Gobi, who shared things about Ajith
மெட்ராஸ்’, ‘பைரவா’, ‘கபாலி’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மைம் கோபி. தன்னுடைய தனித்துவமான நடிப்பால், பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இவர் நடிகர் அஜித்துடன் நடித்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி பல விஷயங்களை கேள்விப்பட்டும், தெரிந்தும் வைத்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் மாலைமலருக்கு அளித்த பேட்டியில், ‘வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரிய கூடாது என்று சொல்லுவார்கள். அதுபோலதான் அஜித். அவர் செய்யும் நல்ல விஷயங்கள் பல பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அஜித் மிகவும் சிறந்த மனிதர். அவரைப்போல் ஒருவரை பார்ப்பது அரிது. தமிழ் நாட்டில் மட்டுமில்லை. மலேசிய மக்களுக்கு அஜித் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அங்குள்ள மக்களே என்னிடம் சொன்னார்கள்.
சென்னை மழை வெள்ளத்தின் போது, திருமண மண்டபம், வீடு, முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களை மக்கள் தங்குவதற்கு இடம் கொடுத்தார். இதுகூட பல பேருக்கு தெரியாது. நான் இதுவரை அஜித்துடன் நடிக்க வில்லை. ஆனால், விரைவில் அவருடன் நடிப்பேன்’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக