எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 28 மார்ச், 2020

பிரபல மலையாள எழுத்தாளர்வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன்

.

ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்... காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர்.

"என்ன, பர்ஸை காணலியா?" கல்லாவில் இருந்த முதலாளி கர்ஜித்திருக்கிறார்.
பஷீர் பலஹீனமான குரலில், "ஆம். வரும்போது எடுத்துக் கொண்டுதான் வந்தேன்."

முதலாளி நக்கல் சிரிப்புடன், "எல்லோரும் இதையேதான் சொல்றாங்க. ம்ம்ம்.. நீ போட்டிருக்கற டிரஸ்ஸை கழட்டி கல்லா மேல வச்சுட்டு அம்மணமா போ. அப்போதான் புத்தி வரும்."

கூனிக் குறுகிப் போகிறார் பஷீர். வேறு வழியின்றி ஜிப்பாவை கழட்டி கல்லா மேஜையில் வைத்து விட்டு தலை குனிந்து நிற்க,
முதலாளி குரல் : "ம்...வேஷ்டியையும் கழட்டு."

நாணத்தால் நடுங்கிப் போகிறார் பஷீர். சுற்றிலும் பார்க்கிறார். எழுபது எண்பது பேர் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஒருவரும் உதவத் தயாராக இல்லை. எல்லோர் கண்களும் ஒரு சக மனிதனின் ஆடையில்லா தோற்றத்தை காண ஆவலோடு காத்திருந்தன.

வேறு வழியின்றி பஷீர் தனது வேஷ்டியை அவிழ்க்க கை வைத்தபோது, ஹோட்டலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் : "நிறுத்துய்யா."

பார்க்கிறார் பஷீர். ஒரு மனிதன்
அழுக்கு லுங்கி பனியனுடன் நிற்கிறான். "வேஷ்டியை அவுக்காதே பெரியவரே, முதல்ல ஜிப்பாவை எடுத்து போடு. யோவ் முதலாளி, அவர் உனக்கு எவ்வளவு தரணும். எடுத்துக்கோ."

கல்லாவில் காசை விட்டெறிந்து விட்டு, பஷீரை வெளியே அழைத்து வருகிறான் அந்த மனிதன்.

நிம்மதி மூச்சோடு நிமிர்ந்து பார்த்த பஷீரிடம் அவன் கேட்கிறான் : "ஏன் பெரியவரே,பர்ஸை ஜாக்கிரதையா வச்சுக்க கூடாதா ? இந்தா , இதில் உன் பர்ஸ் இருக்கா பாரு."

அவன் லுங்கி உள்ளே இருந்து பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை எடுத்துப் போடுகிறான். அதில் அவரது பர்சும் இருக்கிறது.
பஷீர் அவன் முகத்தை பார்க்கிறார்.
"என்ன பெரியவரே அப்படி பாக்கிறே ? நான் திருடன்தான். ஆனால் மனிதாபிமானம் இல்லாதவன் அல்ல."

இந்த சம்பவம் பற்றி ஒரு கதையே எழுதி இருக்கிறாராம் பஷீர். அதில் சொல்கிறார் : "அவ்வளவு நேரம் அவனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் பெயரை கேட்க மறந்து விட்டேன். அதனால் என்ன ? ஒன்று அறம் அல்லது கருணை. இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயராக இருக்க முடியும்."

வைக்கம் முகம்மது பஷீர் வாழ்க்கை எனக்கு ஒன்றை உணர்த்துகிறது.

ஒரு எழுத்தாளனின் கடமை தனது எழுத்தின் மூலம் அன்பையும் மனித நேயத்தையும் மலரச் செய்வதே ! 

அதை நிறைவாகவே செய்து விட்டு போயிருக்கிறார் வைக்கம் முகம்மது பஷீர்.

*****************************************************************

திங்கள், 23 மார்ச், 2020

மீன் பிரியாணி!

தேவையான பொருட்கள்:

2 சுண்டு பசுமதி அரிசி
900 மி.லீட்டர் தண்ணீர் (800 மி.லீட்டர் தண்ணீர் + 100 மி.லீட்டர் தேங்காய்ப்பால்)
100 மி.லீட்டர் தண்ணீர் (மசாலா அவியவிட)
3 மே.கரண்டி எண்ணை
1 தே.கரண்டி கடுகு
1 தே.கரண்டி சின்னச்சீரகம்
3 ஏலக்காய்
1 மே.கரண்டி மிளகு (விரும்பினால்)
1 அன்னாசிப்பூ
1 துண்டு கறுவாபட்டை
5 கராம்பு
2 பிரியாணி இலை
300 கிராம் வெங்காயம்
3 தக்காளி
1/2 உள்ளி
1/2” இஞ்சி
1/2 - 1 மே.கரண்டி கரம்மசாலா
1 மே.கரண்டி செத்தல்தூள்
1 மே.கரண்டி மல்லித்தூள்
1/2 மே.கரண்டி சீரகத்தூள்
1/2 தே.கரண்டி மஞ்சள்
உப்பு
கறிவேப்பிலை
1 சிறங்கை மல்லிஇலை
புதினாஇலை (விரும்பினால்)
3 பச்சைமிளகாய் (விரும்பினால்)

மீன் மசாலா:
500 கிராம் மீன்
1/2மே.கரண்டி செத்தல்தூள்
உப்பு
1/2 தே.கரண்டி மஞ்சள்
தேசிப்புளி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து “மீன் மசாலா” பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அரிசியைக் கழுவி தண்ணீர் விட்டு குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
ஊற வைத்த மீனை பொரித்து எடுக்கவும்.

இஞ்சி மற்றும் உள்ளியை அரைத்து அல்லது இடித்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு மிதமான தீயில் சூடகாக்கவும். அதில் கடுகு, சின்னச்சீரகம், ஏலக்காய், மிளகு, அன்னாசிப்பூ, கறுவாபட்டை, கராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றைப் போடவும். கடுகு வெடிக்கத் தொடங்கும் போது அதில் வெங்காயத்தைப் போடவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், அதனுடன் இஞ்சி உள்ளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக வெட்டி வைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் செத்தல்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் 100 மி.லீட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தக்காளிக்கலவையில் விட்ட தண்ணீர் வற்றி பிரண்டு வரும் பொழுது, அதில் தண்ணீர், தேங்காய்ப்பால், கரம்மசாலா, மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து கலக்கவும்.

அரிசியைச் சேர்த்துக் கலந்து உப்பு சுவை பார்த்து, பச்சை மிளகாய் மற்றும் மீன் துண்டுகளை அரசியின் மேல் வைத்து மூடி அவிய விடவும்.
அதி கூடிய வெப்பத்தில் 3 நிமிடங்களும், அடுத்ததாக அளவான வெப்பத்தில் 3 நிமிடங்களும் அவிய விட்டு, அடுப்பை அனைத்து, அப்படியே அடுப்பில் 10 நிமிடங்கள விடவும். அல்லது மிதமான தீயில் அரிசி அளவிற்க்கு தண்ணீர் வற்றும் வரை அவிய விட்டு அடுப்பை அனைத்து, அப்படியே அடுப்பில் 10 நிமிடங்கள விடவும். விரும்பினால் கலந்து பரிமாறவும்.
சுடச் சுட மீன் பிரியானி தயார்!

குறிப்பு:
1 பங்கு அரிசிக்கு 1 1/2 பங்கு தண்ணீர் சேர்க்கவும்.
தேங்காய்ப்பாலின் அளவை விரும்பிய அளவில் கூட்டிக் குறைக்களாம். ஆனால் அவிய விடும் பொழுது தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பாலின் அளவு, அரிசியின் அளவில் 1 1/2 மடங்காக இருக்க வேண்டும்.

மீன் உருண்டை / கேக்!


தேவையான பொருட்கள்:

900 கிராம் மீன்
3 முட்டை
1 தே.க மஞ்சள்
1/2 மே.க மிளகாய்த்தூள்
1/2 மே.க முளகுதூள்
உப்பு
1/2 மே.க தேசிப்புளி
300 மி.லீட்டர் பால்
3 மே.க உருளைக்கிழங்குமா/ கோதுமை மா
1 தே.க வெட்டுத்தூள்
3 மே.க மல்லிஇலை
மாஜரின்/ எண்ணை


செய்முறை:

மீனிலிருந்து தோல் மற்றும் முள்ளை அகற்றி, சுத்தம் செய்யவும்.
மீனை சிறு சிறு தண்டுகளாக வெட்டி, அதனை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் முட்டை, மஞ்சள், மிளகாய்த்தூள், முளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து, பசைத்தன்மையாக நன்கு அரைக்கவும்.

அதனுடன் பால் மற்றும் உருளைக்கிழங்குமா/ கோதுமை மா சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும் (களிப்பதம்). அதனுடன் வெட்டுத்தூள் மற்றும் மல்லிஇலை சேர்த்து நன்கு கலந்து, குறைந்தது 30 நிமிடங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
ஒரு தாச்சியில் சிறிது மாஜரின்/ எண்ணையை விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.

உள்ளங்கையை ஈரமாக்கி, அதில் சிறிது மீன் கலவையை வைத்து விரும்பிய அளவில் உருட்டி / தட்டி சூடான தாச்சியில் போட்டு, பொண்ணிறமாக பொரித்து எடுக்கவும். சுடச் சுட தக்காளி சோஸ்ஸுடன் பரிமாற, சுவையாக இருக்கும்.

குறிப்பு:
இரவு குழைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, காலையில் பொரித்து, பிள்ளைகளுக்கு பாடசாலை உணவாக கொடுத்து விடலாம்.
மசாலாக்களை உங்கள் ருசிக்கேற்ப கூட்டிக் குறைக்கவும்.
உருளைக்கிழங்குமா/ கோதுமை மாவிற்று பதிலாக அவித்த உருளைக்கிழங்கு சேர்க்கலாம்.

சொக்லேட் கேக்! (முட்டை, பால் தவிர்த்தது)



 தேவையான பொருட்கள்:

250 கிராம் மா
250 கிராம் சீனி (-/+)
3 மே.க கொக்கோ (-/+)
1/2 மே.க வனிலா (-/+)
1 தே.க பேக்கிங்சோடா
1/2 தே.க பேக்கிங்பவுடர்
1 சிட்டி உப்பு
200 மி.லீ தண்ணீர்
50 மி.லீ கோப்பி
100 மி.லீ எண்ணை
1/2 மே.க தேசிப்புளி / வினாகிரி

சொக்லேட் கிறீம்:
250 கிராம் ஐசிங்சுகர் (-/+)
3 மே.க கொக்கோ (-/+)
1/2 தே.க வனிலா (-/+)
2 மே.க கோப்பி
100 கிராம் பட்டர்

செய்முறை:

கேக்:
ஒரு பாத்திரத்தில் மா, சீனி, கொக்கோ , வனிலா, பேக்கிங்சோடா, பேக்கிங்பவுடர் மற்றும் உப்உ ஆகியவற்றை ஒன்றாக அரித்து வைக்கவும்.
தண்ணீர், கோப்பி, எண்ணை மற்றும் தேசிப்புளி / வினாகிரியை மாக்கலவையினுள் விட்டு, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
பேக்கிங் தட்டில் (22 x 22 செ.மீ ) அல்லது 26 செ.மீ வட்ட தட்டில் கேக் கலவையை விட்டு சம்பபடுத்தவும்.
கேக்கை 175˚C ல் அண்ணளவாக 35 - 40 வேக விடவும். கேக்கை பேக்கிங் தட்டஉடனேயே ஆற விடவும்.

சொக்லேட் கிறீம்:
ஒரு பாத்திரத்தில் சொக்லேட் கிறீமில் குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
உங்கள் விருப்பத்திற்கேற்ப கேக்கை அலங்கரிக்கவும்.

குறிப்பு:
கோப்பி சேர்க்காமல் செய்வதென்றால், மேலதிகமாக 50 மி.லீ தண்ணீர் சேர்க்கவும் ( 200 மி.லீ தண்ணீர்+
50 மி.லீ தண்ணீர் = 250 மி.லீ தண்ணீர்)
கேக்கை அலங்கரிக்கும் போது கேக்கின் அடியில் எல்லா பக்கமும் பேப்பர் வைத்து, பக்கங்கள் முழுவதும் ஐசிங் பூசி சமப்படுத்தி, அதன் பின் பேப்பர்அகற்றினால், கேக் தட்டில் ஐசிங் வராது.

திங்கள், 9 மார்ச், 2020

நேத்து நடந்த மேட்ச்சில் நாம் படு தோல்வி அடைந்திருக்கலாம்



நேத்து நடந்த மேட்ச்சில் நாம் படு தோல்வி அடைந்திருக்கலாம்

ஆனால் உண்மையான கிரிக்கெட் ஜெயித்து இருக்கிறது . ஆண்டாண்டு காலமாக ஆண்கள் கிரிக்கெட்டிற்கு கூட்டங்கள் சேர்ந்து வந்த நிலையில் முதல் முறையாக 86000 மக்கள் நேரில் வந்து போட்டியை பார்த்துள்ளனர். 

2015 இதே மைதானத்தில் நடந்த ஆண்கள் உலககோப்பை இறுதி போட்டியில் கூடிய கூட்டம் 93,000 பேர்.

1999ம் ஆண்டு நடந்த பெண்கள் புட்பால் மேட்ச்சில் அமெரிக்கா மற்றும சீனாவுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது கூடிய கூட்டம் 90,000  இது தான் பெண்களுக்கான போட்டியில் அதிகம் பேர் பார்த்த போட்டி.

இந்த இரண்டு சாதனைகளை எப்படியாவது முறியடிக்க வேண்டும என்று #FilltheMCG என்று பிரசாரங்கள் முன்னெடுக்கபட்டது . மிட்செல் ஸ்டார்க் இரண்டு நாளைக்கு முன்னாடி சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து பைனல் போட்டியை பார்ப்பதற்காக அனுப்பிய செய்தியை மீடியாக்களில் பரவ செய்து ரசிகர்களின் இறுதி நேர வருகையை இன்னும் அதிகபடுத்தினார்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. 
இந்த முன்னெடுப்பு காரணமாக 86,000 பேர் போட்டியை பாக்க வந்திருந்தார்கள் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்தால் வாழ்நாளில் மறக்கமுடியாத சாதனையாக இருந்திருக்கும் தவறிவிட்டது பரவாயில்லை. 

சரி இப்படி கூட்டம் கூடியதால் என்ன நண்மை என்று பார்த்தால் ஏகப்பட்ட விசயங்கள் ஒளிந்திருக்கிறது. 

நேத்து கூடிய கூட்டத்தை பார்த்து கண்டிப்பாக பிசிசிஐ கண்கள் உறுத்தியிருக்கும் நாமளும் இதே மாதிரி செய்தால் என்ன என்று. 

120 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் கூட்டம் கூட்டவா சிரமம் வந்துவிட போகிறது. இவ்வுளவு நாள் ஆண்கள் விளையாடும் போட்டிக்கு மட்டும் முக்கியதுவம் கொடுத்து வந்த பிசிசிஐ நேற்று நடந்த மேட்ச்சை பார்த்து கண்டிப்பாக Womens IPL ஐ  முன்னெடுக்கும். கங்குலி அதை சிறப்பாக செய்வார் என்றே என்னுகிறேன். ஏற்கெனவே அந்த ஐடியாவை செயல் அளவில் வைத்திருந்த பிசிசிஐ இனி முழு வீச்சில் முன்னெடுக்கும்.

அப்படி பெண்கள் ஐபில் ஆரம்பிக்கபட்டால் ஏகப்பட்ட  வீராங்கனைகள் பயன்பெறுவார்கள். ஷபாலி வர்மா மாதிரி இன்னும் நிறைய வீரர்கள் விளையாட முன் வருவார்கள் இந்தியாவின் அத்தனை பகுதிகளில் இருந்தும் . அனைத்து பகுதிகளிலும் Womens cricket பிரபலபடுத்தப்படும்.

கனா படத்தில் வரும் விராங்கனைகளை   சினிமாக்களில் மட்டும்  பாத்துகொண்டிருந்தவர்களுக்கு நிஜ கனா விராங்கனைகளை பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

ஆனால் இதைபற்றி எல்லாம் பேசாமல் எல்லா பயலும் நேத்து அவனவன் Favorite ஐ வச்சு சண்டை போட்டுக்கிட்டு இருக்கிங்க.

யார் அதிக கப் வாங்குனா யார் அதிக ரன் அடிச்சு ஜெயிக்க வச்சாங்க அவர் மட்டும் தான் பெருசு இல்ல இல்ல எனக்கு இவர் தான் பெருசு என்று ஒரே அட்டாக் போஸ்ட். திருந்துங்கடா டீ வாங்கிதரேன். 

 .