எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 25 மார்ச், 2018

எந்த நிறச் சட்டைக்கு எந்த நிற பேன்ட் பெஸ்ட்?

கிர்ர்ருனு அலாரம் அடிச்சதும் சர்ர்ருனு கிளம்பி ஆபீஸ்/கல்லூரி வாசல்ல போய் நிற்கும் இளைஞர்கள் வாழும் காலம் இது. அதுக்கு முன்னாடி குளிக்கிறது, சாப்பிடுறது, வண்டி துடைக்கிறது, வண்டி இல்லாதவங்க பாஸ் வாங்குறது, அப்போன்னு பார்த்து பணம் இல்லாம அவசர அவசரமா ATM முன்னாடி போய் நிற்கிறதுன்னு ஏகப்பட்ட வேலைகள் காலையிலேயே வெயிட்டிங்ல இருக்கும். அதுலயும் டிப்-டாப்பா டிரஸ் பண்றதுக்கு நம்ம பசங்க மிஸ் பண்ணவே மாட்டாங்க. இதுக்குக் காரணம், ஒண்ணு... ஆபீஸ் ரூல்ஸ். இன்னொண்ணு, பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டணும். இப்பெல்லாம் பொண்ணுங்களைவிட பசங்கதான் டிரெஸ்ஸை செலெக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கிறாங்க. அப்படி இருந்தும் சிலரோட தேர்வு தோல்வியிலதான் முடியுது. இதற்குக் காரணங்கள் பல. எந்த நிறச் சட்டைக்கு எந்த நிற பேன்ட் மேட்ச் என்பது முதல், உங்கள் நிறத்துக்கேற்ப சரியான ஷர்ட் மற்றும் பேன்ட்டை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது வரை ஒரு குயிக் அப்டேட்...
 
நிறங்களை, பொதுவாக டார்க், லைட், பிரைட் என வகைப்படுத்தலாம். லைட் வண்ண சட்டையுடன் டார்க் வண்ண பேன்ட்டையும், டார்க் வண்ண சட்டையுடன் லைட் வண்ண பேன்ட்டையும் மேட்ச் செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பேட்டர்ன், துணிவகை போன்று வேறு சில எலிமென்ட்களையும் சேர்த்துப் பின்பற்றினால் மிடுக்கான தோற்றம் நிச்சயம் உங்களுடையதே!
அடிப்படையான சில மேட்சிங் நிறங்கள்:
வெள்ளை, ஸ்கை ப்ளூ, பீஜ் மற்றும் பேபி பிங்க் போன்ற லைட் வண்ணச் சட்டையுடன் சாக்லேட், நேவி மற்றும் பிரவுன் போன்ற டார்க் நிற பேன்ட்டை மேட்ச் செய்து உடுத்தலாம்.

மெரூன், ஊதா, டார்க் ப்ளூ மற்றும் கறுப்பு போன்ற டார்க் வண்ணச் சட்டையுடன் பீஜ், க்ரீம், காக்கி மற்றும் கிரே போன்ற லைட் வண்ண பேன்ட் அணிந்து வசீகரமான தோற்றத்தைப் பெறலாம்.

எந்த நிற பேன்ட்டுக்கு எந்த நிற ஷர்ட் மேட்ச்?

கடைகளில் கிடைக்கும் சில முக்கிய பேன்ட் நிறங்களுக்கு ஏற்ற ஷர்ட் நிறங்களின் பட்டியல் இங்கே...
கறுப்பு பேன்ட் - வெள்ளை, லைட் கிரே, மெரூன், சிவப்பு, நீலம், ஊதா, லைட் பிங்க், லைட் எல்லோ, லைட் ஆரஞ்சு மற்றும் டர்காய்ஸ் பச்சை.
காக்கி நிற பேன்ட் - கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்பு, பச்சை, மெரூன், ஊதா, நேவி ப்ளூ, பிங்க் மற்றும் டீல் (Teal).
 
நேவி ப்ளூ - கறுப்பு, வெள்ளை, சாம்பல், காக்கி, பிரவுன், சிவப்பு, மெரூன், பிங்க், பீச், ஊதா, ராயல் ப்ளூ, ஆக்வா, மெஜென்த்தா, லைட் கிரீன், மஞ்சள் மற்றும் ரஸ்ட்.
க்ரீம் நிற பேன்ட் - கறுப்பு, நேவி ப்ளூ, மெரூன், பிங்க் மற்றும் கடல் பச்சை.
கிரே பேன்ட் - கறுப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை, நீலம், ஊதா, லைட் பிங்க், ஆக்வா மற்றும் செர்ரி.
 
ஸ்கின்டோன்:
 
ஸ்கின்டோனுக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்தாலே, பாஸ் மார்க் வாங்கிடலாம். டார்க் மற்றும் லைட் ஷேடுகளில் உங்களுக்குப் பொருந்தும் நிறங்களைத் தேர்வுசெய்வதன் மூலம், மெருகேற்றிய தோற்றத்தை நொடியில் பெறலாம்.
வெளிர் ஸ்கின்டோனுக்கு ஏற்ற மேட்சிங் நிறங்கள்:
வெள்ளை மற்றும் லைட் ப்ளூ சட்டை - கறுப்பு மற்றும் நீல நிற பேன்ட்.
பிங்க் மற்றும் கறுப்புச் சட்டை - நீலம் மற்றும் கிரே நிற பேன்ட்.
சிவப்புச் சட்டை - பீஜ் மற்றும் நீல நிற பேன்ட்.
நிச்சயம் தவிர்க்க வேண்டிய நிறங்கள் - மஞ்சள், ஆரஞ்சு போன்ற பிரைட் ஷேடுகள்.
மாநிற ஸ்கின்டோனுக்கு ஏற்ற மேட்சிங் நிறங்கள்:
பீஜ் நிற சட்டை - பிரவுன் மற்றும் ப்ளூ பேன்ட்.
வெள்ளைச் சட்டை - கறுப்பு மற்றும் நீல நிற பேன்ட்.
பிரவுன் சட்டை - பீஜ் மற்றும் இளமஞ்சள் பேன்ட்.
கறுப்புச் சட்டை - நீலம் மற்றும் கிரே பேன்ட்.
நிச்சயம் தவிர்க்க வேண்டிய நிறங்கள் - எந்த நிறத்திலும் மிகவும் அடர்த்தியான அல்லது லைட்டான நிறங்கள்.
 
டார்க் ஸ்கின்டோனுக்கு ஏற்ற மேட்சிங் நிறங்கள்:
 
பீஜ் மற்றும் டார்க் கிரே சட்டை - கறுப்பு மற்றும் நீல நிற பேன்ட்.
நீல நிறச் சட்டை - நேவி, கிரே, பிரவுன் மற்றும் பீஜ் நிற பேன்ட்.
காக்கி நிறச் சட்டை - கறுப்பு மற்றும் பிரவுன் பேன்ட்.
பிரவுன் சட்டை - பீஜ் மற்றும் காக்கி பேன்ட் .
நிச்சயம் தவிர்க்க வேண்டிய நிறங்கள் - பிரைட் அல்லது அடர்த்தியான ஷேடுகள்.
சரியான துணிவகை:

சரியான நிறம்போல சரியான துணிவகையைத் தேர்ந்துடுப்பதும் அவசியம். லினன், கார்டராய், காட்டன், டெனிம் என ஏகப்பட்ட துணிவகைகள் உள்ளன. அதன் சரியான மேட்ச் லிஸ்ட் இங்கே...
லினன் சட்டை - டெனிம் அல்லது லினன் பேன்ட்.
கார்டராய் அல்லது Fleece சட்டை - டெனிம், காக்கி அல்லது லினன் பேன்ட்.
சில்க் அல்லது சிந்தடிக் சட்டை - லினன், டெனிம் அல்லது பாலிஸ்டர் பேன்ட்.
டெனிம் ஷர்ட், செக்டு அல்லது சாலிட் சட்டை - காக்கி அல்லது சீனோஸ் அணிந்து மிடுக்கான தோற்றத்தைப் பெறலாம்.
என்றும் இளமை:

பார்ட்டி, திருமண வரவேற்பு, அலுவலகம் என இடத்துக்கேற்ப உடைகளை உடுத்துவதும் முக்கியமான ஒன்று. விழாக்காலங்களில் உடை எடுக்கப் போனாலே அக்கபோருதான் என்று மனக்குரலிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கான டிப்ஸ்...
 
திருமண வரவேற்பு, ஈவ்னிங் பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்ற மேட்சிங் டிப்ஸ், கறுப்பு ஷர்ட் மற்றும் வெள்ளை பேன்ட் அல்லது நேவி ப்ளூ ஷர்ட் மற்றும் காக்கி பேன்ட்.
அலுவலகம் செல்பவர்களுக்கு, வெள்ளை ஷர்ட்டுடன் பீஜ், டார்க் கிரே அல்லது நீல நிற பேன்ட் பக்கா மேட்ச் அல்லது லைட் ப்ளூ ஷர்ட்டுடன் டார்க் கிரே பேன்ட் அணிந்து செல்லலாம்.
கல்லூரி செல்லும் ஆண்களுக்கு, என்றும் துணையாக இருப்பது ஜீன்ஸ். அதனுடன், பிரின்ட்டட் டீ-ஷர்ட் அல்லது ஷர்ட்டுடன் ஸ்னீக்கர்ஸ் ஷூ அணிந்தால் மிடுக்கான தோற்றத்தைப் பெறலாம்.
 
மேலும் சில டிட்-பிட்ஸ் :
பொதுவாக பிளைன் பேன்ட்டுக்கு செக்டு அல்லது striped ஷர்ட் உடுத்தலாம்.
செக்டு அல்லது striped பேன்ட்டுடன் சாலிட் அல்லது போல்கா டாட் பதித்த ஷர்ட்டை அணிந்து மேட்ச் செய்யலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக