Two new features in WatsApp; Who will get it?
கடந்த வாரம், வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பில், மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொபைல் நம்பர் சேன்ஜ் அம்சத்தினை உருட்டிய கையயோடு, இன்று ஐபோன்களுக்கான வாட்ஸ்ஆப் பதிப்பில், டூடே வியூ உட்பட சில புதிய அம்சங்களை உருட்டியுள்ளது
இப்போது ஐபோன்களுக்கான வாட்ஸ்ஆப் பதிப்பில், சமீபத்திய ஸ்டேட்டஸ்களை, ஐபோனின் டூடே வியூ-வில் வாட்ஸ்ஆப் விட்ஜிட்களாக காணலாம். தவிர வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெசேஜிலும் ஒரு மேம்பாடு நிகழ்த்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பில், மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொபைல் நம்பர் சேன்ஜ் அம்சத்தினை உருட்டிய கையயோடு, இன்று ஐபோன்களுக்கான வாட்ஸ்ஆப் பதிப்பில், டூடே வியூ உட்பட சில புதிய அம்சங்களை உருட்டியுள்ளது
இப்போது ஐபோன்களுக்கான வாட்ஸ்ஆப் பதிப்பில், சமீபத்திய ஸ்டேட்டஸ்களை, ஐபோனின் டூடே வியூ-வில் வாட்ஸ்ஆப் விட்ஜிட்களாக காணலாம். தவிர வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெசேஜிலும் ஒரு மேம்பாடு நிகழ்த்தப்பட்டுள்ளது.
தடையின்றி பிளே ஆகும்.!
அதாவது, இனி நீங்கள் வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெஸேஜை பிளே செய்து விட்டு, வாட்ஸ் ஆப்பை விட்டு வெளியேறினால் கூட, அல்லது வேறு ஆப்பிற்குள் நுழைந்தால் கூட குறிப்பிட்ட வாய்ஸ் மெஸேஜ், தடையின்றி பிளே ஆகும். இந்த இரண்டு புதிய அம்சங்களும், மேம்படுத்தப்பட்ட (வி2.18.40) வாட்ஸ்ஆப் பதிப்பில் அணுக கிடைக்கிறது. இந்த அப்டேட் ஆனது ஐஓஎஸ் 7.0 மற்றும்
அதற்கு பின்னர் இயங்கும் ஐபோன்களில் வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கதுமொத்தம் மூன்று விருப்பங்கள்.!
இதற்கு முன்னர், வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டாவில், மொபைல் நம்பர் சேன்ஜ் எனும் அம்சம் உருட்டப்பட்டதும், அது ஒரு பயனர் அவரின் வாட்ஸ்ஆப் மொபைல் நம்பரை மாற்றியதை மொத்தம் மூன்று வழிகளில் அவரின் நண்பர்களுக்கு தெரிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டின் சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ளது. அதில் மொத்தம் மூன்று விருப்பங்கள் உள்ளன. மொபைல் நம்பரை மாற்றியதை அனைத்து தொடர்புகளுக்கும் அறிவிக்க வேண்டும் அல்லது சாட்டில் உள்ள தொடர்புகளுக்கு மட்டும் அல்லது கஸ்டம்.
ஒரு பயனர் மொபைல் நம்பரை மாற்றும் போது.!
தற்போது வரையிலாக, அனைத்து தொடர்புகளுக்கும் அறிவிக்க வேண்டும் என்கிற விருப்பம் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு பயனர் மொபைல் நம்பரை மாற்றும் போது, அவரின் காண்டாக்ட்ஸில் உள்ள ஒவ்வொரு நம்பருக்கு அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ள அப்டேட்டின் படி, மேலே குறிப்பிட்டுள்ளபடி மொத்தம் மூன்று விருப்பங்களில் இந்த அறிவிப்பை நிகழ்த்தலாம்.
அறிவிக்க விரும்பினால் மட்டுமே.!
முதல் விருப்பமானது, வழக்கம்போல எல்லா தொடர்புகளுக்கும் அறிவிப்பை அனுப்பி வைக்கும். இரண்டாவது விருப்பமாநாடு நீங்கள் கடந்த காலத்தில் சாட் செய்த நம்பர்களுக்கு மட்டும் அறிவிப்பை அனுப்பி வைக்கும் மற்றும் கடைசி விருப்பமானது நீங்கள் உங்களின் மொபைல் நம்பர் மாற்றத்தை பற்றி அறிவிக்க விரும்பினால் மட்டுமே, அறிவிப்புகள் அனுப்பி வைக்கப்படும்.
மிக விரைவில் ஐஓஎஸ் ஆப்களில்.!
இந்த புதிய அம்சமானது, இப்போது, சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பான 2.18.97-ல் மட்டுமே கிடைக்கிறது. எனினும், வாட்ஸ்ஆப் நிறுவனம், இந்த அம்சத்தினை மிக விரைவில் ஐஓஎஸ் ஆப்களில் உருட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ-வின் படி, இந்த அம்சம் விண்டோஸ் மொபைல் பயனர்களுக்கும் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக