வியாழன், 8 அக்டோபர், 2015
வாஸ்து தோஷ்ங்களை நிவர்த்திசெய்யும் கர்ப்ப பெட்டி
நண்டு வளையில் இருந்து எடுக்கபட்ட மண்,,யானையின் காலடி மண்,,புற்றுமண்,,குளத்துமண்,,எருதின் காலடிமண்
இந்த 5 வகை மண்ணை சேர்த்து 9 அறைகளாக ஒரு பெட்டி செய்து அதில் நவதான்யங்களையும்,,நவரத்தினங்களையும் நிரப்பி
பின்னர் செம்பு,,பித்தளை,,ஈயம்,,தங்கம்,,வெள்ளி போட்டு மீண்டும் நவதான்யங்களைபோட்டு மண்மூடியால் மூடி கட்டிடம் கட்டும் கலைஞரை
வைத்து பூஜை செய்து,,மனையின் ஈசான்யத்தில் பள்ளம் தோண்டி அதற்க்குள் வைத்து பூஜைபோடு மண்ணால் மூடி விடவும்
இப்படி செய்தால் அந்தவீட்டில் எந்த தோஷ்மும் அண்டாது சகல செல்வங்களும் உண்டாகும்
இந்த 5 வகை மண்ணை சேர்த்து 9 அறைகளாக ஒரு பெட்டி செய்து அதில் நவதான்யங்களையும்,,நவரத்தினங்களையும் நிரப்பி
பின்னர் செம்பு,,பித்தளை,,ஈயம்,,தங்கம்,,வெள்ளி போட்டு மீண்டும் நவதான்யங்களைபோட்டு மண்மூடியால் மூடி கட்டிடம் கட்டும் கலைஞரை
வைத்து பூஜை செய்து,,மனையின் ஈசான்யத்தில் பள்ளம் தோண்டி அதற்க்குள் வைத்து பூஜைபோடு மண்ணால் மூடி விடவும்
இப்படி செய்தால் அந்தவீட்டில் எந்த தோஷ்மும் அண்டாது சகல செல்வங்களும் உண்டாகும்
சௌபாக்கியவதி யோகம் சில விஷேச விதிகள்
1 .இதில் சொல்லப்பட்டுள்ள விதிகள், பொதுவானவை அல்ல ,, அனைத்தும் விஷேச விதிகள் ஆகும் .
பெண் ஜாதகத்தில் இலக்கின்துக்கு 7 , 8 , மிடங்களில் ,பாவ கிரகங்கள் நிற்க ,9 ஆம் ராசியில் சுபர்கள் நிற்க ,மேற்படி தோஷங்கள் ,பலன்
அற்றது, மாறாக, நன்மையான பலன்கள் நடக்கும் . பெண்ணும் செஸபாக்கியவதியாக இருப்பாள்
=.
2. 7 இக்கு உடையவன் ,6 ,இல் நிற்க ,அல்லது 6,7 ,ஆம் மிடத்து அதிபதிகள் ,12- இல் நிற்க , அல்லது 6,7, மிட அதிபதிகள் ஒரே நட்ச்சத்திர சாரத்திலோ , அல்லது இருவரும் ஒரே அம்சத்தில் சேரின் , அந்த பெண் கற்பு ம் ,ஒழுக்கமும் ,அடக்கமும் , பண்பும் ,சேர்ந்த பெண்ணாக இருப்பாள் ,
=
3 .ஏழுக்கு உடையவன் இலக்கினதிலும் ,ஆறாம் அதிபதி 7 அல்லது 12
இல் இருக்க , 7,12, ஆம் இட அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் இருக்க ,அல்லது ஒருவரையொருவர் பார்வை செய்ய , இதே பலன் உண்டுபண்ணும் .
=
4 .மகர இலக்கின ஜாதகருக்கு சந்திரன் தான் நின்ற ராசியில் கடைசி நவாம்சத்தில் ,அதாவது ராசியின் 9- வது பாதத்தில் நிற்க 6 இக்கு உடையவன் பார்வை செய்ய கற்புக்கரசியாகவும் , தர்ம சிந்தனை உடையவர்களாகவும் ,இருப்பாள்
=.
5 . யவனரின், ஸ்திரி ஜாதகப்படி 7 இக்கு உடையவர் கேந்திரத்தில் ,,நவாம்ச ரீதியாக, 6 இக்கு உடையவன் அம்சத்திலும் ,, 6 இக்கு உடையவன்னுடன் சேர , 12 இக்கு உடையவன் பார்வை பெற ,இந்த கிரக
விதிகளில் ,ஏதானும் ஒன்றில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிக்கு பெருமை
சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி
மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும்
=.
6 .திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9, ஆகிய ராசிகளில் சுபர் நிற்க ,
அந்த பெண் புத்திர பாக்கியத்துடன், சௌக்கியமாக வாழ்வாள் ..
=
7. இரவில் பிறந்து ,இரட்டை ராசி லக்கினமாக ,அமைந்து அதாவது ரிஷபம், கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் , மீனம் ஏதானும் ஒன்று லகினமாகி அதில் சூரியன் ,சந்திரன் , அமர அந்த பெண் மஹா பாக்கிய யோகம் உண்டாகி ,தனம் , கற்பு , புத்திர ,பௌதிர ,ராஜ யோகத்துடன் வாழ்க்கை நடத்துவார் .
=
8 . லக்கினம் , ராசி , இரண்டும் இரட்டை ப்படை ராசியில் அமர ,
அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
அற்றது, மாறாக, நன்மையான பலன்கள் நடக்கும் . பெண்ணும் செஸபாக்கியவதியாக இருப்பாள்
=.
2. 7 இக்கு உடையவன் ,6 ,இல் நிற்க ,அல்லது 6,7 ,ஆம் மிடத்து அதிபதிகள் ,12- இல் நிற்க , அல்லது 6,7, மிட அதிபதிகள் ஒரே நட்ச்சத்திர சாரத்திலோ , அல்லது இருவரும் ஒரே அம்சத்தில் சேரின் , அந்த பெண் கற்பு ம் ,ஒழுக்கமும் ,அடக்கமும் , பண்பும் ,சேர்ந்த பெண்ணாக இருப்பாள் ,
=
3 .ஏழுக்கு உடையவன் இலக்கினதிலும் ,ஆறாம் அதிபதி 7 அல்லது 12
இல் இருக்க , 7,12, ஆம் இட அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் இருக்க ,அல்லது ஒருவரையொருவர் பார்வை செய்ய , இதே பலன் உண்டுபண்ணும் .
=
4 .மகர இலக்கின ஜாதகருக்கு சந்திரன் தான் நின்ற ராசியில் கடைசி நவாம்சத்தில் ,அதாவது ராசியின் 9- வது பாதத்தில் நிற்க 6 இக்கு உடையவன் பார்வை செய்ய கற்புக்கரசியாகவும் , தர்ம சிந்தனை உடையவர்களாகவும் ,இருப்பாள்
=.
5 . யவனரின், ஸ்திரி ஜாதகப்படி 7 இக்கு உடையவர் கேந்திரத்தில் ,,நவாம்ச ரீதியாக, 6 இக்கு உடையவன் அம்சத்திலும் ,, 6 இக்கு உடையவன்னுடன் சேர , 12 இக்கு உடையவன் பார்வை பெற ,இந்த கிரக
விதிகளில் ,ஏதானும் ஒன்றில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிக்கு பெருமை
சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி
மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும்
=.
6 .திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9, ஆகிய ராசிகளில் சுபர் நிற்க ,
அந்த பெண் புத்திர பாக்கியத்துடன், சௌக்கியமாக வாழ்வாள் ..
=
7. இரவில் பிறந்து ,இரட்டை ராசி லக்கினமாக ,அமைந்து அதாவது ரிஷபம், கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் , மீனம் ஏதானும் ஒன்று லகினமாகி அதில் சூரியன் ,சந்திரன் , அமர அந்த பெண் மஹா பாக்கிய யோகம் உண்டாகி ,தனம் , கற்பு , புத்திர ,பௌதிர ,ராஜ யோகத்துடன் வாழ்க்கை நடத்துவார் .
=
8 . லக்கினம் , ராசி , இரண்டும் இரட்டை ப்படை ராசியில் அமர ,
அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனி, 30 மே, 2015
மதுரையில் ஒரு மனிதாபிமானி
"முதலாளி" தொழிலாளி ரெண்டுமே நானும் என் மனைவியும் தான். ஆரம்பத்தில் 1.25 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தோம். விலை மலிவாக இருந்ததால் அரசு ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் எங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள்". கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு ஈடாக மதுரையில் ஒரு ஹோட்டலில் வெறும் 10 ரூபாய்க்கு இன்றும் உணவளிக்கப்படுகிறது…………
சனி, 16 மே, 2015
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது.!!
அவரது சாதனைகளில் சில:
1. 43 படங்களில் தனி கதாநாயகனாக
நடித்திருக்கிறார், எந்த படத்திலும் இரண்டாம்
கதாநாயகனாக நடித்து இல்லை.
நடித்திருக்கிறார், எந்த படத்திலும் இரண்டாம்
கதாநாயகனாக நடித்து இல்லை.
2. ஒரே நேரத்தில் 40 படங்களில் கதாநாயகனாக
ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே நாயகன் (கரகட்டக்காரன்
வெற்றிக்கு பிறகு) இவர் மட்டுமே.
ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே நாயகன் (கரகட்டக்காரன்
வெற்றிக்கு பிறகு) இவர் மட்டுமே.
3. 1989 முதல் 1992 வரை கால்ஷீட் full என
மூன்று வருடத்திற்கு book செய்யப்பட்ட ஒரே ஹீரோ.
மூன்று வருடத்திற்கு book செய்யப்பட்ட ஒரே ஹீரோ.
4. கமலை விட கௌதமியுடன் அதிகம்
சேர்ந்து நடித்த ஹீரோ (6 படங்கள்).
சேர்ந்து நடித்த ஹீரோ (6 படங்கள்).
5. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு படத்தில்
மட்டுமே நடித்து இருந்தாலும் இவரை எல்லோருக்கும் தெரியும்.
மட்டுமே நடித்து இருந்தாலும் இவரை எல்லோருக்கும் தெரியும்.
6. 1990 களில் 6.6% ரசிகர்களை பெற்று தமிழ்நாட்டில்
5ம் இடத்தில இருந்த ஹீரோ இவர்தான்.
5ம் இடத்தில இருந்த ஹீரோ இவர்தான்.
7. ஒரு வருடம் தொடர்ந்து (இழுத்தடிக்காமல்,
இவரே ஓட்டாமல்) தானாக ஓடிய படத்தின்
கதாநாயகன் (கரகாட்டக்காரன்).
இவரே ஓட்டாமல்) தானாக ஓடிய படத்தின்
கதாநாயகன் (கரகாட்டக்காரன்).
8. இவரே சொந்தமாக 4
படத்தினை இயக்கியது யாருக்கும் தெரியாது.
படத்தினை இயக்கியது யாருக்கும் தெரியாது.
9. ஒரு MP யாக மிகபெரிய ஒட்டு வித்தியாசத்தில்
வெற்றி பெற்ற கதை யாருக்கும் தெரியாது.
வெற்றி பெற்ற கதை யாருக்கும் தெரியாது.
10. வாய்ப்பு இல்லாத நாட்களில் தனது உடையை iron
பண்ண சென்ற மேனேஜரை பார்த்து கடைக்காரர், யார்
என்று கூட தெரியாமல் "இது என்ன ராமராஜன்
சட்டையா?" என்று கேட்டாராம். அந்த
அளவுக்கு அவரது சட்டைகள் பிரபலம்.
பண்ண சென்ற மேனேஜரை பார்த்து கடைக்காரர், யார்
என்று கூட தெரியாமல் "இது என்ன ராமராஜன்
சட்டையா?" என்று கேட்டாராம். அந்த
அளவுக்கு அவரது சட்டைகள் பிரபலம்.
11. இவரால் எந்த producerஉம் நஷ்டப்பட்டது கிடையாது
என்ன செய்வது, சமூக வலைத்தளங்களின் இலவச
கணக்குகளை கையில்
வைத்துக்கொண்டு கண்டமேனிக்கு கிண்டல்மட்டும்
செய்ய பழகிக்கொண்டோம்..
கணக்குகளை கையில்
வைத்துக்கொண்டு கண்டமேனிக்கு கிண்டல்மட்டும்
செய்ய பழகிக்கொண்டோம்..
இப்படியும் ஒரு வரலாறு.
-------------------------------------------
நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ, காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.
ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.
“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்து விடத்தான் அழைத்தேன்” என்றார். பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .
சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்
.
அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர்.
வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டு புத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.
.
அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர்.
வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டு புத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.
பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்து கொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்.? சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.
கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொது சொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.
தலை வணங்குவோம் இந்த தலைவனுக்கு..
இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? எச்சரிக்கை ரிப்போர்ட்
இப்போதெல்லாம் இந்தியாவில் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது.
எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன. எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும்.
அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது. கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள்.
நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார்.
“பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர். சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார்.
இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் :
எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.
தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு.
காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.
ஞாயிறு, 22 மார்ச், 2015
பெண்கள் ஆரோக்கியத்தை அறிய உதவும் அவசியமான ஸ்கேன் பரிசோதனைகள்..!
திருமணத்துக்கு முன்...
* அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பெண்களின் சினைப்பை நல்ல நிலையில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம்.
* 20 முதல் 30 வயதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மார்பகங்களில் புற்றுநோயல்லாத கட்டிகள் ஏதேனும் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில்...
கர்ப்ப காலத்தில்...
* முதல் ஸ்கேன் (35 முதல் 50 நாட்களில்) கர்ப்பத்தை உறுதி செய்யவும், கருவிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பைத் தெரிந்து கொள்ளவும்... ஒருவேளை இதயத் துடிப்பு இல்லை என்றால் 15 நாட்கள் கழித்து மறுபடிஇன்னொரு முறை ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். அப்போதும் இதயத் துடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கரு கலைக்கப்படும்.
* 2வது ஸ்கேன் (11 முதல் 14 வாரங்களில்) கருவின் வளர்ச்சி இயல்பாக இருப்பதை அறிந்து கொள்ளவும், குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவும்...
குழந்தையின் கழுத்துப் பகுதி அடர்த்தியை Nuchal translucency சோதனையின் மூலம் பார்த்து டவுன் சிண்ட்ரோம் உறுதி செய்யப்படும். சில நேரங்களில் இந்த என்.டி. சோதனையில் துல்லியம் தவறிப் போகலாம். அதைத் தவிர்க்க ஆட்டோ என்.டி. என்கிற லேட்டஸ்ட் சோதனை வந்திருக்கிறது.
20 வாரங்களில் குழந்தையிடம் வேறு ஏதேனும் குறை பாடுகள் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ள செய்யப்படுகிற 4டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தை தாயின் வயிற்றுக்குள் கொட்டாவி விடுவது, சொரிவது, கண்களைத் திறந்து பார்ப்பது, கால்களை உதறுவது போன்ற சேட்டைகளைக் கூடப் பார்க்க முடியும்
கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில்
குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் போதுமான அளவு உள்ளதா, தொப்புள் கொடி அமைப்பு, அது குழந்தையின் கழுத்தைச் சுற்றியுள்ளதா, குழந்தையின் தலை கீழே இருக்கிறதா, சுகப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள...
டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன் என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் போதுமான அளவு உள்ளதா, தொப்புள் கொடி அமைப்பு, அது குழந்தையின் கழுத்தைச் சுற்றியுள்ளதா, குழந்தையின் தலை கீழே இருக்கிறதா, சுகப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள...
டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன் என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
கர்ப்பிணி அல்லாதவர்களுக்கான சோதனைகள்...
* மார்பகங்களின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ, வலி தோன்றினாலோ, அக்குளில் நெறிகட்டியது போலத் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். வெறும் பத்தே நிமிடங்களில் இந்தச்சோதனையை முடிக்கலாம்.
* மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய ‘எஃப்.என்.ஏ.சி’ என்கிற fine needle aspiration cytology (FNAC) முறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் வழிகாட்டுதல்படி துல்லியமாக செய்ய முடிகிறது.
* மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதைக் கடக்கும் பெண்கள் வருடத்துக்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்து விடலாம்.
* கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தீவிரமும் இன்று மிகவும் அதிகமாக இருக்கிறது. பாப் ஸ்மியர் சோதனை யின் மூலம் கர்ப்பப்பை வாயிலிருந்து செல்களை எடுத்து புற்றுநோயைக் கண்டறியலாம். அதில் சந்தேகம் இருந்தால் எம்.ஆர்.ஐ. மற்றும் பெட் சி.டி. ஸ்கேன்களும் பரிந்துரைக்கப்படும்.
* 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்ற எலும்பு பலவீன நோய் வரும். எலும்புகளின் பலவீனத்தின் அளவைத் துல்லியமாகக் கண்டறிய ‘டெக்ஸ்சா ஸ்கேன்’ உதவும்.
35 நாளிலேயே வளரும் KFC சிக்கன்..!!
உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்ற விடையத்தை ஆங்கில ஊடகங்கள் தற்போது போட்டு உடைத்து வருகிறார்கள். இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா ? வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் "அலி". அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும்.
பின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த எண்ணை தரமான எண்ணை கிடையாது. அதில் காலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது. இவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.
இந்த சிக்கினை விரும்பி உண்ணும் பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள். இது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து பூப்படைவை ஊக்குவிக்கிறது.
மத்திய அரசாங்கத்தின் செல்வமகள் சேமிப்பு திட்டம்.::
ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு சேமிக்கலாம். 9.1% வட்டியுடன் உங்கள் சேமிப்பு எந்த வரி பிடித்தம் இல்லாமல் திரும்ப கிடைக்கும்.
ஒரு ஆண்டில் குறைந்தது ரூ 1000 இந்த திட்டத்தில் செலுத்த வேண்டும் - நாள் வாரம் மாதம் என்று எத்தனை தவணையாக வேண்டுமானாலும் செளுத்தாலம் அதிக பட்சம் ரூ 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
- இந்திய அஞ்சல் துறை சார்பில் “செல்வமகள் சேமிப்பு கணக்கு” திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
- இத்திட்டம் 11 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தை உடையவர்களுக்கு மட்டும்.
-மாதம் ரூ.500 செலுத்துகிறோம் என்றால், 14 ஆண்டுகளுக்கு ரூ.84 ஆயிரம் செலுத்தி, 21-வது ஆண்டில் ரூ.3,03,564 பெற வாய்ப்பு உள்ளது.
- தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். முதிர்வு தேதி குழந்தையின் 18-வது வயது ஆண்டில் தொடங்குகிறது.
- கல்வி மற்றும் திருமணத் தேவைக்கு, கட்டிய தொகையில் இருந்து 50 சதவீதத்தை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது உங்கள் குழந்தை 18 வயது அடையும் தருவாயில் இந்த கணக்கு இடை நீக்கம் செய்ய முடியும் அல்லது குழந்தையின் 21 வயது வரை காத்து இருந்து முழு வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.
- இதற்கு வருமான வரி சலுகை உள்ளது.
- பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம்.
- விண்ணப்பத்துடன் குழந்தையின் பிறந்த தேதி சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள சான்று, அவர்களது புகைப்படத்தை இணைத்து ஒப்படைக்க வேண்டும்.
- உங்கள் குழந்தை இந்த கணக்கை அவர்கள் படிப்பு திருமணதிற்கு பின்பும் தொடரலாம்.
முகம் தெரியாத தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கொடுத்து தலையில் துண்டு போட்டு கொள்வதற்கு பதில் அரசாங்க சேமிப்பு திட்டங்களை பயன்படுத்துங்கள்.
மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள இந்திய அஞ்சல் துறை அலுவலகத்தை அனுகவும்.
மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள இந்திய அஞ்சல் துறை அலுவலகத்தை அனுகவும்.
படித்தவர்கள் படிப்பரிவிலாத பாமர மக்களுக்கு இந்த திட்டம் குறித்து முடிந்தவரை பகிரவும். யாதுமாகி பக்கம் இந்த பதிவை தன் சொந்த செலவில் குறைத்து ஒரு லட்சம் பேரிடம் கொண்டு செல்லும்.
அப்பா
என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தையின் ஓயாத உழைப்பை
நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உருத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக நீ கொடுத்தபோது வலித்து
உன் தோள்களில் என்னோடு சேர்த்து எவ்வளவு பாறம் இருந்தாலும் நீ சோர்வுற்றதில்லை
நீ என்னை பற்றி அதிகமாகவே மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது என் மீது நீ கொண்ட நம்பிக்கை
மோசமாக சண்டையிட்டு கோபித்து பேசாமல் இருந்தாலும், நான் சாப்பிடேனா என்று வாய் தவறி கேட்டுவிடும் குழந்தைதான் என் அப்பா!
பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்!
ஒன்று கடவுள் இல்லையென்பது
இரண்டு தன் தந்தை இருக்கிறார் என்று...
நூதன மருத்துவ மோசடிகள்..
.சோரியாஸிஸ், மஸ்குலார் டிஸ்ட்ரோபி, மூளை வளர்ச்சி குறைபாடு மாதிரி பிரச்சனைகளுக்கு 100% குணம் கிடையாது, மருந்துகள் மூலம் அதை கட்டுக்குள் வைக்க மட்டுமே முடியும். ஆனால் இதை சரி செய்வதாக கூறி கல்லா கட்டுறது இப்போதைய செம பிஸினஸ் அதை எப்படிலாம் பண்றாங்கன்னு ஒரு இஞ்சக்ஷன் ரிபோர்ட்.
ஊருக்குள்ள இந்த மாதிரி பிரச்சனை உள்ள ஆட்கள் யாருன்னு தெரிஞ்சிக்க ஒரு ஃபீல்ட் சர்வே நடக்குது... அப்புறமா அவங்க கிட்ட தற்செயலா யாரோ ஒருத்தர் கடை தெருவிலோ அல்லது டீ கடையிலோ என்னங்க இப்படி இருக்கீங்கன்னு ஆரம்பிச்சு.. அங்க ஒரு டாக்டர் இருக்கார் எனக்கு இப்படி தான் இருந்துச்சு முழுசா சரியா போச்சுன்னு சொல்வார்... 'எதை தின்னா பித்தம் தெளியும்'ன்னு இருக்கிறவங்க இதை நம்பி போனா 'ரின் சோப்பு' தான் மொத்தமா உருவிருவானுங்க.
சித்த, ஆயுர்வேத மருத்துவர், யுனானி மருத்துவர்ன்னு குப்பானி வைத்தியம்ன்னு டீவில விளம்பரம் வரும். உலகத்துல தீர்க்க முடியாத வியாதி எல்லாம் தீர்க்கும் ரோசினி கீரை'ன்னு அறிமுகபடுத்துவாங்க ஆனால் அவங்களுக்கு வியாதி வந்தா மீனாக்ஷி மிஷன்ல போய் படுத்துக்குவாங்க.. இவங்க விளம்பரத்தை நம்பி போனா.. அடுத்து திருவோடு தான்.
ஆந்திரா வைத்தியர்ன்னு ஒரு க்ரூப் தெரியுது.. இவங்க ஊருக்கு வெளிய டென்ட் போட்டுக்குவாங்க, ஜிலேபிய பிச்சு போட்டா மாதிரி என்ன மொழின்னே தெரியாத எழுத்துல என்னென்னமோ எழுதியிருக்கும், இவங்க டார்கெட் ஆண்மை குறைவு / நரம்பு தளர்ச்சி தான் விபரமில்லாத விடலைல இருந்து மீண்டும் 20'க்கு ஏங்கும் 60 தான் இவங்க கன்னில சிக்குற க்ரூப், சிக்கிட்டா காற்று போன பலூன் தான் மிஞ்சும்.
வீட்டுக்கே வந்து நாடி பிடிச்சு ஜோசியமா வைத்தியமான்னு தெரியாம ஏதோ ஒன்னு பண்ணுற ஒரு க்ரூப் இருக்கு, இவங்க உங்களை நம்ப வைக்க அடிக்கிற ஒரு விசயம் 'எங்கிட்ட காசு குடுக்காதீங்க... நான் ஒரு மருந்து சொல்றேன் அதை உங்க ஊர்ல இருக்கிற சித்த மருந்து கடையில வாங்கிக்குங்க, எனக்கு 20 ரூ காணிக்கை மட்டும் போதும்'ன்னு, அப்படியே உருகி போய் ரொம்ப நல்லவருன்னுட்டு மருந்து வாங்க கடைக்கு போவீங்க.. அங்க கடைகாரன் கூட டீல் போட்டு சின்ன விபூதி டப்பாவை இவனே அடிச்ச மருந்து லேபிள் ஒட்டி 10,000 பில் போட்டு வைப்பான் நீங்களும் நம்ம்ம்ம்பி வாங்குவீங்க, அப்புறமா எல்லாம் வெம்பிடும்.
இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு அடுத்தடுத்து சொல்றேன்...
இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு அடுத்தடுத்து சொல்றேன்...
இதுக்கெல்லாம் என்ன தான்யா பண்றதுன்னு கேக்குறீங்களா... உள்ளூர்ல இருக்கிற ஒரு படிச்ச மருத்துவரை போய் பாருங்க, சந்தேகத்தோட கேள்வி கேளுங்க, உங்க வியாதியை பற்றி விளக்க சொல்லுங்க, 4 தடவை போனா தெளிவா தெரிஞ்சிடும், பெரிய அளவில பில் போட்டா என்ன காரணம்ன்னு கேளுங்க, மருந்து பெயர் கேளுங்க, 4 இடத்துல விசாரிச்சு வாங்குங்க, தலையில துண்டை போட்டுட்டு போய் எந்த வைத்தியமும் பாக்காதீங்க.. நேர்மையா ஆமா எனக்கு வியாதி இருக்கு என்ன இப்போன்னு நெஞ்சை தூக்கிட்டு போய் மருத்துவம் பாருங்க, மனுஷன்னா வியாதி வராமலா இருக்கும்??
முக்கியமா ரொம்ப கூட்டமா இருக்கிற மருத்துவரை முடிந்த அளவுக்கு தவிருங்க... புது மருத்துவர்கள் இன்னும் ஆர்வமா பொறுமையா பார்ப்பாங்க.. அதனால அவங்களையும் ஆலோசனை பண்ணுங்க. Keep Enjoying with your problems... After all we are human beings..
5 விதமான தோஷங்கள்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும்
1.வஞ்சித தோஷம்: பார்க்கக் கூடாத படங்கள், வெறிïட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.
2.பந்த தோஷம்: நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.
3. கல்பித தோஷம்: பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்
4.வந்தூலக தோஷம்: ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
5. ப்ரணகால தோஷம்: திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.
புதன், 18 மார்ச், 2015
வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?
உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.
வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும். இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்கவேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்சவேண்டும். சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.
ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும். அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்கவேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் குணமாகும். ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும்.
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும். பத்து கொன்றை மரப்பூக்களை 100மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுபுண், குடற்புண் ஆகியன குணமாகும். சீதளபேதியை குணப்படுத்த 100மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும்.
1தம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்த்துள்ள சளி எல்லாம் கண் காணத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். பின்பு 1டீஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்கவேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதை கடந்தவர்கள் தினனும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும்.
சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள். ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம்!
“இந்த நூற்றாண்டில், திடீர் திடீரென நோய்கள் பரவி, பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. நம் முன்னோர்கள், பல காய்ச்சல்களுக்கும் கண்டறிந்துவைத்துள்ள மருந்துகளை நாம்தான் கண்டுகொள்வதும் இல்லை. உபயோகிப்பதும் இல்லை. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே `கபசுரம்’ என்று வகை பிரித்து, மருந்தும் சொல்லியிருக்கிறார் யூகி முனி என்ற மாமுனிவர். இப்போது மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சலும் இந்த கபசுரத்துக்குள் அடங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
“பன்றிக்காய்ச்சல் வரக் காரணம் என்ன?”
“எச்1என்1 (H1N1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின நுண்ணுயிரிதான் (Mutated virus) இந்தக் காய்ச்சலுக்குக் காரணம். மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் குப்பையில் கொட்டப்படும் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை அழுகிய நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து உருவாகும் நுண்ணுயிரி இது. அங்கிருந்துதான் நம் நாட்டுக்குப் பரவியிருக்கிறது. அந்த நாடுகளின் சீதோஷ்ண நிலையில் இது வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் அவ்வளவு வேகமாகப் பரவாது.”
“எப்போது இந்த வைரஸ் பரவும்? எல்லோருக்கும் தொற்றுமா?”
“பொதுவாக, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில்தான், எல்லா வைரஸ்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த வைரஸும் அப்படித்தான் பரவும். காற்று மூலம் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கி, கபத்தை உண்டாக்கும். முக்கியமாக, காசநோய் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தொற்றி, நோயை இன்னும் தீவிரமாக்கிவிடும்.”
“கபசுரக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?”
“மூக்கு, தொண்டை போன்ற மேல் சுவாசப் பாதை (Upper respiratory tract) உறுப்புகளைத்தான் இந்தக் கிருமி முதலில் தாக்கும். எனவே, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, தொண்டையில் தொற்று, தொண்டை வலி எனக் காய்ச்சல் வரை போய் நிற்கும்.”
“சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து உள்ளதா?”
“யூகி முனி என்ற சித்தர், காய்ச்சலை 64 வகைகளாகப் பிரித்துள்ளார். உலகிலேயே வேறு எங்கும், இத்தகைய பகுப்பு கிடையாது. இப்போது பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படும் காய்ச்சலுக்கு உரிய தன்மையையும் அதைக் குணப்படுத்துவதற்கு மருந்தையும் கூறியிருக்கிறார். ‘கபசுரக் குடிநீர்’ என்னும் மருந்து, இந்தக் காய்ச்சலைப் போக்கும் என்பது, அவருடைய ‘யூகி வைத்திய சிந்தாமணி’ என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும், வந்த பின் குணமளிக்கும் மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம்.”
“கபசுரக் குடிநீர் என்றால் என்ன?”
“நிலவேம்புக் கஷாயம் போலவே, இதுவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இந்த மருந்தில் நிலவேம்பும் ஓர் உட்பொருளாகக் கலந்துள்ளது.
நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, அக்ரஹாரம், கண்டுபாரங்கி (சிறு தேக்கு), ஆடாதொடை வேர், சீந்தில், கோஷ்டம், கற்பூரவள்ளி, கோரைக் கிழங்கு உள்ளிட்ட 15 மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துதான் கபசுரக் குடிநீர். இந்தத் தூளை 10 கிராம் (2 டீஸ்பூன்) எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து, அரை டம்ளராக வற்றியதும், இறக்கி, வடிகட்டி, காலையிலும் மாலையிலும் உணவுக்கு முன் அருந்த வேண்டும். ஒரு முறை செய்துவைத்த மருந்தை, அடுத்த வேளைக்குப் பயன்படுத்தாமல், அவ்வப்போது புதிதாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
நோய் வருவதற்கு முன் தடுப்பு மருந்தாகக் குடிக்க நினைப்பவர்கள், 30 மி.லி எடுத்தால் போதும். தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்வதென்றால் மூன்று நாட்களும், சிகிச்சையாக எடுத்துக்கொள்வதென்றால் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்ப 15 நாட்கள் வரையிலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கபசுரக் குடிநீர், சித்த மருந்துக் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.
டெங்குக் காய்ச்சல் பரவியபோது, நிலவேம்புக் குடிநீர் பற்றிய தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டு, ஊடகங்களில் விளம்பரப்படுத்தியதன் விளைவாக, மக்களுக்கு நல்ல விழிப்புஉணர்வு ஏற்பட்டது. அதேபோல இந்தக் கபசுரக் குடிநீர் பற்றியும் அரசு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு, ஊடகங்களில் பெரிய அளவு விளம்பரப்படுத்தி, மக்களிடையே பன்றிக் காய்ச்சல் குறித்துப் பரவியுள்ள பீதியைக் குறைக்கவேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்தி நோயைத் தடுத்துக்கொள்ள, அரசு முயற்சி எடுக்க வேண்டும்.”
பன்றிக் காய்ச்சல்... என்ன டயட்?
1.வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.
2.வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.
3.குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.
4.அன்னாசிப் பழம் மிகவும் நல்லது. உணவில் சேர்க்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கு அரசு வழங்கும் ‘டேமிஃப்ளூ’ மாத்திரைகளில் அன்னாசி கலந்துள்ளது.
5.பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம்.
எளிய - வலிய சில மருந்துகள்!
தொண்டையில் தொற்று, வலி மற்றும் கரகரப்பு ஆரம்பிக்கும்போதே, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும்.
மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறு துண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்துகொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப்பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும்
பெண்களை வசியம் செய்ய
சில குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.
விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...
இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காதலி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..
இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.
வெள்ளிக்கிழமை தினம் தன் நட்சத்திர பட்சி ஆட்சி செய்யும் வேளையில் மிளகு சாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து கிழக்கே போகும் வேரை எடுத்து வசிய மந்திரம் (யநமசிவ) என்று 1008 உரு சொல்லி தாயத்தில் அடைத்துக் கட்டிக்கொண்டால் பார்க்கும் அனைத்து பெண்களும் வசியமாவார்கள்.
எந்த வசிய முறையையும் குரு வழிகாட்டுதலுடன் செய்ய உடனே பலன் தரும்..
ஆண் - பெண் வசிய விளக்கம் :
1. ஆடை :
வசியமாக்க வேண்டியவரின் ஆடை (அவர் பயன்படுத்திய உடை ) ஒன்றில் அவர் பெயரையும் வசிய மந்திரத்தையும் எழுதி பூஜையில் வைத்து தீபமேற்றி காலையும் மாலையும் தீபசுடரில் காட்டி வரவேண்டும். இப்படி செய்ய வசியமாக வேண்டியவர் உங்களுக்கு வசியமவார்.
2. தலைமுடி :
வசியமாக்க வேண்டியவரின் தலைமுடியினை கொண்டுவந்து துளசி செடியின் வேரை பிடுங்கி அதில் தலைமுடியை சுற்றி பூஜையில் வைத்து காலை மாலை வசிய மந்திர உருவேற்ற வேண்டும் இவ்வாறு செய்தால் 7 நாட்களில் வசியமாகும்.
3.ஐவகை எண்ணெய் :
ஐவகை எண்ணையை ஒரு பாட்டிலில் கலந்து வசியமாக வேண்டியவரின் பெயரை சொல்லி வசிய மந்திர உருவேற்றி ஒரு சுரையில் அடைத்து இடுப்பில் கட்டிக்கொள்ள 21 நாளில் வசியம்.
4. ஐவகை வேர் :
ஐவகை வேர்களை கொண்டுவந்து எரித்து சாம்பலாக்கி அதை பூஜை தட்டில் பரப்பி ஆண் - பெண் வசிய சக்கரம் அதில் எழுதி வசிய மந்திர உரு செய்து அந்த சாம்பலை ஒரு தாயத்தில் அடைத்து கட்டிக்கொண்டு அல்லது நெற்றியில் வைத்துக்கொண்டு மீதி சாம்பலை வசியமாக்க வேண்டியவரின் மேல் தூவ 7 நாளில் வசியமாம்.
5.சிறுநீர் :
குப்பை மேனி செடியை பிடுங்கி கொண்டுவந்து வசியமாக்க வேண்டியவரின் சிறுநீரை பிடித்து அதில் மூன்று நாள் ஊறவைத்து பின் குப்பை மேனியின் வேரை துண்டித்து வசிய மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிய வசியமாகும்.
6.தாலிப்பனை ஓலை :
வசியமாக்க வேண்டியவரின் வீட்டிலிருந்து 7 உப்பு கற்களை எடுத்து வந்து ஒரு தாலிப்பனை ஓலையில் வசிய சக்கரம் வரைந்து அதில் வசியம் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி பூஜையில் வைத்து வசிய மந்திர உருவேற்றி அந்த தாலிப்பனை ஓலையில் வசியம் செய்ய வேண்டியவரின் வாசல் படியில் வலது பக்கம் பூமியில் புதைக்க வேண்டும். அந்த 7 உப்பு கற்களையும் வசியமாக்க வேண்டியவரின் வீட்டில் தண்ணீர் உள்ள இடத்தில் போட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்தால் வசியமாம்.
ஆண் - பெண் வசியத்தில் இன்னும் பல முறைகள் உள்ளன. இருப்பினும் வாசகர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சில முறைகளை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறேன்
திதி சூன்ய ராசிகளும் கிரகங்களும்
நமது ஜோதிட சாஸ்திரத்தில் திதிகள் மிக முக்கியமானவை . பஞ்சாங்கம் என்பது பஞ்ச அங்கங்களை கொண்டது . அவை வாரம் (நாள் ), திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகும். இந்த பஞ்ச அங்கங்களும் மனிதனின் ஜாதகத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன.
நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி 15 திதிகள் உள்ளன. பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இந்த 15 திதிகளில் எதாவது ஒரு திதியில்தான் பிறந்தாக வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு என்று ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு திதியில் பிறக்கும் மனிதருக்கும் அந்த திதியால் நன்மையான பலன்களும், சில கெடுபலன்களும் கலந்தே நடக்கும்.
அதிலும் முக்கியமான ஒரு விசயமும் உண்டு. நீங்கள் பிறக்கும் திதியால் உங்கள் ஜாதகத்தில் சில இராசிகள் விஷ சூன்ய இராசிகளாக மாறும். இதன் பலனாக அந்த ராசியும் (இராசியின் காரகத்துவ பலன்களும் )அதில் உள்ள கிரகங்களும் ( கிரகங்களின் காரகத்துவ பலன்களும் ) விஷ சூன்ய பலன்களை ( அதன் கெடு பலன்களை ) தரும். அதன் விபரங்களை கீழே காணலாம்.
திதிகள் விஷ சூன்ய இராசிகளும், கிரகங்களும்
1.பிரதமை - மகர இராசி, வளர்பிறை சந்திரன்.
2.துவிதியை - தனுசு, மீன இராசி, வளர்பிறை சந்திரன்.
3.திருதியை - மகர இராசி, வளர்பிறை சந்திரன், சூரியன்.
4.சதுர்த்தி - கும்ப இராசி, வளர்பிறை சந்திரன்.
5.பஞ்சமி - மிதுனம், கன்னி இராசி, வளர்பிறை சந்திரன்.
6.சஷ்டி - மேஷம், சிம்ம இராசி.
7.சப்தமி - தனுசு, கடக இராசி.
8.அஷ்டமி - மிதுனம், கன்னி இராசி.
9.நவமி - சிம்மம், விருட்சிக இராசி.
10.தசமி - சூரியன்.
11.ஏகாதசி - தனுசு, மீன இராசி, தேய்பிறை சந்திரன்.
12.துவாதசி - மகர இராசி, தேய்பிறை சந்திரன்.
13.திரயோதசி - தேய்பிறை சந்திரன், சூரியன்.
14.சதுர்தசி - மிதுனம், கன்னி, தனுசு, மீன இராசி, தேய்பிறை சந்திரன்.
15.அமாவாசை அல்லது பெளர்ணமி - திதி சூன்யம் இல்லை.
இவ்வகையில் திதி சூன்யம் பெற்ற இராசியில் உள்ள கிரகங்களும், திதி சூன்யம் பெற்ற கிரகங்களும் பிறந்த லக்னத்திற்க்கு 6, 8, 12 ல் இருந்தாலோ அல்லது சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கை அல்லது பகை மற்றும் நீச இராசியில் இருந்தால் திதி சூன்ய கிரகத்திற்கு விலக்கு ஆகும். இந்த அமைப்புகள் இல்லையென்றால் அதற்கு உண்டான சரியான பரிகாரங்களை செய்து சரிபடுத்தி கொள்ளலாம்
நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி 15 திதிகள் உள்ளன. பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இந்த 15 திதிகளில் எதாவது ஒரு திதியில்தான் பிறந்தாக வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு என்று ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு திதியில் பிறக்கும் மனிதருக்கும் அந்த திதியால் நன்மையான பலன்களும், சில கெடுபலன்களும் கலந்தே நடக்கும்.
அதிலும் முக்கியமான ஒரு விசயமும் உண்டு. நீங்கள் பிறக்கும் திதியால் உங்கள் ஜாதகத்தில் சில இராசிகள் விஷ சூன்ய இராசிகளாக மாறும். இதன் பலனாக அந்த ராசியும் (இராசியின் காரகத்துவ பலன்களும் )அதில் உள்ள கிரகங்களும் ( கிரகங்களின் காரகத்துவ பலன்களும் ) விஷ சூன்ய பலன்களை ( அதன் கெடு பலன்களை ) தரும். அதன் விபரங்களை கீழே காணலாம்.
திதிகள் விஷ சூன்ய இராசிகளும், கிரகங்களும்
1.பிரதமை - மகர இராசி, வளர்பிறை சந்திரன்.
2.துவிதியை - தனுசு, மீன இராசி, வளர்பிறை சந்திரன்.
3.திருதியை - மகர இராசி, வளர்பிறை சந்திரன், சூரியன்.
4.சதுர்த்தி - கும்ப இராசி, வளர்பிறை சந்திரன்.
5.பஞ்சமி - மிதுனம், கன்னி இராசி, வளர்பிறை சந்திரன்.
6.சஷ்டி - மேஷம், சிம்ம இராசி.
7.சப்தமி - தனுசு, கடக இராசி.
8.அஷ்டமி - மிதுனம், கன்னி இராசி.
9.நவமி - சிம்மம், விருட்சிக இராசி.
10.தசமி - சூரியன்.
11.ஏகாதசி - தனுசு, மீன இராசி, தேய்பிறை சந்திரன்.
12.துவாதசி - மகர இராசி, தேய்பிறை சந்திரன்.
13.திரயோதசி - தேய்பிறை சந்திரன், சூரியன்.
14.சதுர்தசி - மிதுனம், கன்னி, தனுசு, மீன இராசி, தேய்பிறை சந்திரன்.
15.அமாவாசை அல்லது பெளர்ணமி - திதி சூன்யம் இல்லை.
இவ்வகையில் திதி சூன்யம் பெற்ற இராசியில் உள்ள கிரகங்களும், திதி சூன்யம் பெற்ற கிரகங்களும் பிறந்த லக்னத்திற்க்கு 6, 8, 12 ல் இருந்தாலோ அல்லது சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கை அல்லது பகை மற்றும் நீச இராசியில் இருந்தால் திதி சூன்ய கிரகத்திற்கு விலக்கு ஆகும். இந்த அமைப்புகள் இல்லையென்றால் அதற்கு உண்டான சரியான பரிகாரங்களை செய்து சரிபடுத்தி கொள்ளலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)