எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 டிசம்பர், 2019

கொங்கு கிராமியத்து பூண்டு ஊறுகாய்


இந்த ஊறுகாயை எனது தாத்தி அடிக்கடி செய்து வைத்து விடுவார்கள்.

இந்த ஊறுகாயை தயிர் சாதத்துடன் சாப்பிடுவதற்கு அமிர்தத்தை உண்பது போல் தோன்றும்.

தேவையான பொருட்கள்:

பூண்டு பற்கள் 250 கிராம்
புளி 100 கிராம்
மரசெக்கு நல்லெண்ணெய் 70 மில்லி
வரமிளகாய் தூள் 3 தேக்கரண்டி
உப்புதூள் தேவையான அளவு
பெருங்காயம் 1 சிட்டிகை
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
வெதுவெதுப்பான தண்ணீர் 1/2 கப்

செய்முறை:

1. ஒரு வடசட்டியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உரித்த பூண்டு பற்களை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

2. பூண்டு பற்களை நன்றாக ஆற வைக்க வேண்டும்.

3. இப்பொழுது வெதுவெதுப்பான தண்ணீரில் புளியை ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் ஊறிய பின்னர் அதை கரைத்து நல்ல கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது நன்றாக ஆறிய பூண்டு பற்களில் பாதியை எடுத்து நன்றாக விழுதாக நைசாக அரைத்து கொள்ளவும்.

5. இப்பொழுது வடச்சட்டியில் மீதமுள்ள மரசெக்கு நல்லெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும். அதில் பெருங்காயத்தை சேர்த்துகோங்க , பின்பு அதில் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் இருந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

7. அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதையும் , வறுத்து வைத்துள்ள பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் வரமிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.  இந்த கலவையை 15 நிமிடங்கள் வரை சிறுதீயில் கொதிக்க வைக்கவும்.

9. பிறகு அடுப்பை அணைத்து விட்டு பூண்டு ஊறுகாயை நன்றாக ஆற வைத்து. பின்பு அதை ஈரமில்லாத, காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக