எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 26 மார்ச், 2018

அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு தான் உடலுறவில் சுகம் கிடைக்குமாம்!

Women who have more time sleeping will get better sex

அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு தான் உடலுறவில் சுகம் கிடைக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தூக்கம் அவசியம். ஒருவரது வாழ்வில் தூக்கம் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு, இதய நோய், எடையில் ஏற்றத்தாழ்வு, மூளையில் பாதிப்பு போன்றவை
ஏற்படும் வாய்ப்புள்ளது. மனதை ஒருநிலைப் படுத்தினால் தூக்கம் தானாக வரும். தூக்கத்திற்கும், மன அமைதிக்கும் நிறையவே தொடர்பு உள்ளது. தூக்கம் குறைந்தால், உடம்பும், மனதும் நோய்களின் வாசலாக மாறும்.





ஒரு நாளைக்கு 5 மணிநேரம் தூங்கும் பெண்களை விட அதற்கு அதிகமான நேரம் தூங்கும் பெண்கள் தான் உடலுறவின் போது சுகம் காணுகின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், வயதானவர்களுக்கு தூக்கப் பிரச்சனை இருக்கும் என்றாலும், அவர்களுக்கு உடலுறவில் ஏற்படும் திருப்தி, தூங்கும் நேரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.

இது தொடர்பாக, அமெரிக்காவின் மெனோபஸ் சொஸைட்டி நடத்திய ஆய்வில் பெரும்பாலான பெண்கள் நன்றாக தூங்கினால் அவர்களால், நீண்ட நேரம் உடலுறவு வைத்துக் கொள்ளவும் முடியும், திருப்தி அடையவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்களுக்கு அவ்வாறு உடலுறவின் போது உச்சத்தை எட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஒரு நாளைக்கு 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு உறவை தூண்டும் ஹார்மோனின் அளவு பத்து சதவீதம் குறைகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக