எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 21 மே, 2018

கலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..? – ஜோதிடம் சொல்வதென்ன..? -Adhithya Guruji

.
ஒருவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கவர்ச்சியாளராக இருப்பது வேறு. அனைத்து அதிகார அமைப்புகளும் அவரை வணங்கி சல்யூட் அடிக்கும் உச்ச பதவியில் இருப்பது என்பது வேறு. இரண்டிற்குமான கிரக அமைப்புகள் வேறு வேறானவை.



மிகப் பெரிய அதிகார பதவியை அடையப் போகிறவரின் ஜாதகத்தில் உன்னத ராஜயோக அமைப்புகள் இருக்கவேண்டும். அதோடு பதவி ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் பாவம் அவரது ஜாதகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் நாட்டிலோ, மாநிலத்திலோ உச்ச பதவியை அடைந்து, நீடித்தும் இருக்க முடியும்.

பலாக்கொட்டை பொரியல்


வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20
வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

கணபதி ஹோமம்-(தடைகள் நீங்க)

கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல்மனம்ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம்படிப்புஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.

கணபதி ஹோமத்தின் பெருமை: மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமைசதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம்தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமாநெல் பொரிதிரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். 

நெல் கலந்த அன்னம்நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்திராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். அருகம்புல் குபேர சம்பத்து தரும். மோதகம்

ஞாயிறு, 20 மே, 2018

வீட்டிலேயே மொறு மொறு சிப்ஸ் செய்யலாமா?



தேவையான பொருட்கள்:
வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு - 2 அல்லது 3
சமையல் எண்ணெய் - பொறித்தெடுக்கத் தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை- 1 கைப்பிடி

மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு



தேவையான பொருட்கள்:

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தேங்காய் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி வர மிளகாய் – 5
ஜாதிக்காய் – 1
கசகசா – 1/2 டீஸ்பூன்
மல்லி – 1/2 டீஸ்பூன்

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதயே பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

மா இலை ஏன் மத/சமயம் சம்பந்தமான நிகழ்வுகள்,கொண்டாட்டங்களுக்கு உபயோகிக்கிறோம் ?




இதற்க்கு முக்கிய காரணம் மா இலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு, மா இலைகள் மரத்தில் இருந்து பறிக்கப் பட்ட பிறகும் கரியமில வாயு (கார்பன் டை ஒக்ஸ்ய்ட்) எடுத்துக் கொண்டு உயிர் வாயு(ஒக்ஜெயின்) தரக்கூடிய ஆற்றல் உடையது, எனவே தான் நம் முன்னோர்கள் மா இலைகளை மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களில் பயன்படுத்தினார்கள். மேலும் மா இலைகள் அனைத்து காலங்களிலும் எளிதில் கிடைக்கக் கூடியது.

நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிவியல் கண்ணோடு

நம் முன்னோர்கள் கிணறு வெட்டுன டெக்னாலஜி ???


நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு. நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர்  சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்

குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் போடுவதில் உள்ள அறிவியல் காரானம்


பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.

செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?

 

ஒரு முறை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் பெரியவர் "என்ன படிக்கிறாய்?" என்றார். அவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.

சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம் பாக்கு வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி "அதன் பெயர் என்ன?" என்று வினவினார்.

மாணவனும் 'வெற்றிலை' என்றான். "அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?" என்று சுவாமிகள் கேட்க மாணவன் சொல்லத் தெரியாமல்

பாட்டியின் பத்து மாதப் சூத்திரம் ???




ஒரு பொண்ணு எப்ப ஒரு கொழந்தைக்கி தாயாகுறாளோ.. அப்பத்தான் அவ முழுமை அடையிறா.. அதுனால இதுதான் உன் வாழ்க்கையின் முக்கியமான தருணம். அதுனால கவனமா இருக்கனும்...”                        

“தாய் உண்ணும் உணவும், எண்ணும் எண்ணமும்தான் சேய்க்கு சேருங்கிறது அனுபவப் பாடம். அதனால நல்ல எண்ணங்கள வளத்துக்க... முடிஞ்ச வரை மனச் சஞ்சலத்துக்கு எடங்கொடுக்காத... சாப்பாட்டுல பழங்களையும் கீரை களையும் காய்களையும் நெரையா சேத்துக்க... 5 மாசம் வரைக்கும் கடுமையான வேலை எதையும் செய்யாத... அதுக்குப் பொறவு சின்னச்சின்ன வீட்டு வேலைகளைச் செய்யலாம். வேலையே செய்யாம படுத்திருக்குறதும் தப்பு.... ஓய்வொழிச்சல் இல்லாம வேலை செய்யிறதும் தப்பு... 5 மாசம் வரைக்கும் ஒம் வீட்டுக்காரன கொஞ்சம் ஒதுங்கியே இருக்கச் சொல்லு... நீண்ட தூரப் பயணம் போகவே போகாத... கூட்ட நெரிசலானஎடங்களுக்கும் போகாத. அமைதியும் சந்தோஷமும் ரொம்ப

இடி இடிக்கும் போது அர்ஜுனா_அர்ஜுனா என்று கூறுவதில் உள்ள அறிவியல் காரானம்


>>நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

>>உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

>>இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்.

>>உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

>>இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.

>>இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.
#அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.

#ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதின் உள்ள அறிவியல் காரானம்


இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும்..!!
தெரியாதோர்க்காகஇந்தப் பதிவு...

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...!!


சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.


காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

கொள்ளு பருப்பு வடை


முளைகட்டிய கொள்ளு பருப்பு - 1 கப்,
வெங்காயம் - 4,
பச்சைமிளகாய் - 2, உப்பு,
எண்ணெய்-தேவைக்கு,
பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா 1 சிட்டிகை,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

கொள்ளு பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

சுவையான காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு...!

                                      


தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர்
பச்சைப் பட்டாணி - ஒரு கப்,
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய்,
தேங்காய் துண்டுகள் - தலா 2,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
தனியாத்தூள்,

மாங்காய் இனிப்பு பச்சடி

மாங்காய் - 1,
துருவிய வெல்லம் - 1/2 கப்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்.
தாளிக்க...
கடுகு, எண்ணெய், உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 1.

எப்படிச் செய்வது?

மாங்காயை தோல் சீவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் மாங்காய், 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் வெல்லத் துருவல் போட்டு 2 கொதி விடவும். பின்பு தேங்காய்த்துருவல் சேர்த்து, மற்றொரு கடாயில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை தாளித்து மாங்காய் கலவையில் கொட்டி கலந்து இறக்கவும்.

நாக்கில் எச்சி வடிய வைக்கும் கொங்கு பாய் வீட்டு நாட்டுக்கோழி பிரியாணி..



செய்முறை:

1. இப்பொழுது அடுப்புல கெனமான அகன்ற பிரஷர் குக்கரை வைத்து அதில் நாட்டு பசு நெய்யை விட்டுகோங்க நன்றாக சூடானதும் அதில் பிரிஞ்சி இலை , மராட்டிய மொக்கு , அண்ணாச்சி மொக்கு , பட்டை , கிராம்பு , காஜ்சுபத்திரி , ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே வதக்க வேண்டும்.

2. அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா



தேவையான பொருட்கள்:

மட்டன் – 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது)
வெங்காயம் – 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/4 கப்
க்ரீம் – 1/4 கப்
கோவா – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சுண்ட காய்ச்சிய பால் – 1/4 கப்
ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை

பூனை குறுக்கே போனால் என்ன !!! உண்மை ஏன்ன?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது !!!





புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும்

புதிய உடையில் மஞ்சள் தடவி அணிவது ஏன் தெரியுமா?


'ஆள் பாதி ஆடை பாதி' என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு மனிதனின் மதிப்பை அளவிடுவதில் அவனுடைய உடைகள் பெரும்பங்கு வகிக்கிறது.

இந்த சமூகத்தில் மதிப்பு வாய்ந்தவர்களாய் வலம் வருபவர்கள் பலர் நேர்த்தியாய் ஆடைகள் அணிந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. தற்போது ஆடை என்பது நாகரீகத்தின் பிரதிபலிப்பாக மாறிவிட்டது. வெளி நாடுகளில் ஆடை என்பது அவர்களது சவுகரியம். நம் நாட்டில் உடைகள் நம்மை மதிப்பிட உதவுகிறது. அதற்காகத்தான் உயரிய துறையான மருத்துவர், ராணுவம், காவல்துறை போன்றவைகளுக்கு அரசே சீருடை வழங்கி, அவர்களை நம்மை அடையாளம் காண வைக்கிறது. ஆடை என்பது நமது அடையாளம்.

நாம் அனைவருக்கும் புதிய உடை என்றாலே ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். பண்டிகை காலம்

கிரகப்பிரவேசம் செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய முறைகள்...!


நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அறிவோம்.

கிரகப்பிரவேசம் செய்யும் முறை:

பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வருவது நல்லது.
கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து

சனி, 19 மே, 2018

விருதுநகர் ஸ்பெஷல்… சுடச்சுட கரண்டி ஆம்லெட்!!!


ஆம்லெட்டை பல வெரைட்டிகளில் தயார் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை தரும் அதிலொன்று தான் கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இந்த கரண்டி 

ஆம்லெட் ஜோரான டிஷ்.

சிலருக்கு வேக வைத்த‍ முட்டை பிடிக்கும். சிலருக்கு ஆஃப் பாயில் பிடிக்கும், சிலருக்கு முழு ஆம்லேட் பிடிக்கும், சிலருக்கு இந்த முட்டை ஆம்லேட் டோடு சிறிது வெங்காயம், மிளகுத்தூள் கலந்த ஆம் லேட் பிடிக்கும். இப்படி முட்டையை வைத்து 100 மெனுவை கொடுக்கலாம்.

சுவையான இறால் 65



தேவையான பொருட்கள்:

இறால் – 1/2 கிலோ
அரிசி மாவு – 2 ஸ்பூன்
கான்ப்ளார் – 1 ஸ்பூன்
மைதா – 1 ஸ்பூன்
முட்டை – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செட்டிநாடு உப்பு கறி

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்
சின்ன வெங்காயம் – 20 (நறுக்கியது)
பூண்டு – 20 பற்கள் (தட்டிக் கொள்ளவும்)
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
குண்டு வரமிளகாய் – 10
தக்காளி – 1 (நறுக்கியது)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

உங்கள் ஆதார் கார்டு உங்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!

ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது. அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது.


இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.

இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.


1) முதலில் 'https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய

மனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் வாக்கு. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்கத் தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி அமைவார்கள்.



ஒருவருக்கு ஜாதகத்தில் கட்டம் சரியாக இருந்தால், நீங்கள் கட்டம் கட்டாமலேயே அழகான பெண் உங்களுக்கு அமையுமாம். அதாவது, ஏழாம் இடத்தில் சுபர் இருந்தால். ஆண்கள் ஜாதகத்தில் மனைவியால் யோகம் ஏற்பட ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

• சந்திரன் 7-ல் பலமாக அமைந்தால் அழகான மனைவி அமைவார். இவர்கள் எப்போதும் மனைவியிடம் பாசமாக இருப்பர். அவ்வளவு ஏன் இவர்களுக்கு மனைவி சொல்லும் சொல் தான் மந்திரம்.

• சந்திரன், ஆட்சி, உச்சம் பெற்றாலும் மனைவியின் மூலம் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.

• சந்திரன் 10-ல் சுபருடன் இருப்பதும் மனைவியால் யோகம் ஏற்படும்.

• சந்திரன், சூரியன் 7-க்கு 7-ஆக அமைந்துவிட்டால் இவர்களைக் கையில் 

பிடிக்கமுடியாதாம். இவர்களுக்கு அமையும் மனைவி, நல்ல குணம், ஒழுக்கம் மட்டுமில்லை வசதியாகவும் இருப்பார்களாம்.

• சந்திரன், குரு இணைப்பு, சம்பந்தம் திருமண வாழ்வு சிறப்படையும். அன்பான, அழகான மனைவி அமையும் யோகம் இந்த ஜாதககாரர்களுக்கு அமையும்.

மனசு- சிறுகதை

அந்த வீட்டின் முற்றத்தில் முருங்கை மரத்தில் அமர்ந்திருந்த அந்த காகம் கரைந்தது. 


உள்ளேயிருந்து முற்றத்திற்கு வந்த முதியவர் ஒருவர் கரைந்து கொண்டிருந்த அந்த காகத்தை அண்ணாந்து பார்த்தார். 

 "ஏன் இப்படி காலையிருந்து கத்தி கொண்டேயிருக்கிறாய்?" யாராவது வரப்போகிறார்களா என்ன? என்று கேட்டபடி கீழேயிருந்து கல் எடுத்து எறியும் பாவனையில் ஓரு முறை கீழே குனிந்து நிமிர்ந்து கையை ஆட்டியபடி "சூ" "சூ" என்றபடி அதை விரட்டினார். 

அந்த காக்கையும் அவருக்கு பயந்தது போல் அமர்ந்திருந்த அந்த கிளையிலிருந்து பறந்து மறுபடி வேறொரு கிளையில் போய் அமர்ந்து கொண்டது. 

"அப்படி யராவது வந்தாலும் பரவாயில்லை நாலு சுவத்தை பாத்துட்டு பொழுது போகமே தவிக்கிறதுக்கு நாலு நாள் பொழுதாவது நல்லாபோகும்" என்று முணுமுணுத்த அந்த முதியவர் தன்னுடைய மிரட்டலுக்கு காகம் கட்டுபட்டு விட்டது என்ற திருப்தியுடன் உள்ளே சென்றார்.

சிறிது நேர அமைதிக்குப்பின் மறுபடியும் அந்த காகம் கரைய ஆரம்பித்தது. 

அதன் ஓயாத கரைதலுக்கு செவிமடுத்து வீட்டின் உள்ளிருந்து ஒரு மூதாட்டி வெளிவந்து கண்ணை இடுக்கியபடி மரத்திலிருந்த அந்த காக்கையை உற்று நோக்கினாள். 

"ஏன் இப்படி காலையிலிருந்து கத்திகிட்டேயிருக்கு? காக்கா ஒயாம கத்தினா

சகட யோகம் நன்மையா தீமையா?

சகட யோகம் என்பது சந்திரனுக்கு 6, 8, 12-ல் குரு இருப்பதால் உண்டாகும் யோகம் என்ற ஒரு கருத்து உள்ளது. உண்மையில், குருவிற்கு 6, 8, 12-ல் சந்திரன் இருப்பதே சகட யோகம் என்று நமது மூல நூல்கள் குறிப்பிடுகின்றன.
சகடம் என்றால் சக்கரம் என்ற பொருளில் இந்த யோகம் இருப்பவர் வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும் என்று இதற்கு பொருள் சொல்லப் படுகிறது.
எனது  நீண்ட ஜோதிட ஆய்வில் இந்த யோகம் இருக்கும் பலர் நிரந்தரமான உயர்வான நிலையிலோ, அல்லது எப்போதும்  கஷ்டப் படுபவர்களாகவோ இருப்பதைப் பார்த்திருக்கிறேன். மேலும் உயர்வு, தாழ்வு என்பது ஒரு மனிதனின் தசா, புக்தி அமைப்பைப் பொருத்தது. இதுபோல கிரக யோக அமைப்பைச் சார்ந்தது அல்ல.
இந்த அமைப்பு இருந்தால் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும் என்பது இப்போது ஒத்து வரவில்லை. அந்தக் காலத்தில் இந்த யோகம் இருந்தவர்களின் நிலைமை இவ்வாறு இருந்திருக்கலாம். அல்லது ஜோதிடத்தில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று இடையில் சிலர் காட்டிய கைவண்ணமாக இது இருக்கலாம்.
இன்னும் ஒரு கருத்தாக நான் வலியுறுத்திச் சொல்லுவது, எந்த ஒரு யோகமாக இருந்தாலும் சம்பந்தபட்ட கிரகத்தின் நட்பு லக்னங்களுக்கு மட்டுமே முழுமையாக பலன் தரும் என்பதால் குருவின் யோகங்கள் அவரது நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாய் ஆகியோரின் லக்னங்களுக்கே முழு பலன் அளிக்கும்.
சகட யோகம் என்பது நல்ல பலன்களைத் தராத ஒரு அமைப்பு என்பதால் சூரிய, சந்திர, செவ்வாயின் லக்னங்களான கடகம், சிம்மம், மேஷம், விருச்சிகம், மற்றும் குருவின் லக்னங்களான தனுசு, மீனம் ஆகியவைகளுக்கு கெடுபலன்களைத் தரும். அதேநேரத்தில் குருவின் எதிர் லக்னங்களான சுக்கிரன், புதன், சனியின் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு குருவிற்கு

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா ?

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா ? கீழே படியுங்கள்
“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.

நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
                     

                          


நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும்.எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன்

பிறந்த மாதமும் பெண்களின் குணமும் - ஆகஸ்டில் பிறந்த பெண்களிடம் உஷார் !

பொதுவாக அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல என நாம் கேள்விப்பட்டிருப்போம், இன்றைய அறிவியல் உலகில் இதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது என்றும் நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

ஆனால், இன்றளவும் ஜோதிடம் பார்த்து, நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து அந்த நாளை துவங்கும் நபர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிறந்த மாதத்தை வைத்து பெண்களின் குணங்களை கணிக்க முடியும் என்கிறது ஜோதிடம் .

ஜனவரி

ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாகவும், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள்.

பிப்ரவரி

காதலுக்கு உகந்த மாதம் . இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது. அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்கள் எண்ணம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையாகவும் , கவர்ச்சியாகவும் இருப்பார்கள் . இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். மிக நேர்மையானவர்களாக, ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள்

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 8 உணவுகள்!


கீரை: கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் மீண்டும் சூடுப்படுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது , புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

முட்டை: முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக்

பண வரவு அதிகமாக வேண்டுமா? இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள்

பணவசதி நல்லபடியாக இருக்க வேண்டுமா? செலவுகள் கட்டுக்குள் இருக்க வேண்டுமா? இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள்.


வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுக்கிர ஓரையில் காமாட்சி விளக்கு ஏற்ற வேண்டும்.



விளக்கினுள் பச்சை குன்றின்மணி 21 எண்ணிக்கையில் வைக்க வேண்டு

அப்பாக்களுக்கு - வயதிற்கு வரக்காத்திருக்கும் மகள்கள்.


எனக்கு தெரிந்த ஒருவருடைய மகள் இப்போது 7ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அவ்வப்போது வீசிங்க் பிரச்சனை இருந்து வந்துள்ளது.அதற்கு அவர்கள் மருத்துவம் பார்த்து மருந்துகள் கொடுத்து வந்துள்ளனர்.

5ம் வகுப்பு வரை 80 முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் வாங்கி வந்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பிக்கிறாள். 70 சதவீதம் 60 சதவீதம் என குறைகிறது.

அவளது தந்தை , எப்பவும் 90 எடுக்க முடியுமா , குழந்தைதானே டேக் இட் ஈஸி என மகளைத் திட்டும் மனைவியை அடக்குகிறார்.

ஒரு கட்டத்தில் ஒன்றிரண்டு பாடங்களில் ஃபெயில் ஆகிறாள்.நீ கொஞ்சம் பொண்ணுக்கு ஒழுங்கா சொல்லிக்கொடு என்று மனைவியைத் திட்டுகிறார் அப்பா.
குழந்தை பள்ளியில் இருக்கும்போது தந்தைக்கு ஒரு போன்கால் வருகிறது. குழந்தை மயக்கம் அடித்து விழுந்து விட்டாள். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என அழைத்துச் செல்கிறார்கள். மருந்துகள் கொடுக்கப்பட்டு வைத்தியம் பார்த்ததும் வீட்டுக்கு வருகிறாள்.

இது நடந்து சில நாட்களிலேயே மீண்டும் வகுப்பில் மயக்கம் அடித்து விழுகிறாள். மீண்டும் அரசு மருத்துவமனை. அது ஒரு சின்ன டவுன் தான். இந்த முறை தலைமை நர்ஸ் , குழந்தையின் அப்பாவுடன் பேச வேண்டும் என்கிறார்.அப்பாவும் சென்று பேசுகிறார்.

“இவளுக்கு என்னென்ன பிரச்சனை ?”

நீங்கள கனிக்கலாம் - கைரேகை ஜோசியம்

மனிதனின் எதிர்காலம் மற்றும் அவ னை பற்றிய தகவல்களை உள்ளங் கையின் அமைப்பு மற்றும் அதன் வரி களை கொண்டு கணிக்க முடியும் என் பது கைரேகை சாஸ்திரம் கூறும் நிரூபணம்.





கைகளில் உள்ள ரேகைகள் மட்டுமல்ல, கால்கள் மற்றும் நெற்றியில்இருக்கும் ரேகை அமைப்பையும் கொ ண்டு பலன் சொல்லுவது இந்த சாஸ் திரத்தின் கட்டமைப்பு. அதனால் தான் இதை கைரேகை சாஸ்திரம் என கூறா மல் முன்னோர்கள் ரேகை சாஸ்திரம் என அழைத்தார்கள். ரேகை சாஸ்திரம் என்பதுவிஞ்ஞானம் அல்ல.

ரேகை சாஸ்திரம் ஒரு கலை வடிவம். இங்கே நாம் கலைக்கும்விஞ்ஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது கட்டமைக்கப்பட்ட விதிகளும், அத னை நிரூபணம் செய்யும் சோதனைகளும் கொண்டது.கலை என்பது அடிப்படை அம்ச ங்களை கொண்டது ஆனால் அதை பயன் படுத்துவோர் பொருட்டு மாறுபடும். உதார ணமாக சோடியம் குளோரைடு என்ற உப்பை நீரில் அமிழ்த்தினால் கரையும் என் பது விஞ்ஞானம் கூறும் விதி. இதை உலகின் எந்த மூலையில் யார் செய்து பார்த்தாலும் நடைபெறும்

திடீர் பண வரவு யாருக்கு?


பணம் என்பது நம் வாழ்வின் அத்வாசியமான ஒன்றுதான் ஆனால் அதற்க்காக பணமே வாழ்க்கை கிடையாது.நாம் சில நேரங்களில் பணம் இல்லாமல் தடுமாறும் நேரத்தில் நாமே எதிர்பார்க்காமல் பெரிய பணம் நம் கையில் வரும்.

நீண்ட நாட்களாக வராமல் இருந்த நம்முடைய பணமாக இருக்கலாம் அல்லது நம் நண்பர்க:ள் திடிரென்று உதவி செய்வார்கள் அல்லது லாட்டரி,புதையல் கூட கிடைக்கலாம் அதற்கு நம் ஜாதகம் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என பார்ப்போமா?

அஸ்வினி அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரம் ஒன்றின் 4-ம் பாதத்தில் செவ்வாய் நிற்க வேண்டும். லக்னம் அல்லது 10-ல் சூரியன் நிற்க வேண்டும். பிறகு செவ்வாயையும் சூரியனையும் சுபரான குரு சந்திரன் பார்த்தால் இந்த அமைப்பு உண்டாகும்.

தனலாப ஸ்தானத்திற்கு   3, 5-ம் இடங்களில் கிரகங்கள் நிற்கக்கூடாது. இந்த அமைப்பு உள்ள ஜாதகர்கள் பல கோடிகளின் அதிபர்களாவர். கடக லக்னத்திற்கு அனுஷம் 4ம் பாதத்தில் செவ்வாய் நிற்க, 10ல் சூரியன் உச்சமாகி சந்திரன் 4-ல் நின்று சூரியனைப் பார்க்க 9-ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க குபேர யோகம் உண்டாகும்.

கும்ப லக்னத்திற்கு அனுஷம் 4-ல் செவ்வாய் நின்று உச்ச சந்திரனால் பார்வையாகி, லக்ன சூரியன் சிம்ம குருவால் பார்வை பெற மிகப்பெரிய குபேர யோகம் வந்து கோடிகளில் புரள்வார்கள். குபேர யோகம் பெற முடியாத ஒரு சில கிரகங்களே மாற்ற மடைந்திருக்கும் ஜாதகர்கள் அதற்கான கிரக யோக வழிபாட்டை கண்டுபிடித்து செய்வதால் நிறைவான யோகம் பெற்று வாழலாம்.

இனி நீங்கள் பேலன்ஸ் இல்லாமலே கால் பண்ணலாம்!

பிராட்பேண்ட் மற்றும் வைஃபை மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதிக்கு டிராய் ஒப்புதல் அளித்துள்ளது!  



தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. 

இதையடுத்து வாடிக்கையாளர்களும் யாருடா குறைவான விலையில் அதிக சலுகையை  கொடுக்கிறார்கள் என்று வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், தொலைபேசியில் பேலன்ஸ் இல்லாமலே கால் செய்யும் வசதியை

ஊழல்

கடந்த வாரம் ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். எதிரில் அமர்ந்து ஒருவர் அவசர அவசரமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். 

முழு போதையிலிருந்தார். நான் ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினேன். "அதை கொண்டு வா.. இதை கொண்டு வா.." என அரட்டி கொண்டிருந்தார். திடீரென அவரை காணவில்லை. சப்ளை செய்த பெண் ஓடி வந்து "சார் இங்க சாப்பிட்டு இருந்தவர பார்த்திங்களா?" என்றார்.

நான் "இல்லையே என்னாச்சு?" என்றேன். "பில் கொடுக்காம போய்ட்டாரு சார். செம போதைல இருந்தாரு. கிச்சன் வரை போய்ட்டு வந்து பார்த்தா காணோம்" என்றார் பரிதாபமாக. "மறந்துட்டு போயிருப்பாரு, திரும்ப வருவாரு" என ஆறுதல் சொன்னேன். 

"இல்ல சார் சாப்பிட்டத எப்படி மறப்பான், போய்ட்டான் சார்.. இந்த காசை என் சம்பளத்தில் தான் பிடிப்பாங்க" என சோகமாக சொன்னார்.

"பில் போட்டா தான பிரச்சனை? பில் போடாதீங்க. கண்டுக்காம விட்ருங்க" என்றேன். "இல்ல சார் இங்க டேப்ல(மொபைலில்) ஆர்டர் எடுத்துட்டு தான் பரிமாறுவோம். 

அது என் பெயருடன் பில் வந்துரும். கஸ்டமர் காசை கட்ற வரை என் பொறுப்பு, எக்ஸ்ட்ரா ஒரு அப்பளம் கூட எடுக்க முடியாது. இன்னைக்கு நேரம் சரியில்ல. அவ்ளோ தான்"

 என்று அவரை சுற்றி தேடியபடி பதட்டமாக பதில் சொன்னார்.
எனக்கு அவன் மீது செம கோவம். அந்த உணவு விடுதியில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 200ரூ வரும் சாப்பாடு. அந்த பெண்ணிற்கு சம்பளம் 500ரூ இருக்கலாம். அவளுக்கு

வெள்ளி, 18 மே, 2018

வீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து..

வாஸ்து

வீடுகட்டக்  கூடிய   மனை  சதுரமாகவோ  , நீள்  சதுரமாகவோ  அமைய வேண்டும் .முன்பாகம்  குறுகி  பின்  பாகம்  விரிவடையக்கூடாது  .  அது போல  முன் பாகம்   விரிந்து   பின் பாகம்   குறுகி  இருக்ககூடாது   .

வீட்டிற்கு  4  பக்கமும்   இடம்   விடு  இருக்க   வேண்டும். வடக்கு வட  கிழக்குப்பகுதியில் இடம் அதிகமாக  விட வேண்டும் .

தெற்கு,தென்மேற்கு  பகுதியில் காலி  இடம்  இருக்க கூடாது .கிணறு போர்வெல் வடகிழக்கு  பகுதியில்   அமைக்க வேண்டும் .

சமையல்  அறை    தென் கிழக்கு  பகுதியில் நலம் முடியாத  பட்சத்தில்  வட  மேற்குப்  பகுதியில்  ( திசையில் )சமையல்  அறை  அமைக்கலாம்  .

வீட்டின் பால்கனி வடக்கு கிழக்குப்பகுதியில் அமைப்பது  உத்தமம் முடியாத பட்சத்தில்  வடகிழக்கு  திசை அமைக்கலாம் .வட கிழக்கு பகுதிகளில் கதவுகள் நிறைய வைப்பது.வென்டலேட்டர் குறைவாக  உத்தமம் 
 .
மேற்கு  திசையில் ஜன்னல்,வென்டிலேட்டர் குறைவாக  வைப்பது  நன்மை தரும்.தெற்கு,மேற்குபகுதியில் அகலமாக அமைப்பது உத்தமபலனை

எதை வைத்து நமக்கு மரியாதை கிடைக்கும்?

1]* எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]
3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்*

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா


நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..?
சிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக அந்த ராணி யாரும் நினைத்து பார்க்க முடியாத உத்தரவை பிறப்பித்தாள்
என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் ..அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை அவிழ்த்துவிடுங்கள் அப்போதுதான் குழந்தை பிறக்க வேண்டும் என சொல்ல அதன்படி செய்யப்பட்டது..தலைகீழாக இருந்து பிறந்ததால் அக்குழந்தை கண்கள் ரத்தமாக இருந்தன..அவர்தான் செங்கண் சோழன் ..சோழ ராஜ்ஜியத்தில் பெரும் சாதனைகளை செய்த மன்னன்..
என்னதான் சிசேரியனுக்கு நால் குறித்தாளும் ,பெரும் கிரகங்களான சனியும்,குருவும் இருக்கும் ராசியை மாற்ற முடியாது..லக்னத்தை மாற்றலாம்..ராசியை மாற்றலாம்..பூர்வபுண்ணியம்,வம்சாவழி தோசங்களை நீக்க முடியாது..அக்குழந்தை யோகசாலியாக இருப்பான் என அவன் விதி இருந்தால்தான் சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க முடியும் இதுவும் விதிப்படியே நடக்கும்
விதியை நீ மதியால் வெல்வாய் என்பதே உன் விதியாய் இருந்திருக்கும்..!!!

ஆதார்

நாம் எப்போதும் அரசு மற்றும்  , அதிகாரிகளை அவர்களது மெத்தனம் மற்றும் தொம்மைத்தனத்தை கிண்டல் அடிப்போம் .

ஆதார் கார்ட் ஆப்ப்பில் share ekyc என்ற ஆப்ஷன் வந்து இருக்கிறது. அதில் இன்னும் சில பக்ஸ் இருக்கிறதுதான், ஆனால் இந்த ஆப்ஷனை வங்கிகள் இன்ன பிற தனியார் நிறுவனங்கள் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை.

ஆதார் கார்டை நான் கூட என்னமோ நினைத்தேன். உலக அளவிலேயே இது ஒரு பெரிய புரட்சியை உண்டாக்கப் போகிறது. பல விஷயங்களை எளிமையாக்குகிறது. இந்த கம்ஃபர்ட்டை அனுபவிப்பதால் , என் டேட்டாவை எவனாச்சும் எடுத்துட்டுப் போகட்டும் , அதுல என்னா மயிறு இருக்கு என்றுதான் தோன்றுகிறது. (எனக்கு ). எதிர் காலத்தில் பல விஷயங்களை எளிமையாக்கும், வலிமையாக்கும். பேப்பர்லெஸ் ஆக்கும்.

இப்போதே நூற்றுக்கணக்கான தொலைந்து போன குழந்தைகளை மீட்டெடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்க உதவி இருக்கிறது ஆதார்.
88 சதவீத இந்தியர்கள் ஆதாரை எடுத்து விட்டனர். முக்கியமாக ஆதாரை எதிர்க்கும் அனைவரும் ஆதார் எடுத்து விட்டதாக , அவர்களின்  ஆதார் நம்பரோடு ஆதார் போர்ட்டலில் அறிவித்து இருக்கிறார்கள்.

இதில் தவறு செய்யாமல் இருந்தால், மிக அற்புதமான சிஸ்டம். உலக அளவில் நாம் தான் இதை முதலில் செய்து இருக்கிறோம் என்பதில் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

இந்த திட்டத்தை துவக்கிய காங்கிரஸ் , அதை விடாப்பிடியாக செயல்படுத்திய பாஜக , கோர்ட் மறுக்க மறுக்க ஆதார் கார்ட் கேட்ட மாநில அரசுகள் , வங்கிகள் , மற்றும் ஜியோ
வாழ்த்துக்கள்.

குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?

ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். *செல்வம்* இல்லாவிட்டாலும் *சந்தோசமும் மன அமைதியுடனும்* இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து *”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?

அழிந்து கொண்டிருக்கும் ஒரு மாமருந்து!!!


சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன் . பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் எண்ணிலடங்காதது ..



பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி கிடைக்கிறது. இயற்கையாக தயாரிக்கப்படுவதால் அதிக சத்துகளை கொண்டதாக உள்ளது.இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.

கருப்பட்டியில் உள்ள அதிக அளவிலான கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன் எலும்புகளுக்கு அதிக வலுவை

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சுவையான கம்மங்கூழ் ரெசிபி!


வாட்டும் வெயிலிலிருந்து பாதுகாத்து, உடலுக்கு குளிர்ச்சையை ஏற்படுத்தும் சுவையான கம்மங்கூழ் நம் வீட்டிலேயே எப்படி எளிதாக செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.


கம்பு - கால் கிலோ, மோர் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 20, தண்ணீர் - தேவையான அளவு.

டி.ராஜேந்தர் ‘வீராசாமி’ படத்துக்குப்பின் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் கடைசியாக இயக்கிய படம் ‘வீராசாமி’. அதன்பின் அவர் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்துவந்தார். கடைசியாக அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் சினிமா விழாக்களில் அவர் பேசும் பேச்சு பலரையும் ஈர்க்கும். 

இந்நிலையில் டி.ராஜேந்தர் மீண்டும் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார். ‘வீராசாமி’ படத்தை இயக்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதுதான் அவர் கடைசியாக இயக்கிய படம். அதன்பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கவுள்ளார். இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் டி.ராஜேந்தர். 

சிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

சிறிய பிரச்சினைகள் - புத்த துறவி ஒருவர் சொன்ன ஒரு அருமையான கதை

இதில் புதைந்துள்ள உண்மையை நாம் புரிந்து கொண்டு மனதில் நிறுத்தி விடவேண்டும். அதன் பிறகு நமது வாழ்கையின் மகிழ்ச்சியை குவிக்கிறோமோ இல்லையோ, துயரங்களை கணிசமாக குறைக்கலாம்.

ஒரு பெரிய சக்ரவர்த்திக்கு ஓரே ஒரு மகள். அதாவது ராஜகுமாரி. இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது. கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது. போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள். அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.

மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, இந்த சிறுமி ஒத்துழைக்கவில்லை. கண்ணை கசக்கியும் அழுதும் தொடர்ந்ததால் காயம்

விலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்?





*நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.*

*இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்*.

*அதை உதறி தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்*

*நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர்  இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.*

*ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று

குட்டியோண்டு சாப்பாட்டுக்கடைகள்

பவன் ஹோட்டல்கள் வெறுத்துப்போய் , பல காலமாக நான் ஏதேனும் குட்டியூண்டு ஆயா ஹோட்டல் , தாத்தா ஹோட்டல்களைத்தான் தேடித்தேடி சாப்பிட்டு வருகிறேன்.
சுகாதாரம் படு மோசமாக இருக்கும். அடுப்பை எட்டிப்பார்த்தால் மயக்கம் வந்து விடும். அந்த ஆயாவோ , தாத்தாவோ ரெண்டு விரலை டம்ப்ளருக்குள் விட்டு தண்ணீர் கொண்டு வந்து வைக்கும் அழகைக் காண வயிற்றுக்குள் எல்லாம் கண்கள் விழிக்கும்.
இந்த சிக்கல்கள் எல்லாம் இருந்தாலும் சுவை இருக்கும்.ஆயா வோடு பேச்சு கொடுத்தால் செம சுவாரசியமாக இருக்கும். வயிற்றுக்கு ஒன்றும் செய்ததில்லை. ஐயா மார்களே , எனக்கு வயிற்றுக்கு ஒன்றும் செய்ததில்லை. இதைப்படித்து விட்டு , நீங்கள் குடும்பத்தோடு சென்று ஏதேனும் ஆயா கடையில் சாப்பிட்டு ஐசியூ வில் அட்மிட் ஆனால் நான்

இதுபோல யோசிக்க சுஜாதா அவர்களால் மட்டுமே முடியும் போல..





சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று
பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப்
பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி
நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?
கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி
ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
———————————

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார்
தொடர்பு?
இரண்டிலும் சீர் உண்டு

வியாழன், 17 மே, 2018

Food டெக்கரேஷன் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

காய்ச்சல் வந்தால் கஞ்சியும் துவையலும், ஜலதோஷத்துக்கு மிளகு ரசம், வயிற்று வலிக்கு ஓமம் என உணவில் மருத்துவத்தை ஒளித்து வைத்திருந்தது நம் பாரம்பரியம். கூடவே, எந்த உணவை எதனுடன் சேர்க்க கூடாது என்றும் சொல்லித் தந்தனர். ஆனால், இன்று  ‘ஃபுட் காம்பினேஷன்’, ‘ஃபுட் டெக்கரேஷன்’ என்ற பெயரில் ஆரோக்கியமான உணவைக்கூட, பல நிறங்களைச் சேர்த்து, ஆரோக்கியமற்றதாக்குகிறோம்.

நம்முடைய உணவு, சுவை (ரச), தன்மை (குண), திறன் (வீரியம்), செரிமானம் (விபாக) மற்றும் செயல்பாடு (பிரபாவம்) ஆகிய குணங்களைக்கொண்டது. இத்தனை குணங்களும் சரியான அளவில் இருந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதனால்தான், எந்தெந்தக் காலத்தில் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று

வெள்ளி, 11 மே, 2018

மயிலிறகு வார்த்தைகள்.. (4 நிமிட சிறுகதை)

என்ன ஆச்சி இவளுக்கு..? ஒண்ணும் புரியல எனக்கு.

காலையில நான் வேலைக்கி போறப்ப கூட வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பி ‘வர்றப்ப சாந்தியக்கா கடையில பூ வேங்கிட்டு வாங்க.. அவங்கதான் நல்ல நெருக்கமா கட்டிருப்பாங்க..’ன்னு சொல்லி , ப்ரியா வாரியார் மாதிரி கண்சிமிட்டி , விரலால சுட்டாளே..

”ஒன்ன நெனைச்சிக்கிட்டே பைக் ஓட்டி சிக்னல்ல யெல்லோ லைன தாண்டி நிப்பாட்டி , பின்னாடி வர்றதுக்காக ரிவர்ஸ் கியர தேடி அசடு வழிஞ்சேன் டிராஃபிக் கான்ஸ்டபிள்கிட்ட..”ன்னு ஃபோன்ல சொன்னப்ப  அவ சிரிச்ச சிரிப்பு , சாயங்காலம் வாங்கப்போற மல்லிய ஞாபகப் படுத்திச்சி.

வாழை இலையில சாந்தியக்கா பொதிஞ்சி குடுத்த பூவ , காலி டிஃபன் பாக்ஸுக்குள்ள வச்சி கொண்டு போயி குடுப்பேன். ஜாமெண்ட்ரி பாக்ஸ பல்லால திறந்து நெல்லிக்காய கடிச்ச ரெட்டச் சடை பருவத்த கண்ணுல காட்டுவா.
வழக்கமா ஓடுற படந்தான். இன்னிக்கி எந்த இடத்துல ரீல் அறுந்துச்சின்னு தெரியல. தூக்கி வச்ச முகத்தோட நங்குன்னு அவ கொண்டு வந்து வச்ச காஃபி , ஃபிகாவா கலங்கிடிச்சி.

‘டேய் பெரியவனே.. ஒங்க அத்தாவுக்கு நைட்டுக்கு தோச வேணுமா , சப்பாத்தி வேணுமான்னு கேட்டு சொல்லுடா..’

கல்யாணமாகி ஒரு வருஷமாச்சி. மூணு மாச புள்ளைய பெரியவனேன்னுதான் கூப்டுவா. பட்டுன்னு அடுத்த புள்ள வேணும்ங்குறத ஒத்த வார்த்தையில சொல்லிடுற ரசனைக்காரி. தோசையா , சப்பாத்தியான்னு எங்கிட்ட கேக்க வேண்டியத , தொட்டில ஈரம் பண்ணுறவங்கிட்ட கேக்குறாளே.. சுர்ர்ர்ருன்னு ஏறிச்சி

சிறுகதை : காத(லி)ல் ...!


சிவா ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். அவனிடம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் ஏழையாய் பிறந்து விட்டோம் என்று அவன் கவலைப்பட்டதே இல்லை, விடாமுயற்சியுடன் வேலைக்கு சென்று கொண்டே கல்லூரி படிப்பை தொடர்ந்தான்.  எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் காதலிக்கலாம்.  விதி சிவா-வையும் விடவில்லை.

அதே கல்லூரியில் படிக்கும் தீபிகாவை காதலித்தான். தீபிகா மிக பெரிய தொழிலதிபரின் மகள். தினமும் விலை உயர்ந்த காரில்தான் கல்லூரிக்கு வருவாள். ஆனால் சிவா அவளுடைய பணக்கார ஆடம்பரத்தை பார்த்து காதலிக்கவில்லை. காதலிக்க ஆரம்பித்து அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆராய்ந்த போதுதான் தீபிகா ஒரு பணக்கார தேவதை என்று தெரியும். அப்போது அவன்  கால் சிறிது பின் வாங்கினாலும் அவனது காதல் பின் வாங்க விடவில்லை. சிவா ஏழையாய் பிறந்து இது வரை அவன் எடுத்த எல்லா முயற்சிகளிலும் வென்று இருக்கிறான். அந்த தைரியத்தோடு தீபிகா-விடம் தான் காதலை சொல்ல போகும் சந்தேகம் கலந்த சந்தோசத்தோடு உறங்க போனான் ஆனால் காதல் அவனை