ஜனவரி 2019 ல், விஞ்ஞானிகள், சூழல் மற்றும் வன பாதுகாவலர்கள் கொண்ட
குழுவானது, 1981 முதல் உயிருடன் காணப்படவில்லை என்று அறியப்பட்ட வாலஸ்
பெரிய தேனீ இனத்தை (Wallace's giant bee) தேடி இந்தோனேசிய காடு வழியாக
பயணித்தனர். 1981 முதல் யாராலும் காணப்படவில்லை இந்த வகை தேனீ இனம். வாலஸ்
பெரிய தேனீ இனம் அழிந்துவிட்டது என நம்பப்பட்டு வந்தது. ஆனால் இல்லை.
இப்போது விஞ்ஞானிகள் ஒரு பெண் தேனீயை கண்டறிந்துள்ளனர்.
இந்த அரிய பூச்சி இப்போது இந்தோனேசியாவின் வடக்கு மாலுக் தீவுகளில்
விஞ்ஞானிகளால் முதல் முறையாக புகைப்படம் எடுத்ததுடன் உயிரோடு
படமாக்கப்பட்டது.வால்சஸ் மாபெரும் தேனீயின் மறுகண்டுபிடிப்பும் குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் குளோபல் வனவிலங்கு பாதுகாப்பு கழகத்தின் "லாஸ்ட் ஸ்பிசஸ்" திட்டத்திற்கான தேடலில் உள்ள 25 இனங்களில் வாலஸின் பெரிய தேனீயும் ஒன்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக