வெள்ளை கொண்டக்கடலை.   : 100 கிராம்.
வெங்காயம்.       : 2
தக்காளி.         : 2
பச்சை மிளகாய்.  :2
இஞ்சி பூண்டு விழுது.  : 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்.    : 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்.    : 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா.      : 1 டீஸ்பூன்
சீரகத்தூள்.       : 1 டீஸ்பூன்
தயிர்.       : 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை.   : சிறிது
புதினா.     : சிறிது
கஸூரி மேத்தி.   : சிறிது (தேவைப்பட்டால்)
செய்முறை.  :
1. வெள்ளைசுண்டலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
2.பிறகு குக்கரில் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
3. வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. அடிகனமான வானலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயவிழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பிறகு தக்காளி விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6.இஞ்சிபூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரைவதக்கவும்.
7. பின்னர் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. இந்த மசாலா கலவையில் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
9. வேகவைத்த சுண்டலில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும்
10. இப்போது மீதமுள்ள சுண்டலை மசாலாவில் கொட்டவும்.
11. தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
12. பத்து நிமிடத்திற்கு பிறகு அரைத்த சுண்டல் விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.
13. ஐந்துநிமிடத்திற்கு பிறகு சீரகத்தூள் மற்றும் கஸூரி மேத்தி சேர்த்து நன்றாக கலக்கவும்.
14. இறுதியில் கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலை போட்டு இறக்கவும்.
15. பூரி சப்பாத்தி மற்றும் புலாவ் உடன் பரிமாறவும்.
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
 
 
   
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக