காலபிரகாசிகையில் கூறப்பட்ட பிறந்த குழந்தையின் புண்ணிய கர்மாக்கள்
மந்திர ஸ்வீகாரம்
இதற்குமேல் இப்பொழுது மந்த்ரங்களை கிரஹித்துக் கொள்வதற்கான காலம் பற்றிக் கூறப்படுகிறது. சைத்ரமாஸத்தில் மந்த்ர உபதேசம் பெற (ஆரம்பம் செய்ய) பலவித துக்கத்தையளிக்கும். வைசாகத்தில் மிகுந்த உயர்ந்த பொருள் லாபம், ஜ்யேஷ்ட மாஸத்தில் மரணத்தினையளிக்கும்.
ஆஷாட மாதத்தில் பந்து ஜனங்களின் நாசத்தையளிக்கும். சிராவண மாஸத்தில் மேன்மையையும் பாத்ரபத மாஸத்தில் பிரஜா நாசத்தையும் ஆச்வயுஜமாஸத்தில் ஞான வளர்ச்சியையும், மார்கசீர்ஷ மாஸத்தில் சுபத்தையும் அளிக்கும். புஷ்ப மாஸத்தில் மந்த்ர உபதேசம்பெற ஞானவிருத்தி ஏற்படும். மாகமாஸத்தில் மேதாவிலாஸ வளர்ச்சியும் பால்குண மாஸத்தில் ஸகல வச்ய ஸித்தியும் ஏற்படும். உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரோகிணி, ரேவதி, பூசம், அவிட்டம், ஸ்வாதி, அனுஷம், மகம், சித்திரை, மூலம், புனர்பூசம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், ஹஸ்தம் ஆகிய நக்ஷத்திரங்கள் மந்த்ரதீக்ஷை பெறுவதற்கு ஏற்றவை. சுபமளிக்கக்கூடியவை. சதூதசி, அஷ்டமி, அமவாஸ்யை, செவ்வாய்கிழமை விலக்கத்தக்கவை.
மந்த்ர தீக்ஷைக்குச் சரராசிகள் (லக்னங்கள்) உத்தமம். ஸ்த்திர ராசிகள் அதமம். உபய ராசிகள் மத்யமம். உபதேசம் பெறும் லக்னத்திற்கு எட்டாமிடத்தில் ஒரு கிரஹமும் இருக்கக்கூடாது. இருந்தால் விநாசம். மந்த்ர ஸ்வீகார விஷயத்தில் பிதருமாஸம் எனப்படும் ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்கள் விலக்கத்தக்கவை. மற்ற மாதங்கள் சுபம் எனச்சிலர் கூறுகிறார்கள். ஜன்ம நக்ஷத்திரம், அனுஜள்ம, த்ரிஜன்ம நக்ஷத்திரம் – ஸங்க்ரமணம் (மாஸப்பிறப்பு) புதன்கிழமை இவை சுபகரமானவை. மந்த்ரஸ்வீகாரம் செய்து கொள்வதற்கு முன்பாக-ஸித்தம் ஸாத்யம் முதலான சோதனைகள் செய்து தமக்குப் பொருத்தமுள்ள மந்த்ரத்தைத் தேர்ந்தெடுத்த பிறகே ஸ்வீகரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக