எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

புதன், 16 நவம்பர், 2016

4ஜி Smart போனை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ விலை ரூ.1,000 தான்.!!

4ஜி இண்டர்நெட் சேவையை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ரிலையன்ஸ் ஜியோ அடுத்த அதிரடி தகவல் வழங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலையில் ஸ்மார்ட்போன் கருவிகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.


ஸ்மார்ட்போன்

முன்னதாக வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பீச்சர் போன்களை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல் தெரிவிக்கின்றன.

   

விலை

மலிவு விலை கருவி என்பதால் புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி கருவியின் விலை ரூ.1,000/- அல்லது ரூ.1,500/- வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

   

தட்டுப்பாடு

4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் கருவிகளை வெளியிட ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

   

லைஃப்

ரிலையன்ஸ் லைஃப் பிரான்டு 4ஜி திறன் கொண்ட கருவிகளை ஏற்கனவே விற்பனை செய்து வருகின்றது. இவை மற்ற நிறுவன கருவிகளை விடக் குறைவான விலையில், துவக்க விலை ரூ.2,999 முதல் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

   

அம்சங்கள்

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட இருக்கும் கருவியானது ரூ.1,000 விலை கொண்டிருக்கும் என்றாலும் இதில் ஸ்ப்ரெட்ரம் 9820 பிராசஸர், அதிகத் திறன் கொண்ட கேமரா, பெரிய டிஸ்ப்ளே, வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

திங்கள், 14 நவம்பர், 2016

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் இதனை செய்து பயன்பெறலாம்.

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

* ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து அதை மிதமாக சூடுபடுத்தவும்.

* மிதமாக சூடேறிய எண்ணெயில் தேவையான அளவு மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடங்கள் சூடாக்கி பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

* சூடு ஆறிய எண்ணையை இரு காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூச வேண்டும்.

* இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.

* இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

குறிப்பு : இரண்டு நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது. சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி!

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்

பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.

எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.

இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.

அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.

லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் உலக நாடுகள்


அடுத்து வரும் காலங்களில் எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.


அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தேங்காய் தூள் மற்றும் எல்கி பயன்படுத்தி ருஹுனு பல்கலைகழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினால் புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டீசலுக்கு இணையான திறன் புதிய எரிபொருளில் உள்ளதாக விஞ்ஞான பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னா ரூபசிங்கவின் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.


உலகம் முகம் கொடுக்கும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய எரிபொருள் காணப்படும் என இலங்கை விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.




திருமணம் ஆனவர்கள் மட்டும் இதை படிக்கவும்.

உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, காய்ச்சல், சளி போன்ற நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, உடலுறவு வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.

14 நாளில்

பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20% பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்சி செய்த_பின்னர்

உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.

மன உளைச்சல்

ஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளிவர உடலுறவு வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது

உடலுறவுக்கு பின் கொஞ்சி விளையாடினால் வேகமாக கருத்தரிக்கலாம் என்பது தெரியுமா?

இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது.



இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாகும். அதுமட்டுமின்றி, ஆண்கள் எப்போதும் உடலுறவு கொண்ட பின் கொஞ்சி குலாவுவதில்லை என்று பெரும்பாலான பெண்கள் புகார் தெவிரிக்கின்றனர்.

இச்செயலால் நிறைய பெண்களும் வருத்தப்படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டுமானால், அதற்கு உடலுறவிற்கு பின்னான கொஞ்சல்கள் மிகவும் முக்கியமானது. இதை ஒவ்வொரு ஆண்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்னணியில் நிறைய காரணங்களும் உள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஹார்மோன் வெளியீடு

உச்சக்கட்ட இன்பத்தை அடையும் ஆணின் உடலில் டோபமைன் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும். அதுவே பெண்ணிடம் என்றால் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும்.

ஹார்மோன் அதிகமாக சுரக்கும் தருணம்

உடலுறவு கொண்டு உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது மட்டும் தான் பெண்களின் உடலில் நல்ல மனநிலையை உணர வைக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கப்படும் என்று நினைக்காதீர்கள். உடலுறவுக்கு பின்னும் அப்பெண்ணிடம் அந்த ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படும்.

ஹார்மோன் செயல்

பெண்களின் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தம்பதியருக்குள்ளான பந்தத்தை வலுப்படுத்தும். தம்பதிகளுக்குள் பந்தம் வலிமையடையும் போது, ஒரு பெண்ணின் மனம் குழந்தையைச் சுமக்க தயாராகும். இப்படி நேர்மறை எண்ணங்கள் உடலில் அதிகரிக்கும் போது, வேகமாக கருத்தரிக்கக்கூடும்.

இதர நன்மைகள்

உடலுறவுக்கு பின் ஆண்கள் மனைவியைக் கொஞ்சுவதால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். அதில் பெண்களின் இனப்பெருக்க சுழற்சி சரியாக நடைபெறும், குழந்தை உருவாக உதவியாக இருக்கும் மற்றும் தாய்ப்பால் உற்பத்தி சுழற்சி சரியாக தூண்டப்படும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியம்

முக்கியமாக உடலுறவு கொண்ட பின் துணையுடன் கொஞ்சி விளையாடுவதால், அப்பெண் நல்ல பாதுகாப்பையும், சௌகரியத்தையும் உணர்ந்து, எளிதில் கருத்தரிக்க உதவும். அதுமட்டுமின்றி, அது இருவருக்கும் ஓர் நல்ல தருணமாகவும் இருக்கும்.


ஆண்மை தன்மை அதிகரிக்க செய்யும் வாழைப்பூ!

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை



சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இதேபோல் இரத்த மூலத்தால் மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும்.. இந்த நோய் கண்டவர்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறைந்து. விடும்

வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்குகின்றது.

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும் மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக ரத்த போக்கு உண்டானால் அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் ரத்தபோக்கு கட்டுப்படும். மேலும் உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்..

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் நிச்சயம் பெறுவர்.


ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது



என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான்.

அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.

மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.

சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.

மிளகு தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.

இஞ்சி தண்ணீர்

இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மஞ்சள் தண்ணீர்

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

எலுமிச்சை தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சீடர்

வினிகர் காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

குளோரெல்லா தண்ணீர்

இந்த பானம் உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.


RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!!

personal computerகணிணியின் முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random access memoryஎன்பது. இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். Virtual memory தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும்.

பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது.. இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு திறன்கொண்ட Ram-ம் வந்துவிட்டது.


Ram -ன் பயன்பாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். RAM எதற்கு என்றால், நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disc சென்று தகவலைப்பெற நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில் தகவலைப்பெறவுமே இந்த RAM -ஐ கணினியில் இணைக்கிறோம்.
ddr ram

RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள் இருத்தி நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது. இதனால்தான் கூடுதலாக நாம் கணினியில் RAM ஒன்றை இணைத்திருப்போம்.. இதனால் கணினியின் வேகம் கூடுவதோடு நமக்குத் தேவையான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கிறது.

இதையும் மீறி கணினியின் வேகம் குறைந்தால் அதற்கு ஒரு மாற்றுவழியாக இதைச் செய்யலாம். அதாவது நமது ஹார்ட் டிஸ்கின் Space அதிகமாக இருந்தால் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நினைவகத்தை RAM போன்றே மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்.

செய்முறை:-

1. முதலில் XP யின் My computer செல்லவும்.
2. properties
3. system properties தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் விண்டோஸ் விஸ்டா (Windows vista) உபயோகிப்பாளராக இருந்தால்  Control panel==>Properties==> Performance Option ==>Advance system setting==> Setting ==> setting==>Advanced தேர்வு செய்யவேண்டும்.

பிறகு

Virtual memory ==> Automatically manage paging file size for all drives தேர்வு செய்யுங்கள். அங்குள்ள Check box கண்டிப்பாக டிக் செய்யுங்கள்.

பிறகு, எந்த டிரைவில் உங்களுக்கு அதிக ஸ்பேஸ்(sapce) இருக்கிறதோ அந்த டிரைவை தேர்வு செய்யவும். உதாரணமாக நம் கணினியில் C drive, D drive, E drive என்ற நேமிங் இருக்கும். அதில் உங்களுக்கு அதிக காலியிடம் உள்ள டிரைவ்-ஐ தேர்வு செய்யவும். எடுத்துக்காட்டாக C, அல்லது D அல்லது E தேர்வு செய்யவும்.

நீங்கள் C drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .

அங்கு custom managed size என்பதை செலக்ட் செய்து Initial Size மற்றும் Maximum Size ஆகியவைகளை MB அளவுகளில் கொடுத்துவிட்டு "Set" என்பதை கிளிக் செய்யுங்கள். முடிந்தது.

இனி உங்கள் கணியின் virtual memory அதிகரித்துவிட்டது. என்ன நண்பர்களே செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் கேளுங்கள்..!!

மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள். உங்கள் பின்னூட்டம் எனது முன்னேற்றம்..!! நன்றி நண்பர்களே..!!


இந்தப் பதிவு பயன்மிக்கதாக இருந்ததா? மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள். உங்கள் பின்னூட்டம் எமது முன்னேற்றம்..!! நன்றி நண்பர்களே..!!

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! கணிணிக்குறிப்புக்கள்!!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....