எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

புதன், 16 நவம்பர், 2016

4ஜி Smart போனை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ விலை ரூ.1,000 தான்.!!

4ஜி இண்டர்நெட் சேவையை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ரிலையன்ஸ் ஜியோ அடுத்த அதிரடி தகவல் வழங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலையில் ஸ்மார்ட்போன் கருவிகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.


ஸ்மார்ட்போன்

முன்னதாக வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பீச்சர் போன்களை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல் தெரிவிக்கின்றன.

   

விலை

மலிவு விலை கருவி என்பதால் புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி கருவியின் விலை ரூ.1,000/- அல்லது ரூ.1,500/- வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

   

தட்டுப்பாடு

4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் கருவிகளை வெளியிட ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

   

லைஃப்

ரிலையன்ஸ் லைஃப் பிரான்டு 4ஜி திறன் கொண்ட கருவிகளை ஏற்கனவே விற்பனை செய்து வருகின்றது. இவை மற்ற நிறுவன கருவிகளை விடக் குறைவான விலையில், துவக்க விலை ரூ.2,999 முதல் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

   

அம்சங்கள்

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட இருக்கும் கருவியானது ரூ.1,000 விலை கொண்டிருக்கும் என்றாலும் இதில் ஸ்ப்ரெட்ரம் 9820 பிராசஸர், அதிகத் திறன் கொண்ட கேமரா, பெரிய டிஸ்ப்ளே, வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக