GV Prakash who joins the director Vijay again
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கிய இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவரது நடிப்பில் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில், மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ஏ.எல்.விஜய் இயக்கிய 7 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ஆனால், இந்த முறை கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். விரைவில் இப்படம் பற்றிய முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.