ஞாயிறு, 17 ஜனவரி, 2021
ஆரோக்கியத்துக்கு உறுதுணையாகும் தேங்காய்
குளுக்கோஸ் பவுடர் எந்தெந்த பொருள் சேர்த்து தயாரிக்கிறார்கள்? இதை சாப்பிடுவதால் நன்மையா தீமையா?
- சுக்ரோஸை (கரும்பு சர்க்கரை) நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் அல்லது சல்பூரிக் அமிலத்துடன் சுமார் இரண்டு மணி நேரம் வேகவைத்து குளுக்கோஸ் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும்.
- இது சுக்ரோஸை குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸுக்கு ஹைட்ரோலைஸ் செய்கிறது.
- பிரக்டோஸிலிருந்து குளுக்கோஸைப் பிரிக்க அதை குளிரூட்டுவர்.
- அவ்வாறு குளிரூட்டும் போது அதில் ஆல்கஹால் சேர்க்கப்படும்.
- இதன் மூலம் குளூக்கோஸ் பெறப்படும்.
- இதனால் நன்மையா? தீமையா? என்று கூறும்போது நன்மைதான்.
- ஆனால் அதுவும் அளவுடன் இருப்பது நன்று.
- அளவுக்கு மீறும்போது இதனால் ஒருசில உடல்நலக் கேடும் ஏற்படலாம்.
கடைகளில் வாங்கி சாப்பிடும் கிரில் சிக்கன் உடலுக்கு நல்லதா?
கடைகளில் கிடைக்கும் கிரில் சிக்கன்.. அஜினோமோட்டோ… கலர் பவுடர் சேர்த்து.. பாமாயில் கலந்து மசாலா கலவையில் மேரினேட் செய்து சுட்டு எடுக்க படும்..
அதில் எண்ணெய் குறைவாக இருந்தாலும்.. ஆரோக்கியமான உணவு என்று சொல்லி விட முடியாது . அதற்கு துணை உணவாக வரும் மயோனைஸ் கூட எண்ணெயை நுரைத்து வர அடித்து செய்ய படுபவை தான்.. வயிற்று புண் உண்டாகும்.
டயட் மெய்ன்டெயின் செய்ய நீங்களே சமைத்து சாப்பிடுவதே சிறந்தது..
என் தம்பி செய்யும் ரொம்பவும் சிம்பிளான பேலியோ ரெசிபி சொல்கிறேன்..
ஒரு முழு சிக்கனை தோலுரித்து… அளவான சைஸ் துண்டுகளாக வாங்கி கொள்ளவும்..
ஒரு மூன்று முறை.. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து கழுவி சுத்தம் செய்யவும்.
குக்கரில்.. தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு.. சீரகம் ஒரு ஸ்பூன்.. கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து.. பின் சுத்தம் செய்து வைத்த சிக்கன் சேர்த்து.. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்..ஒரு பச்சை மிளகாய்… ஒரு பெரிய வெங்காயம் வெட்டி சேர்த்து.. ஒரு சிறிய தக்காளி சேர்த்து.. அரை ஸ்பூன் கரம் மசாலா தூள்.. கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி…கால் ஸ்பூன் மஞ்சள் தூள் …அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி.. குக்கரை மூடி.. ஸ்டீம் வந்தவுடன்.. வெயிட் போட்டு.. இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
பின்பு பிரஷர் ரீலீஸ் ஆனவுடன்.. சூடான சிக்கன் சூப் உடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால்.. அருமையான பேலியோ சிக்கன் .. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. பிரச்சினை இல்லை..
வயிற்றுக்கு உகந்தது.... உடலுக்கு நல்லது.. slow electric cooker வாங்கி கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும்.