எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

புதன், 28 மார்ச், 2018

மண்பானை தண்ணீர்

குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும். ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையானது. அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

மண்பானை தண்ணீர் தாகத்தைத் தணிப்பது போன்று, குளிர் சாதனப்பெட்டி தண்ணீர் தணிக்காது. இது எல்லாருக்கும் தெரியும், தெரிந்தும் பெரும்பாலானோர் மண்பானையை உபயோகிப்பதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக