எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் விஜய் ஆண்டனி

bd343941-283d-4146-b3b4-0b57a4eec734_S_secvpf

இசையால் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, ‘நான்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சலீம்’ படத்தில் நடித்தார்.
கடந்த வருடம் வெளியான இப்படத்தில் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். இப்படமும் எதிர்பார்த்தளவிற்கு நன்றாகவே ஓடியது. இதைத்தொடர்ந்து ‘இந்தியா பாகிஸ்தான்’ என்னும் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் படத்தை பார்த்த விஜய் ஆண்டனி, 2 மணி நேரம் 37 நிமிடங்கள் படத்தின் நீளம் என்றும், இப்படம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.
புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

விஷாலின் சண்டக்கோழி 2 மே 1ம் தேதி தொடங்குகிறது

6a5ff393-5bab-44d4-85f6-bc4ee32ff278_S_secvpf

விஷால்-லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். ராஜ்கிரண், மலையாள நடிகர் லால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இதே கூட்டணி மீண்டும் இணையப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இவர்கள் இணையும் புதிய படம் மே 1-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. லிங்குசாமி ‘அஞ்சான்’ படம் தோல்விக்குப் பிறகு நீண்ட நாட்களாக புதிய படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படம் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்னும் கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்படாத நிலையில், ராஜ் கிரண் மட்டும் விஷாலுக்கு அப்பாவாக நடிக்கவிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கும் சூர்யாவின் புதிய படம் 24

1398254957-2779
மாஸ் படத்தில் நடித்துவரும் சூர்யா வரும் ஏப்ரலில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடிக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூல்டை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
காரைக்குடியிலும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக்ஷன் அட்வெஞ்சராக 24 தயாராகிறது.

விஜய்யுடன் பாடப்போகும் ஸ்ருதி


1424930880-3056

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாட ஆரம்பித்துள்ளார். துப்பாக்கியில் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக தொடங்கியது.
சிம்புதேவன் இயக்கும் புலியில் விஜய்யுடன் ஸ்ருதியும் நடிக்கிறார். இருவருமே சிறந்த பாடகர்கள். இருவரையும் வைத்து டூயட் பாடலை பாட வைக்க வேண்டும் என்பது சிம்புதேவன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் விருப்பம்.
விஜய்யும் அவர்களின் விருப்பத்துக்கு ஓகே சொன்னதாக தகவல்.
புலியின் ஆடியோ உரிமையை சமீபத்தில்தான் சோனி மியூஸிக் வாங்கியது.

ஆண்களே உங்களுக்கு விரைவாக தாடி மீசை வளர வேண்டுமா?



தற்போது ஃபேஷனானது அதிகரித்து வருகிறது. அதிலும் இதுவரை உடைகள், ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் தான் ஃபேஷன் இருந்தது. மேலும் இதுவரை ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசைமற்றும் 

தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள். ஆனால் இப்போது ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடியை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சிலரால் நல்ல அடர்த்தியான மீசையை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பார்க்கலாமே!!!

புரோட்டீன் உணவுகள்
உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

அடிக்கடி ஷேவிங்
மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலும்

செரிமான பிரச்சினைக்கு சில தீர்வுகள்



வெதுவெதுப்பான தண்ணீர்
 உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும்.

அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்.

எலுமிச்சைப் பழச்சாறு

காலையில் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுவதில் விருப்பம் இல்லை என்றால் அதற்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தலாம்.

தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை தவறாமல் அருந்தி வந்தால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவற்றை நீக்கி, அருமையான செரிமானத்திற்கு வழங்கும்.

மசாஜ்

செரிமானம் தங்கு தடையின்றி நடைபெற ஓய்வாக இருக்கும் போது, வயிற்றுப் பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து

கோடியில் ஒருவருக்கு அமையும். பானு யோகம்


1ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் ஆகிய 6 இடங்களில் நவநாயகர்கள் அனைவரும் வீற்றிருக்க அந்த அமைப்பிற்க்கு "பானு யோகம்" என்று பெயர்

இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர் அனைத்து விசயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை வசதிகள் நிறைந்து அமைதியயும் ஆனந்தத்தையும் அனுபவிப்பார்.

மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன்



2003-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமான் சிலையில் திடீரென்று ஒரு மச்சம் தோன்றியது. அவரது வலது கன்னத்தில் மேல்புறம் சிவப்பு நிறத்தில் அது காணப்பட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பரவசம் ஆனார்கள். இங்குள்ள முருகப்பெருமானும் ‘மச்சக்காரன்‘ ஆனார்

வியாழன், 26 பிப்ரவரி, 2015

நீங்கள் பால் கொடுக்கும் போது கோபப்பட்டால் அந்த பாலே குழந்தைகளுக்கு விஷமாகி விடுமாம்


கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பைகூட ஏற்படுத்துகிறதாம். 

எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.

கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.

கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும்.

தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆண்கள், பெண்களுக்கு வழுக்கை விழுந்த பின்பு மீண்டும் முடி வளர சில குறிப்புகள்


தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.

முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விடயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன.

புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால் நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.

நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.

ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.

தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.

ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விடயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15, 20 முடிகள் உதிரலாம்.

பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.

தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு. முதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும்.

இரண்டாவது நிலை, கேடகன் (சிணீtணீரீமீஸீ). நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும். மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.

தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

3. அலோபேசியா ஏரியாட்டா.

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:

* ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

* இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.

* மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.

* சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.

* சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.

* நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:

* பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம்.

* பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.

* சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.

* ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

* கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.

அலோபேசியா ஏரியாட்டா:

* வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விடயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

* தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.

* இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு.

* உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை, அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.



தலைமுடி மீண்டும் வளர

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

* முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

* தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

* செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

* முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

* புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.