எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 23 மார்ச், 2020

சொக்லேட் கேக்! (முட்டை, பால் தவிர்த்தது)



 தேவையான பொருட்கள்:

250 கிராம் மா
250 கிராம் சீனி (-/+)
3 மே.க கொக்கோ (-/+)
1/2 மே.க வனிலா (-/+)
1 தே.க பேக்கிங்சோடா
1/2 தே.க பேக்கிங்பவுடர்
1 சிட்டி உப்பு
200 மி.லீ தண்ணீர்
50 மி.லீ கோப்பி
100 மி.லீ எண்ணை
1/2 மே.க தேசிப்புளி / வினாகிரி

சொக்லேட் கிறீம்:
250 கிராம் ஐசிங்சுகர் (-/+)
3 மே.க கொக்கோ (-/+)
1/2 தே.க வனிலா (-/+)
2 மே.க கோப்பி
100 கிராம் பட்டர்

செய்முறை:

கேக்:
ஒரு பாத்திரத்தில் மா, சீனி, கொக்கோ , வனிலா, பேக்கிங்சோடா, பேக்கிங்பவுடர் மற்றும் உப்உ ஆகியவற்றை ஒன்றாக அரித்து வைக்கவும்.
தண்ணீர், கோப்பி, எண்ணை மற்றும் தேசிப்புளி / வினாகிரியை மாக்கலவையினுள் விட்டு, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
பேக்கிங் தட்டில் (22 x 22 செ.மீ ) அல்லது 26 செ.மீ வட்ட தட்டில் கேக் கலவையை விட்டு சம்பபடுத்தவும்.
கேக்கை 175˚C ல் அண்ணளவாக 35 - 40 வேக விடவும். கேக்கை பேக்கிங் தட்டஉடனேயே ஆற விடவும்.

சொக்லேட் கிறீம்:
ஒரு பாத்திரத்தில் சொக்லேட் கிறீமில் குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
உங்கள் விருப்பத்திற்கேற்ப கேக்கை அலங்கரிக்கவும்.

குறிப்பு:
கோப்பி சேர்க்காமல் செய்வதென்றால், மேலதிகமாக 50 மி.லீ தண்ணீர் சேர்க்கவும் ( 200 மி.லீ தண்ணீர்+
50 மி.லீ தண்ணீர் = 250 மி.லீ தண்ணீர்)
கேக்கை அலங்கரிக்கும் போது கேக்கின் அடியில் எல்லா பக்கமும் பேப்பர் வைத்து, பக்கங்கள் முழுவதும் ஐசிங் பூசி சமப்படுத்தி, அதன் பின் பேப்பர்அகற்றினால், கேக் தட்டில் ஐசிங் வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக