எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 19 நவம்பர், 2019

மகேந்திரசிங் தோனி ஜாதக ஆய்வு


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 1981-ம் வருடம்,ஜூலை மாதம்,7-ந்தேதி காலை 11-15 மணிக்கு பிறந்தவர்.இவருடைய நட்சத்திரம் உத்திரம்,ராசி கன்னி,லக்கினமும் கன்னி.ராசியும்,நட்சத்திரமும் ஒரே அமைப்பாக சில பேருக்குதான் இந்த் மாதிரியான அமைப்பு இருக்கும் இது சிறப்பான அமைப்பாகும்.

இவர் 7-ம் எண்ணாகிய கேது ஆதிக்கத்தில் பிறந்துள்ளா இந்த கேது ஞானக்காரகன் எந்த சந்தர்ப்பத்திலும் அலட்டிக்கொள்ளாத மனநிலையை கேது கொடுக்கக்கூடியவர்.

நட்சத்திரங்களிலேயே உத்திரம் நட்சத்திரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு
அது என்னவென்றால் உத்திரம் என்பது ஆங்கிலத்தில் beam என்பார்கள் அதாவது ஒரு கட்டிடத்தை தோளில் தாங்கக்கூடியது உத்திரம்! அதுபோல் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இள வயதிலேயே வயதுக்கு மீறிய பக்குவத்தையும்,ஞானத்தையும் அடைந்திருப்பார்கள் அது கிரிக்கெட் வீரர் தோனிக்கு மிகவும் பொருந்தும்.

இவர் கன்னியா லக்கினம். லக்கினத்திலேயே கன்னியாக லக்கினக்காரர்கள் அமைதியான சுபாவத்தால் எதையும் சாதிக்கக்கூடியவர்கள் மேலும் இவர் ஜாதகத்தில் ஆச்சரியபடும்படி அழகான யோக அமைப்புகள் பல காணப்படுகின்றன.லக்கினத்திலேயே குரு சந்திர யோகம்,கஜகேசரி யோகம்,குரு மங்கல யோகம்,புத ஆதிபத்திய யோகம் என சொல்லிக்கொண்டே போகலாம்.சூரியனின் திக் பலம் பத்தாமிடம் ஆகும். அந்த பத்தாமிடத்தில் லக்கினாதிபதி புதன் ஆட்சி பெற்று இருப்பது மிகப்பெரிய சிறப்பாகும்.

10-ல்  சூரியன்,புதனும் இருந்தால் அராசங்க உத்தியோகம்,அரசாங்க அனுகூலம் இருக்கும் என்பது ஜோதிட விதி அது இவருக்கும் பொருந்துகிறது.லாபஸ்தானமான 11-ல் சுக்கிரன் ராகுவுடன் இணைந்து வலுப்பெற்று இருப்பதால் விளையாட்டு துறையில் பல சாதனைகளை புரிந்தார்.அதேபோல் இளவயதில் மனதில் விரும்பிய பென்ணையே மணந்தார் இருந்தாலும் இந்த சுக்கிரன் ராகு சேர்க்கை பெண் சபலத்தையும் உண்டு பண்ணக்கூடியது.

5-ல் கேது இருப்பதும்,11-ல் ராகு சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பதும் விபரீத ராஜ யோகமாகும் அதுமில்லாமல் இப்போது நடக்கும் ராகு திசை எல்லோரும் ஆச்சரியப்படக்கூடிய உயரத்தை அவருக்கு கொடுத்தது அதுமில்லாமல் வரப்போகும் அடுத்தடுத்த கிரகங்களும் இவருக்கு யோகத்தை கொடுக்கக்கூடியது.இவர் ஜாதகத்தின் முக்கிய விசயங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..,

*தற்போது அரிஷ்டாடம சனி நடப்பதால் இவர் கிரிக்கெட் விளையாடுவதுல் பல இடையூறுகளை சந்திக்கிறார்.இதனால் ஆட்டத்திறனும் பாதிக்க படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக