எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

புதன், 18 மார்ச், 2015

பெண்கள் கொலுசு அணிவது ஏன்?.




நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
 
வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.
அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.
உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

6 வகை தானங்கள்

தானம் செய்யும் போது உங்களை அறியாமல் ஒரு கர்வம் ஒட்டிக்கொள்ளும். எப்பாடுபட்டாவது அதை துடைத்து எறியுங்கள். நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி இருக்கும். நீங்கள் ஒரு சிறு கருவி மட்டுமே. ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் என்ற விவரம் வருமாறு:-



ஆடைகள் : ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நல்லது. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.


தேன் : புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.


நெய் : பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12-ம் அதிபதியின் திசை) நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கல கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகலவிதமான நோய்களும் தீரும்.


தீபம் : இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழைகளுக்கும், கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.


அரிசி : பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழைகளுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.


கம்பளி - பருத்தி : வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

குபேரன் அருளைப் பெறுவோர் யார்


காளிதாசர் தனது உத்தர காலா மிர்தம் நான்காவது காண்டப் பாடலில் குபேரன் அருளைப் பெறுவோர் யார் என்று குறிப்பிட்டுள்ளார். ராஸ்யம் சோசுய பாஸ்ரராஜ்ய சுபபௌதீ வந்த்வஸ்தபா சார்தாயர்ட்ச பதீச ககவரா சைகத்ர வாந்யோந்ய பே இதன்படி, 

1. ஒரு கிரகம் ராசிக்கட்டத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் அதிபதியும் அதே கிரகம் சுவாம்சத்தில் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டு அதிபனும், லக்னாதிபதியும்.


2. 9,10-க்கு உரியவர்களும், 3,4,5,7-க்கு உரியவர்களும் 2,11-க்கு உரியவர்களும். ஆக இப்படியான நான்கு விதமான ஸ்தானாதிபதிகளின் அமைப்பு வகைகளுள் பரிவர்த்தனையோ, ஸ்தான அதிபதிகள் சேர்க்கையோ நட்டி, ஆட்சி, உச்ச வீட்டில் இருந்து பரஸ்பர பார்வையோ ஏற்பட்டால் அந்த ஜாதகர்களுக்கு குபேரன் யோகம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி புத்திர விருத்தி, அகலாத சொத்து ஆகியன உண்டாகும்.


கோடீஸ்வர யோகம்: இந்து லக்கினமானது அபகிரகங்களின் வீட்டில் அமைந்து அந்த வீட்டில் குரு, சுக்ரன் சேர்ந்திருப்பதோ, பூரண சந்திரன் சுக்ரச் சேர்க்கை, சுக்ரன் புதன் சேர்க்கை, பூரணச் சந்திரன் குரு சேர்க்கை, குரு புதன் சேர்க்கை ஆகி இருந்தால் ஒருவர் தன் ஜாதகப்படி கோடீஸ்வரர் ஆக குபேரன் அருளைப் பெற்றுத் திகழ்வார்.


பொதுவாக ஒருவர் ஜனன ஜாதகத்தில் இந்து லக்னத்தில் உச்சக் கிரகங்கள் இருந்தால் பல லட்சங்களுக்கு அதிபதியாகி குபேரயோகத்தைப் பெற்றிருப்பார். அடுத்ததாக, ஒரு ஜாதகரின் இந்து லக்னத்தில் அதிகமான சுபக் கிரகங்கள் இருந்தால் அவர் குபேரனது கடைக்கண் பார்வையைப் பெற்று மகா பிரபுவாக விளங்குவார். எல்லா கிரகங்களும் 1,2,4,5,7,8,10,11-ம் இடங்களில் மட்டும் இருந்து கிரக மாலிகா யோகம் அமைந்தால் அவர் கோடீஸ்வர மகா பிரபு ஆவார்.

திங்கள், 16 மார்ச், 2015

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி...

அறிந்த விளக்கம் :


யாரோ ஒரு புண்ணியவான்
போன போக்கில்
ஐந்தும் பெண்
பெற்றால்
அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட,
நாளடைவில்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி
பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில்
புயல் அடிக்க செய்து விட்டனர்..
உண்மை அதுவல்ல..

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்..
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்..
இவர்களை கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம்
இங்கு பயன்படுகிறது...

செய்வினை தோஷம்

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.



ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-


முதலில் குலதெய் வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.


அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்

கண் திருஷ்டிக்குப் பரிகாரம்

கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள்.



அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம். சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும்.


அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம்.


இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது. சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள்.


இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.


ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.


வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது

தவறவிட்ட ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை ஒப்படைத்த தமிழக பெண்:

'தவறவிட்ட ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை ஒப்படைத்த தமிழக பெண்: 
#வறுமையிலும்_நேர்மை
பாராட்ட நினைத்தால் பகிருங்கள் Must Share
கணவர் கைவிட்ட நிலையில் குழந்தையோடு வறுமையில் போராடினாலும் நேர்மை மட்டும் மாறவில்லை

கேரள மாநிலம் மூணாறு அருகே பழைய துணி சேகரிப்பின்போது கிடைத்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை, உரியவரிடம் ஒப்படைத்த கோவையைச் சேர்ந்த லட்சுமியை போலீசார் உட்பட பலரும் பாராட்டினர்.

கோவையைச் சேர்ந்தவர் லட்சுமி, 24. கணவர் கைவிட்டதால் 7 வயது மகளுடன் கேரள மாநிலம் திருச்சூர் அருகே வாடானப்பள்ளியில் சிறிய ஷெட்டில் வசித்து வருகிறார். அப்பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று பழைய துணிகளை சேகரித்து வாழ்க்கை நடத்துகிறார்.

இரு நாட்களுக்கு முன்பு அஞ்சேரி பகுதியில் துணிகளை சேகரித்தார். அவற்றை விற்கும் முன்பாக, தனது வீட்டுக்குச் சென்று ஒவ்வொரு துணியாக எடுத்து மடித்து வைத்தார். ஒரு சட்டையில் இருந்து ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி கீழே விழுந்தது. வியப்படைந்த லட்சுமிக்கு அது யாரிடம் பெற்ற சட்டை எனத் தெரியவில்லை.

ரூ. ஒரு லட்சத்துக்கும் மேல் விலை மதிப்புள்ள தங்கச்சங்கிலியை கண்டு ஆசைப்படாத அவருக்கு, அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமே என்ற கவலையே மேலோங்கியது. எனவே அதை வாடானபள்ளி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு, வீடு திரும்பினார்.

இதற்கிடையே அஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் மனைவி விஜி, தங்கச் சங்கிலியுடன் பழைய துணியை ஒரு பெண்ணிடம் கொடுத்ததை உணர்ந்து பதறினார். அப்பகுதி முழுவதும் தேடி அலைந்தும் அப்பெண்ணை காண முடியாததால் வாடானபள்ளி போலீசில் புகார் அளிக்கச் சென்றார்.

போலீஸ் ஸ்டேஷனில் தனது தங்கச்சங்கிலி இருந்ததைக் கண்டு அதிசயித்தார். விசாரித்தபோது லட்சுமியின் நேர்மை தெரிந்தது. வாடானப்பள்ளி எஸ்.ஐ., சஜின்சசி, ஏழைப் பெண் லட்சுமியை வரவழைத்து, அவர் மூலம் விஜியிடம் சங்கிலியை ஒப்படைத்தார். வறுமையிலும் நேர்மை அவருக்கு பெருமை சேர்த்துள்ளது. போலீசார் உட்பட அனைவரும் அவரை பாராட்டினர்.

உங்களுக்காக ஒருவன் உங்களில் ஒருவன்
 சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)
இழந்தவர்களின் வலியை உணர்ந்ததால்தான் திரும்பி ஒப்படைத்துள்ளனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை
 வாழ்க வளமுடன்-தமிழ் வாழ்க-தமிழன் வாழ்க'

 





வறுமையிலும் நேர்மை‬


கணவர் கைவிட்ட நிலையில் குழந்தையோடு  
வறுமையில் போராடினாலும் நேர்மை மட்டும் மாறவில்லை

கேரள மாநிலம் மூணாறு அருகே பழைய துணி சேகரிப்பின்போது கிடைத்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை, உரியவரிடம் ஒப்படைத்த கோவையைச் சேர்ந்த லட்சுமியை போலீசார் உட்பட பலரும் பாராட்டினர்.
கோவையைச் சேர்ந்தவர் லட்சுமி, 24. கணவர் கைவிட்டதால் 7 வயது மகளுடன் கேரள மாநிலம் திருச்சூர் அருகே வாடானப்பள்ளியில் சிறிய ஷெட்டில் வசித்து வருகிறார். அப்பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று பழைய துணிகளை சேகரித்து வாழ்க்கை நடத்துகிறார்.
இரு நாட்களுக்கு முன்பு அஞ்சேரி பகுதியில் துணிகளை சேகரித்தார். அவற்றை விற்கும் முன்பாக, தனது வீட்டுக்குச் சென்று ஒவ்வொரு துணியாக எடுத்து மடித்து வைத்தார். ஒரு சட்டையில் இருந்து ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி கீழே விழுந்தது. வியப்படைந்த லட்சுமிக்கு அது யாரிடம் பெற்ற சட்டை எனத் தெரியவில்லை.
ரூ. ஒரு லட்சத்துக்கும் மேல் விலை மதிப்புள்ள தங்கச்சங்கிலியை கண்டு ஆசைப்படாத அவருக்கு, அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமே என்ற கவலையே மேலோங்கியது. எனவே அதை வாடானபள்ளி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு, வீடு திரும்பினார்.

இதற்கிடையே அஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் மனைவி விஜி, தங்கச் சங்கிலியுடன் பழைய துணியை ஒரு பெண்ணிடம் கொடுத்ததை உணர்ந்து பதறினார். அப்பகுதி முழுவதும் தேடி அலைந்தும் அப்பெண்ணை காண முடியாததால் வாடானபள்ளி போலீசில் புகார் அளிக்கச் சென்றார்.
போலீஸ் ஸ்டேஷனில் தனது தங்கச்சங்கிலி இருந்ததைக் கண்டு அதிசயித்தார். விசாரித்தபோது லட்சுமியின் நேர்மை தெரிந்தது. வாடானப்பள்ளி எஸ்.ஐ., சஜின்சசி, ஏழைப் பெண் லட்சுமியை வரவழைத்து, அவர் மூலம் விஜியிடம் சங்கிலியை ஒப்படைத்தார். வறுமையிலும் நேர்மை அவருக்கு பெருமை சேர்த்துள்ளது. போலீசார் உட்பட அனைவரும் அவரை பாராட்டினர்.
உங்களுக்காக ஒருவன் உங்களில் ஒருவன்
சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)
இழந்தவர்களின் வலியை உணர்ந்ததால்தான் திரும்பி ஒப்படைத்துள்ளனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை
வாழ்க வளமுடன்-தமிழ் வாழ்க-தமிழன் வாழ்க

“தமிழ் சினிமாவின் புதிய கூட்டணி?”



லிங்கா படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த மாபெரும் வெற்றிப்படமான "கத்தி" படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டாரை இயக்கவுள்ளார்.


இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இம்மூவரின் புதிய கூட்டணி தான் இப்பொழுது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இப்படத்தின் வேலைகள் மிகவும் ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

ஞாயிறு, 15 மார்ச், 2015

மூன்று தோற்றங்களில் ஜீவா நடிக்கும் புதிய படம், ஜோடி நயன்தாரா?


1398497402-1616

















யான் படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த ஜீவா, இயக்குனர் ராம்நாத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில் ஜீவா முன்றுவித கெட்டப்புகளில் தோன்றுகிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடம் ஏற்றுள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, விடி விஜயன் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்கம் சீனு.
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்துக்கு அம்பாசமுத்திரம் அம்பானிஃபேம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவுடன் மீண்டும் பிரபுதேவா – அட, இவங்க சேட்டையைப் பாருங்க

1426309052-2913





















முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள் என்றதுமே, இது நம்ம ஆளு படத்தின் சந்தை மதிப்பு சடாரென்று எகிறிது.
ஜோடியை வைத்தே கோடிகள் அள்ளலாம் என்ற சூத்திரம் அறியாதவர்களா திரையுலகினர்?
தெலுங்கு, தமிழில் தயாராகும் த்ரில்லர் படத்தில் பிரபுதேவாவை நடிக்க கேட்டிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் ஒருவர். யுஎஸ்ஸில் நடப்பதாக இந்த த்ரில்லரின் கதை எழுதப்பட்டுள்ளது.
இதில் நயன்தாரா பிரபுதேவாவுடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகியதாக தகவல். ஆனால், அப்படியொரு ஆஃபருடன் யார் வந்தாலும் கதவடைப்பு என்பதில் உறுதியாக உள்ளார் நயன்தாரா.
சிம்புவுடனான காதல் முறிவை ஜீரணித்துக் கொண்டவரால் பிரபுதேவா ஏற்படுத்திய ரணத்தை இன்னும் மறக்க முடியவில்லையாம். கடைசிவரை என்னோட ஒரே வில்லன் மாஸ்டர்தான் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள்.
நியாயம்தானே.