இண்டர்நெட் வேலை செய்கிறதா என்று பார்க்க கூகிள்.காம் போட்டு பார்ப்பவர்கள் தான் அதிகம். இணைய வேகம் மிகவும் குறைவாக இருக்கும் போது , கூகிளை விட ஃபேஸ்புக் நன்றாக வேலை செய்கிறது.
கூகிள் , பேஜ் நாட் ஃபவுண்ட் சொன்னாலும் , ஃபேஸ்புக் முக்கி முக்கி , உடை களைய மறுக்கும் பெண்ணை கெஞ்சி கூத்தாடி களைய வைப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக ஒருவழியாக காட்டி விடுகிறது ஃபேஸ்புக் பக்கத்தை.
ப்ரோட்டோக்கால் பற்றி எல்லாம் படித்து இருந்தாலும் ஒரு விஷயம் குழப்புகிறது.
வேகம் குறைவான இணையத்தில் முதலில் கூகிள்.காம் போட்டேன். வரவில்லை. மூன்று நான்கு முறை போட்டேன். வரவில்லை. பேஜ் நாட் ஃபவுண்ட்தான்.
ஃபேஸ்புக்.காம் போட்டேன். கவனிக்கவும் ,ஆப் இல்ல , க்ரோமில் போட்டேன். ஹெட்டரில் முதலில் காட்டி விட்டு தவ்வி தவ்வி ஒருவழியாக ஃபேஸ்புக் வந்து விட்டது.
இப்போது கூகிள் போட்டேன். அதுவும் ஃபேஸ்புக்கின் ஏதோ மேஜிக் ப்ரோட்டோக்காலை காப்பி அடித்து தவ்வ ஆரம்பித்தது...ஆனால் ஃபேஸ்புக்கை விட தாமதமாகத்தான் வந்தது. இதற்கே கூகிள் பக்கத்தில் பெரிதாக ஒன்றுமில்லை , ஆனால் ஃபேஸ்புக் அப்படி அல்ல !
நீங்கள் ஃபேஸ்புக்.காம் போட்டபோது இணைய வேகம் அதிகரித்து இருக்கும் என்று சொல்லாதீர்கள். பலமுறை பல்வேறு இடங்களில் முயன்று பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன்.
ஃபேஸ்புக் ஏதோ தில்லாலங்கடி செய்கிறது...அப்படி செய்கையில் கூகில் காப்பி அடித்து கற்றுக்கொண்டு முயன்று பார்க்கிறது.
நான் சொல்வது டெக்னிக்கலாக சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று தோன்றலாம்...ஆனால் அப்படி அல்ல !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக