எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 டிசம்பர், 2019

லைக்குகளை அள்ளுவது எப்படி?


செட்டிங்ஸை பப்ளிக்ல வைக்கவும்

ஒரே ஒரு கமெண்ட் வந்தாலும் தனி கமெண்டில் பதில் போடவும்.
(ரிப்ளை அல்ல)

பதிவுக்கு சம்மந்தமான ஆட்களை கமெண்டில் இழுக்கவும்.

உதாரணமாக
இட்லி காபி பதிவுக்கு என்னை.
நான் கொடுக்கற பதிலுக்கு வேறொரு ஆளை சாட்டி மறுபடியும் கமெண்டணும்.

யாரை கமெண்டில் டேக் செய்யலாம்?
உப்புமான்னா நாக்ஸை (நாகராஜ் நடராஜ்)மற்றும் இள சக்திவேல் இப்படி,
எதாச்சும் அதிபுத்திசாலியா பேசி செய்து பல்ப் வாங்கினால் 'மதுரம் பிரபாகரை'
அரசியல் நையாண்டி என்றால் ஸ்ரீதர் சுப்ரமணியம் (பிஜெபிக்கு எதிர்ப்பு காங்குரஸ்க்கு ஆதரவென்றால்), பிரகாஷ் ராமசாமி (பிஜெபிக்கு ஆதரவு காங்கிக்கு எதிர்ப்புன்னா),
நல்ல பெண்களின் போட்டோ மற்றும் மீம்ஸ் என்றால் ராம்ஜி அண்ணா மற்றும் டாக்டர் ராஜன் பி.என்}

பதிவில் யாரையும் டேக் செய்ய வேண்டாம்.
டேக் செய்யப்பட்டவர்களுக்கு தொந்தரவு என்பதோடு, ரீச் இருக்காது 
யூட்யூப் லின்க் ஆகியவற்றை பதிவில் போடாமல் கமெண்டில் போடவும். ஏனென்றால் அதே ரீச் இருக்காது என்பது தான்.
ஷேர் பட்டனை அழுத்தி ஷேர் செய்யாதீர்கள் (உங்களது மெம்ரியே ஆனாலும்)
காப்பி பேஸ்ட் செய்து பதிவரின் பெயரை போடவும்.

பதிவின் சாரம் பெருசென்றால் நேரிடையாகப் போடவும்.
சிறிதென்றால் 'லேசாக' சுற்றி வளைத்து போடவும்.
(உதாரணமாக என்னுடைய எலுமிச்சை ஊறுகாய்ப் பதிவை காணலாம்)

நல்ல பதிவுகள் என்றால் போகப் போக லைக்குகள் கூடும்.

நல்ல பதிவுகளுக்கு நல்ல கமெண்டுதான் பயிற்சி.
நாம் எங்கியாவது கமெண்டிற்கு அதிக லைக் வந்தால், நமது எழுதும் ஸ்டைல் எது என்று அறிய உதவும். மக்களின் ரசனையும் புரியும்.
இதெல்லாம் குறும்படம் போலத்தான்.
அதையே பட்டி டிங்கரிங் பார்த்து பதிவாக கன்வர்ட் பண்ணுவது நமது சாமர்த்தியம்.

இதைத்தவிர வேற ஏதாவது பதிவு, நமது பதிவின் சப்ஜெக்டில் இருந்தால்,
நமது பதிவின் லின்கை* காப்பி அடித்து அங்க போட்டு 'நானும் இந்த சப்ஜெக்டில் பதிவிட்டுள்ளேன்' என்று விளம்பரம் செய்யணும்.

அதைப் படிச்சுட்டு நம்ம பதிவுக்கு வர்ற ஆள் நமக்கு தோதான ஆளான்னு பாத்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுக்கணும்.

அடுத்தவர்கள் பதிவில் நல்ல கமெண்ட் பார்த்தால் லைக்கோ ஹாஹாவோ போட்டு கவனத்தை ஈர்க்கணும்.

கண்ணியமாக ஜொள்ளு விடுவதற்கு குச்சமே படப்படாது.
ஜொள்ளை ரசிக்காத பெண் எஃபியில் வேஸ்ட்.

நம்மளோட வயசென்ன, இந்த வயசுல நாம ஜொள்ளுவிடலாமா என்பதெல்லாம் அநாவசியமான சிந்தனைகள்.
ப்ளீஸ் நோட் 'கண்ணியம்'

நைஷ் டோளி - சாரி செம கலர் - கலர் உங்களுக்கு செமையா செட்டாகுது - உங்களுக்கு கல்யாணம் ஆயிடுத்தா - நல்ல ஹைட்டா இருப்பீங்க போல
- இதெல்லாம் கண்ணியமான ஜொள்ளு. (என்னளவில்)

'இதெல்லாம் உங்க வூட்டுக்காரர் பாப்பாரா?'
'இன்னும் கொஞ்சம் சாரியை கவர் பண்ணி போட்ருக்கலாம்'
'ஜாக்கேட் பார்டர் செம'
'மேக்கப் தூக்கலா இருக்கு'
'மேக்கப்புக்கே செமையா செலவு பண்ணுவீங்க போல'
- இதெல்லாம் அநாவசியமான அநாகரிமான கண்ணிய குறைவான கமெண்டுகள்
(சாம்பிள் தான்)

முக்கியமான ஒரு விஷயம்.
எல்லா கமெண்டுக்கும் எல்லாரும் ஒரே மாதிரி ரியாக்ட் செய்ய மாட்டார்கள்.
ஒரு தோழியின் போட்டோவிற்கு 'கவிதை போடவா?' என்று கேட்டு அசிங்கப்பட்டவன் நான்.

அதிக லைக்குகள் வாங்க ஆல் த பெஸ்ட்.

#எஃப்பி_சேவையில் உங்கள் அமுதானந்தா
ஹாபி சண்டே

(*நமது பதிவை ஓப்பன் செய்தால் மேலே மூன்று புள்ளிகள் தெரியும் அதை அழுத்தினால் வரும் ஆப்ஷனில் 'காப்பி லின்க்கை' அழுத்தினால் பதிவின் லின்க் காப்பி ஆகும்)

முக்கியாமன ஒரு ஐடியாவை கமெண்டில் தருகிறேன்.
(எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்தது)

[ இந்தப் பதிவிலேயே பல மேட்டர்கள் வைத்துள்ளேன் ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக