எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 12 டிசம்பர், 2019

டிசம்பர் 31 வரை கெடு!வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ அதன் டெபிட் கார்டு பயனர்களை, வருகிற டிசம்பர் 31, 2019 க்குள் ஈ.எம்.வி-சிப் கார்டிற்கு (EMV-chip Card) மாறுமாறு கேட்டுக்கொள்கிறது.

ஒருவேளை நீங்கள் இந்த பரிந்துரைக்கு இணங்கவில்லை என்றால், எஸ்பிஐ வங்கி ஆனது அதன் அனைத்து மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை அட்டைகளையும் செயலிழக்கச் செய்யும், அதாவது டிஆக்டிவேட் செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏன் இந்த நடவடிக்கை? என்பது உட்பட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விடயங்கள் இதோ!

01. அனைத்து மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான காலக்கெடுவாக 2019 டிசம்பர் 31 ஐ எஸ்பிஐ நிர்ணயித்துள்ளது

02. இந்த நடவடிக்கையின் கீழ், எஸ்பிஐ கார்டுகளின் வேலிடிட்டி பீரியட் பொருட்படுத்தப்படாது. அதாவது எஸ்பிஐ கார்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடித்திருந்தாலும் கூட எஸ்பிஐ வங்கியானது மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகள் ஆனது டிஆக்டிவேட் செய்யும். இதன் பொருள் டிசம்பர் 31 க்கு அப்பால் காலாவதியாகும் அட்டைகள் கூட டிஆக்டிவேட் செய்யப்படும்.

03. மேக்னட் ஸ்ட்ரைப்ஸ் கார்டுகளின் வழியாக தொடர்ந்து நாடாகும் மோசடிகளைக் கருத்தில் கொண்டே அவைகள் டிஆக்டிவேட் செய்யப்படுகின்றன. ஈ.எம்.வி சிப் தொழில்நுட்பம் ஆனது டெபிட் கார்டு பேமண்ட்களுக்கான சமீபத்திய உலகளாவிய தரமாகும். இந்த தொழில்நுட்பத்தில் அட்டைதாரரின் தரவை சேமித்து பாதுகாக்கும் உட்பொதிக்கப்பட்ட நுண்செயலி சில்லுகள் உள்ளன. மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளமான ட்விட்டர் வழியாக, எஸ்பிஐ கூறுகையில், "உத்தரவாத நம்பகத்தன்மை, ஆன்லைன் பேமண்ட்களுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் மோசடிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்." என்று ஈ.எம்.வி சிப் தொழில்நுட்பத்தை பற்றி குறிப்பிட்டுள்ளது.

04. ஈ.எம்.வி சிப் இல்லாத மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகள் மட்டுமே டிஆக்டிவேட் செய்யப்படும். அதாவது மேக்னட் ஸ்ட்ரைப் மற்றும் ஈ.எம்.வி சிப் ஆகிய இரண்டையும் கொண்ட எஸ்பிஐ டெபிட் கார்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று அர்த்தம். சிப் இல்லாத பழைய மேக்ஸ்ட்ரைப் கார்டுகள் மட்டுமே டிஆக்டிவேட் செய்யப்படும்.

05. ஈ.எம்.வி சிப் கார்டை பெறாத எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை மாற்றுவதற்கு ஹோம் பிரான்ச்சை அணுக வேண்டும்

06. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான புதிய கார்டுக்கு எஸ்பிஐ இணைய வங்கி வழியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, “eServices” டேப்பின் கீழ் http://onlinesbi.com இல் உள்நுழையவும். பின்னர் “ஏடிஎம் கார்டு சேவைகள்” என்பதைக் கிளிக் செய்து, குறிப்பிட்ட பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

07. எஸ்பிஐ யோனோ ஆப் மூலமும் பயனர்கள் தங்களுக்கான புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

08. மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகளை மாற்றுவது முற்றிலும் இலவசமான ஒரு செயல்முறை ஆகும். அதாவது மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை ஈ.எம்.வி சிப் மற்றும் பின் அடிப்படையிலான கார்டுகளாக மாற்ற எந்த கட்டணமும் வசூலிக்கப்பட்ட மாட்டாது.

09. நாம் பேசும் ஈ.எம்.வி சிப் ஆனது டெபிட் கார்டின் முன் (மைய-இடது பக்கத்தில்) வைக்கப்பட்டுள்ளது. ஆக பயனர்கள் தங்கள் புதிய கார்டில் ஈ.எம்.வி சிப் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.


10. புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டு முகவரியை சரிபார்க்கச்சொல்லியும் எஸ்பிஐ பரிந்துரைக்கிறது. பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு மட்டுமே புதிய கார்டு அனுப்பப்படுவதால் வாடிக்கையாளர்களின் தற்போதைய வீடு முகவரி ஆனது வங்கி அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக