவரங்கள் இடம்பெற்றி
ருக்கும்.

ஆனால் அங்கீகாரம் பெறாத பாக்கெட்களில் தகவல்கள் இருக்காது. இது ஆபத்தானவை என்று அறிவுறுத்தப்படுகிறது. மாவு தயாரிக்க அரிசி, உளுந்து, கிரைண்டர், தண்ணீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும்.

முறைகேடான வகையில் தயாரிக்கப்படும் மாவில், ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், பென்சாயில் கலக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.


தரம் குறைந்த மூலப் பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் மாவால், வயிற்று வலி, செரிமான கோளாறு, வயிற்று எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற நீரால் தொற்று நோய்கள் உண்டாகும்.

மாவை புளிக்க வைக்க, செயற்கையாக ஈஸ்ட் பயன்படுத்தினால், உணவு விஷமாக மாறிவிடும். தரம் குறைந்த அரிசியை பயன்படுத்தினால், கல்லீரல் பாதிக்கப்படும்.

எனவே இட்லி மாவு வாங்கும் போது, தரமானதாக இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக