கனவில் ஒரு பெண் வந்தாள். டேய் நீ என்னை நிஜமாவே லவ் பண்றியா என்றாள்.
கனவாக இருந்தாலும் உஷாராக நீ ..
80 கிட்டா ?
90 கிட்டா ?
2கே கிட்டா ? என்றேன் .
என்னைப் பாத்தா உனக்கு எப்டி தெரியிது என்றாள் .
அவள் கேட்ட கேள்வியும் அவள் சொன்ன பதிலும் 80 90 2கே என எல்லா கிட்டுக்கும் பொதுவானதாக இருந்ததால் குழம்பிப்போனேன்.
அதெல்லாம் இல்ல , சொல்லு என்றேன்...
ஏன் அப்டி கேக்கற என்றாள்...
சரி கனவுப் பெண்தானே என்று ஓப்பனாக சொன்னேன்..
80 கிட் என்றால் - எத்தனை பேர் வந்தாலும் நீதாண்டி என் பொண்டாட்டி
90 கிட் என்றால் - நீதான் என் தேவதை , என் தாய் , உன் மடில படுத்துக்கட்டுமா ?
2கே கிட் என்றால் - இருடி இப்பதான் சாப்டு முடிச்சேன் ,வயிறு ஃபுல்லா இருக்கு , 10 மினிட்ஸ் ...
அவள் , கனவுன்னு ஓவரா பேசர இல்ல , நீ கண்ணு முழி அப்புறம் இருக்கு என்றாள்.
சரி முழிக்கிறதுக்குள்ள கிஸ் அடிச்சிக்கலாம் வா என்றேன்.
அவன் வந்துடட்டும் , அதான் சேஃப் என்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக