எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - சிம்மம்: 2020


சிம்மம்:



சிம்ம ராசிக்காரர்களுக்கு 2020-ம் வருடம் நல்லபலன்களைத் தரும் வருடமாக இருக்கும். குறிப்பாக சென்ற வருடத்தை விட பொருளாதார மேன்மைகளும் நல்ல பணவரவும் நிலையான வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளும் இந்த வருடம் இருக்கும்.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் நடந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்லவிதமாக அமைந்துள்ள நிலையில், வருட ஆரம்பத்தில் ஜனவரி 24ம் தேதி நடக்க விருக்கும் சனிப்பெயர்ச்சியும் உங்களுக்கு மிகப் பெரிய

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- கடகம்: 2020

கடகம்:



கடக ராசிக்காரர்களுக்கு 2020ம் வருடம் மிகவும் நல்ல பலன்களை செய்யும். கெடுபலன்கள் எதுவும் இந்த வருடம் நடக்க வாய்ப்பில்லை. வருடத்தின் ஆரம்ப நாளிலும், வருடம் முழுமையும் கிரக நிலைமைகள் நன்றாக இருப்பதால் 2020 ஆம் வருடத்தை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
ஒரு முக்கிய பலனாக வருட ஆரம்பத்தில் இளம் பருவத்தினருக்கு திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். சிலர் இந்த ஆண்டு துவக்கத்திலேயே

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- மிதுனம்: 2020

மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் 2020 புத்தாண்டு நிதானமான பலன்கள் நடக்கும் ஆண்டாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தடைகளுக்குப் பின் நிறைவேறும் வருடம் இது.

இந்த வருடத்தின் கிரகநிலைகளை எடுத்துக் கொண்டால் சுபக்கிரகமான குரு வருடம் முழுவதும் ஏழாமிடத்தில் இருப்பது ராசியைப் பார்ப்பது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு. இன்னுமொரு சிறப்பு அம்சமாக அவர் சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் இருக்கிறார் என்பதால் வருடம் முழுவதுமே குருவின் மூலமாக நல்ல பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- ரிஷபம்: 2020


ரிஷபம்:



ரிஷப ராசிக்காரர்களுக்கு 2020ம் வருடம் நல்லபலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடந்த மூன்று வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத ரிஷபத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான ரிஷபத்தினர் சாதகமற்ற பலன்களை அனுபவித்து வந்தீர்கள். இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதம் 24ம் தேதி உங்கள் ராசிக்கு

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம்: 2020

-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

 மேஷம்:



மேஷ ராசிக்காரர்களுக்கு 2020 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடந்த வருடம் கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத மேஷத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

வருட ஆரம்பமே ஒன்பதாமிடத்தில் குரு அமர்ந்து அமர்க்களமாக ஆரம்பிப்பதால் இந்த வருடம் மிகுந்த நன்மைகள் உண்டு. உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது. பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக

மரவள்ளிக்கிழங்கின் மருத்துவ பயன்கள்


மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். எனவே, அவற்றின் பயன் பற்றி பார்ப்போம்.

1. மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலினை இக்கிழங்கின் நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

2. இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று

சனி, 7 டிசம்பர், 2019

செல்வம் நிலைக்க -2

"பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்."

வாஸ்துபடி நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து 
செலவு வரவு செய்ய வேண்டும்..?
''பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க

கார்த்திகை பிள்ளையார் விரதம்

.

பிள்ளையாருக்கு பல விரதங்கள் கடைபிடித்தாலும்,இந்த கார்த்திகை மாதம் ஆரம்பிக்கும் விரதம் மிக சிறப்பு வாய்ந்தது!

இதை "குமார சஷ்டி"விரதம் என்பார்கள்.

இந்த விரதம் வரும் பௌணர்மிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி  அன்று முடிக்க வேண்டும்.

சனியனே என்று ஏன் திட்டக் கூடாது!!


சனியனே மூதேவி என்று திட்டினால் என்ன நடக்கும் என தெரியுமா?*

நாம் பொதுவாகவே, கோபமாக இருக்கும்போது குழந்தைகளையோ, மற்றவர்களையோ சனியனே என்று திட்டிவிடுவோம். ஆனால் அப்படி யாரையும் நாம் சனியனே என திட்டக்கூடாது. அவ்வா
று திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் நினைத்து, சனீஸ்வர பகவான் அவர் மீது தன் முழு பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். அதனால் அவ்வாறு சனியனே என்று திட்ட கூடாது!!!

 *ஆபத்தான சொல்!!*

சனீஸ்வரனை மந்தமான கடவுள் என்று அனைவரும் கூறுவர். அவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு. மேலும் சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களை விடவும் மெதுவாகவே சூரியனை சுற்றி வருகிறது என்பதால் அறிவியல் ரீதியாகவும் அப்படி சொல்லப்படுகிறது. அவ்வாறு வருகையில் சனி ஒருவரது எண்ணம், சொல், செயல் என்ற மூன்று விதத்தில் ஆக்ரமிப்பார். ஒருவரது எண்ணத்தில் சனியன் வந்துவிட்டால் அவரது வார்த்தைகளிலும் அதன்
பிரதிபலிப்பு இருக்கும். அந்த வகையில் "சனியனே" என்ற  சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரது நாவில் இருந்து அந்த வார்த்தை வந்து விட்டால் சனி அடுத்து அவரது செயலிலும் வந்து விடுவார். இதனால் அந்த நபர் எண்ணிலடங்கா சோதனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்!!!

செல்வம் நிலைக்க தரித்திரம் தீர



1.வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

2.ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது.
 கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ).

3.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

4.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.