எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 29 மார்ச், 2018

நீங்களும் பெறலாம் ட்விட்டர் “Blue Tick”

Every one get Blue tick in Twitter


ட்விட்ட ரில் “Blue Tick” எனப்படும் “Verified Account” ஒரு கவுரவ விசயமாகப் பார்க்கப்படுகிறது. Blue Tick இருந்தால், ஒரு கெத்து என்பதாகக் கருதப்படுகிறது.
இந்த Blue Tick வசதி பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் போன்றோருக்கு வழங்கப்படுகிறது. இதில் பல விமர்சனங்களும் உள்ளது.
பிரபலங்கள் என்பதற்கு என்ன அளவுகோல்? எதை வைத்து இது கொடுக்கப்படுகிறது என்பதற்கு ட்விட்டராலே சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை.
எனவே, இதை ட்விட்டர் பயன்படுத்தும் அனைவருக்குமானதாக மாற்றப்போகிறது.
நீங்களும் பெறலாம் ட்விட்டர் Blue Tick
பிரபலம் என்றில்லை சரியான தொடர்பு தகவல்கள் வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் இந்த வசதியை கொடுக்கப்போவதாக CEO Jack Dorsey கூறியுள்ளார்.
உதாரணத்துக்கு ஒரு இணையத்தளம் இருக்கிறது என்றால் அதனுடைய அதிகாரப்பூர்வ தொடர்பு மின்னஞ்சல் முகவரி வைத்துக் கொடுக்கப்படலாம்.
எடுத்துக்காட்டாக contact@manaseyrelax.com என்ற மின்னஞ்சல் முகவரி. இதை நான் மட்டுமே கொடுக்க முடியும், Verify செய்ய முடியும்.
இது உதாரணம் தான் இது போலச் சில கட்டுப்பாடுகள் மூலம் அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
ட்விட்டர் தற்போது Verification முறையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, விரைவில் அனைவருக்கும் கொடுக்கப்போகிறது.
அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், என்னுடைய தள ட்விட்டர் கணக்கை நிச்சயம் முயற்சித்துப் பார்ப்பேன் ஆனால், மொத்தமே 1780 பின் தொடர்பவர்கள் தான் இருக்கிறார்கள் 😀 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக